வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் இனி விளம்பரம் வரப்போகுது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான்ஃபிரான்சிஸ்கோ: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் அங்கமான வாட்ஸ்அப்பின் வருமானத்தை பெருக்கும் வகையில் அதிலுள்ள டேட்டஸ் பக்கத்தில் விளம்பரம் செய்யும் வசதியை உருவாக்கி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு விடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விளம்பரம் இல்லா உலகம் என்று எதுவும் இல்லை. எங்கும் விளம்பரம் எதிலும் விளம்பரம் என்றாகிவிட்டது. ஸ்டேட்டஸ் மட்டும்தான் விளம்பரம் இன்றி பார்த்துக்கொண்டிருந்தார்கள். இனி 2020 முதல் அதிலும் விளம்பரம் வரும்.

 

நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வலைதளத்தின் மார்கெட்டிங் மாநாட்டில் இது பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளம்பரம் செய்யும் வசதி வரவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் குளோபல் கரன்சி வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் இனி விளம்பரம் வரப்போகுது!

காலையில் எழுந்த உடனே நாம் முகத்தை கழுவுகிறோமோ இல்லையே, பல் துலக்குகிறோமோ இல்லையோ, காலைக் கடன்களை முடிக்கிறோமோ இல்லையோ, நாம் முதலில் பார்ப்பது நம்முடைய மொபைல் ஃபோனில் பேஸ்புக் பக்கத்தில் வந்திருக்கும் லைக்குகள், கமெண்டுகள் மற்றும் வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் செய்திகள், துணுக்குகள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் தான். இல்லை என்றால் நமக்கு அன்றைக்கு பொழுது விடியாமல் போய்விடும்.

சபாஷ் சாணக்கியா.. வங்கி சேவையை வீட்டுக்கு கொண்டு வரும் ஐ.ஓ.பி.. சந்தோஷத்தில் சீனியர் சிட்டிசன்ஸ்

இன்றைக்கு வாட்ஸ்அப் செயலி நம்மை அந்த அளவிற்கு ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். நாள்தோறும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தில் பணியாற்றிய 55 பணியாளர்களுடன் வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்பட்டது. இன்றைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 45 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் பயன்பாட்டை அறிந்துகொண்ட பேஸ்புக் நிறுவனம் சுமார் 1 லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாட்ஸ்அப் செயலியை வாங்கியது.

 

உலக அளவில் பயன்படுத்தப்படும் இலவச செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பும் ஒன்று. இது தினந்தோறும் புதுப்புது மேம்படுத்தப்பட்டு (Updates) வந்தவண்ணமே இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்பதால் அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர். இலவசமாக பயன்படுத்தி வருவதால் இதன் வருவாய் கேள்விக்குறியாகவே உள்ளது.

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பில் பொய்யான தகவல்களை பரப்புவதை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் அம்சங்களையும் புகுத்தி உள்ளது. அதோடு வாட்ஸ்அப்பில் உள்ள தகவல்களை திருடும் ஹெக்கர்களை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாட்ஸ்அப்பின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் விளம்பரங்களையும் புகுத்த நடவடிக்கை எடுக்கபோவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை வெளியிடப் போகிறது. நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் மார்கெட்டிங் மாநாட்டில் இது பற்றி விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட்டஸ் (Status) பகுதி விளம்பரம் செய்பவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும் பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் செயலியின் வருவாயை அதிகரிக்க முடியும் என்றும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் பக்கத்தில் விரைவில் விளம்பரங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதவுகளுக்கு இடையில் அடிக்கடி விளம்பரம் வருவதுபோல் இனி வாட்ஸ்அப் செயலியிலும் ஸ்டேட்டஸ் பக்கத்தில் இனி விளம்பரங்களையும் அடிக்கடி பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WhatsApp gets Status page Advertisement from 2020

The Facebook decided to gets WhatsApp status page adds from 2020. The add are coming to whatsapp and the intrusion into the popular ad-free mobile messaging platform would begin from status page.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X