மோடி தலைமையிலான 17 நாடாளுமன்றத்தின் முதல் முழு பட்ஜெட் ஜூலை 10ஆம் தேதி தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 10ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ள நிலையில் புதிய நிதியமைச்சர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற ஒப்புதலுடன் புதிய அரசு அமையும் வரை தேவையான நிதிச்செலவீனங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டது.
பெரும்பான்மை பெற்ற பாஜக
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களை வென்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
நிதியமைச்சர் யார்
கடந்த 5ஆண்டு காலமாக நிதியமைச்சராக அருண்ஜெட்லி பதவி வகித்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் பியூஷ் கோயல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு நாளை பொறுப்பேற்க உள்ளது பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். அதன்பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் முடிவு செய்யப்படும். நிதியமைச்சராக ஜெயந்த் சின்கா பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முழு பட்ஜெட் தாக்கல்
புதிய அரசு பதவியேற்ற உடன் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை செயலகத்தில் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டங்கள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான பிரதமர் விவசாயி பாதுகாப்பு நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்காக 75ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய அரசிலும் விவசாயிகள், ஏழைகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பட்ஜெட்டிலும் மாத சம்பளதாரர்கள் மனதை குளிர்விக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மோடி சென்டிமெண்ட்
கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சியை பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இம்முறையும் அதே சென்ட்மெண்ட் பாணியில் ஜூலை 10ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications