பங்குச் சந்தையில் 17.5 கோடி முதலீடு செய்த Amit shah..! க்ளீன் போல்டான 102 பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக வின் தலைவரும் காந்தி நகர் தொகுதியின் எம்பி மற்றும் முக்கியமான துறையின் கேபினட் அமைச்சருமான அமித் ஷா (Amit shah) தன்னுடைய சொத்தில் பாதிக்கும் மேல் பங்குச் சந்தையில் தான் முதலீடு செய்துள்ளார் என்பது ஆச்சர்யமான உண்மை.

 

அமித் ஷா தான் செய்துள்ள முதலீடுகளில் பெரும்பாலானவற்றை நாட்டின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் மற்றும் எல் அண்டு டி போன்ற நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்காற்றியவர், பாஜகாவின் தலைவரான அமித் ஷா. இவரின் திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதலில் தான் பாஜக இத்தனை பெரிய வெற்றியை ருசிக்க முடிந்தது.

இல்லத்தரசிகளை குறிவைக்கும் பெப்ஸி... அடுப்பங்கரையில் அப்பளமாக நுழைகிறது

அமித்ஷா சொத்துமதிப்பு

அமித்ஷா சொத்துமதிப்பு

அமித் ஷா லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்னுடைய சொத்துக்களின் மதிப்பு சுமார் சுமார் 30.49 கோடி ரூபாய் ஆகும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். ஆனால் இவர் தன்னுடைய மொத்த சொத்துக்களில் பாதிக்கும் மேல் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார் என்பது தான் அனைவருக்கும் ஆச்சர்யமாகும்.

பங்குச்சந்தை முதலீடு

பங்குச்சந்தை முதலீடு

இவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார் என்பது சாதாரண பொது ஜனத்திற்கு வேண்டுமானால் ஒரு செய்தியாக இருக்கலாம். ஆனால் அமித்ஷாவின் பங்குச்சந்தை முதலீடு என்பது பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அது ஒரு ஆனந்த அதிர்ச்சியளிக்கும் விசயமாகும். அதுவும் இவர் நாட்டின் முன்னணி பெரு நிறுவனங்களில் (Blue chip stocks) தன்னுடைய பணத்தை அதாவது 58 சதவிதிம் முதலீடு செய்துள்ளது தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

அமைச்சர் அமித்ஷா
 

அமைச்சர் அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய புதிய கேபினட் அமைச்சரவை என்னும் போர்ட்ஃபோலியோவில் (Portfolio) எத்தனையோ திறமை வாய்ந்த நபர்களை அமைச்சராக்கி அழகு பார்க்கலாம். ஆனால் அதில் முக்கியமானவரும், மோடியின் மனசாட்சியான அமித் ஷா தான். இவரை மோடி தன்னுடைய போட்ஃபோலியோவில் சேர்த்ததன் மூலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவருடைய பங்கு அவசியம் என்று உணர்ந்திருப்பார் போல.

மோடி தன்னுடைய போர்ட்ஃபோலியோவில் அமித் ஷாவை சேர்த்துள்ளது ஒரு பக்கம் இருக்கட்டும், அமித் ஷா தன்னுடைய போர்ட்ஃபோலியோவில் என்ன வகையான பங்குகளை வைத்துள்ளால் என்பதைப் பார்க்கலாம் இதை வைத்தே இவரின் திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தீர்க்கமாக சிந்திக்கும் திறன் போன்றவற்றை மதிப்பிட்டு விடலாம்.

139 பங்குகள்

139 பங்குகள்

பங்குச் சந்தையில் இவர் மொத்தம் 193 பங்குகளில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார் என்பது இவர் தாக்கல் செய்துள்ள பிரமானப் பத்திரத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. அமித் ஷா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் படி சுமார் ரூ.17.56 கோடியை பங்குச் சந்தையில் பெரு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. முக்கியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் (Reliance Industries) சுமார் ரூ.2.07 கோடியை முதலீடு செய்துள்ளார். இதற்கு அடுத்ததாக எல் அண்டு டி ஃபைனான்ஸ் பங்குகளில் சுமார் ரூ.1.46 கோடியை முதலீடு செய்துள்ளார்.

என்னென்ன பங்குகள்

என்னென்ன பங்குகள்

இதற்கு அடுத்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான டிசிஎஸ் பங்குகளில் சுமார் ரூ.1.06 கோடியை முதலீடு செய்துள்ளார். மற்றொரு முக்கியமான அம்சம் என்னவெனில் இவர் செய்துள்ள முதலீடு செய்துள்ள பங்குகளில் பெரும்பாலானவை தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி50 (Nifty 50) பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளாகும்.

நஷ்டம் எவ்வளவு

நஷ்டம் எவ்வளவு

இவற்றில் ஹிந்துஸ்தான் யுனிலிவர், விஐபி, ப்ராக்டர் அண்டு கேம்பிள், பாம்பே பர்மா ட்ரேடிங், டோரன்ட் பவர், கோல்கேட் பால்மோலிவ், நெஸ்ட்லே இந்தியா போன்ற பங்குகள் அதிக அளவில் லாபத்தை கொடுத்துள்ளன. அதே போல் எம்ஆர்எஃப், மாருதி சுசுகி, வேதாந்தா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎம் போன்ற பங்குகள் கடும் நட்டத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லாபம் எவ்வளவு

லாபம் எவ்வளவு

அமித் ஷா கடந்த 2017ஆம் ஆண்டில் ராஜ்யசபாவுக்கு போட்டியிடும்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த பங்கு முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.13.17 கோடியாகும். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடப்பு 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான 20 மாத காலகட்டத்தில் இவருடைய பங்கு முதலீட்டின் லாபம் சுமார் ரூ.4.39 கோடி அதிகரித்து மார்ச் மாதத்தில் ரூ.17.56 கோடியாக உயர்ந்து விட்டது.

புதிய முதலீடுகள்

புதிய முதலீடுகள்

மற்றொரு முக்கியமான விசயம், இவர் முதலீடு செய்திருந்த 193 பங்குகளில் 102 பங்குகள் கடும் நட்டத்தையே கொடுத்தன என்பது வருத்தப்படக்கூடிய விஷயமாகும். கடந்த 20 மாதங்களில் 102 பங்குகளின் மூலமாக சுமார் ரூ.1.28 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 20 மாத காலகட்டத்தில் சுமார் ரூ.3.4 கோடியை புதியதாக பங்குகளில் முதலீடு செய்துள்ளார். மேலும் மொத்தமுள்ள 193 பங்குகளில் 32 பங்குகள் மட்டுமே நல்ல லாபத்தை தந்துள்ளன. மீதமுள்ள பங்குகளில் 26 பங்குகள் ஏற்ற இறக்கமில்லாமல் இருந்துள்ளன. ஆனால், 53 சதவிகித பங்குகள் கடும் நட்டத்தையே கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Minister Amit Shah invests in Indian Equity Market worth Rs.17.56 Crore

BJP Leader Amit Shah has a Share market genius and he has been invested in blue chip stocks. He declared his total net worth Rs.30.49 crores. In this, his stock hold holdings portfolio of listed companies are worth Rs.17.56 Crore of his total net worth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X