30 நாளுக்குள்ள Kerala 32 லட்சம் தரணும்! இல்ல மாசம் வட்டி மட்டும் ரூ.21,333 தரணும் பாத்துக்குங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம்: கேரளத்தில் (Kerala) 1960-களிலும், 1970-களிலும் முறையாக பிறப்புச் சான்றுகள் வாங்காதவர்களுக்கு மே 31 என பிறந்த தேதி கொடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத வைத்துக் கொண்டிருந்தார்கள் பள்ளி ஆசிரியர்கள்.

 

அன்று ஆசிரியர்கள் அசால்டாக செய்த இந்த சின்ன தவறு காரணமாக இன்று கேரள அரசுக்கு சுமார் 1,600 கோடி ரூபாயை, அடுத்த ஒரு மாதத்துக்குள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

30 நாளுக்குள்ள Kerala 32 லட்சம் தரணும்! இல்ல மாசம் வட்டி மட்டும் ரூ.21,333 தரணும் பாத்துக்குங்க..!

அப்படி இல்லை என்றால் இந்த 1,600 கோடி ரூபாய்க்கு, மாதாமாதம் 0.6 சதவிகிதம், வட்டி மட்டும் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன பிரச்னை..?

கடந்த மாதம் மே 31, 2019 உடன் கேரள அரசின் பல்வேறு அரசுப் பணிகளில் இருந்து சுமார் 5,000 ஊழியர்கள் ஒரே நேரத்தில் பணி ஓய்வு பெறுகிறார்கள். அனைவரும் 56 வயது நிறைவடைந்து ஒய்வு பெறுபவர்களே. கேரளத்தில் மாநில அரசுப் பணிகளுக்கான ஓய்வு வயது 56 வயது.

இந்த ஓய்வு பெறுபவர்கள் அனைவருக்கும் பழைய பென்ஷன் விதிகள் படி முறையாக ஓய்வு ஊதிய பலன்கள், க்ராஜ்விட்டி என பல பண பாக்கிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த 5,000 பேருக்கு கொடுக்க வேண்டிய ஓய்வூதிய பண பாக்கிகள் மட்டும் சுமார் 1,600 கோடி ரூபாய் வருகிறதாம்.

தற்போது இதைக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது நம் கேரள அரசு. ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரி செய்ய நிதி போதாமல் கூடுதல் செஸ் வரி விதித்து நிலைமையை சமாளித்துக் கொண்டிருக்கிறது.

அதுவும் போதாமல் மசாலா பாண்ட்ஸ் என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களை விநியோகித்தும், கேரள அரசுக்கு தேவையான நிதியைச் சேகரித்து வருகிறது. இப்படி கேரள அரசு தன் அன்றாட செயல்பாடுகளைச் செய்யவே நிதி பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென 1,600 கோடி ரூபாய் தன் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் பதறுமா..? பதறாதா..?

 

அதோடு இந்த ஜூன் 2019-க்குள் கேரள அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய 1,600 கோடி ரூபாய் ஓய்வூதிய பண பாக்கிகளை முறையாகக் கொடுக்கவில்லை என்றால், வட்டி கொடுக்க வேண்டி வருமாம். அதனால் அரசுக்கு கூடுதல் நிதி சுமையும் அதிகரிக்கும் என்பதால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறாராம் பினராய் விஜயன்.

இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதற்கு மேலே சொன்னது போல 1960 மற்றும் 1970-களில் பள்ளிக் கூடங்களில் பிறந்த தேதியை மே 31 என நிரப்பியது ஒரு முக்கியக் காரணம் என இப்போது தான் கண்டு பிடித்திருக்கிறது கேரள அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala has to pay 1600 crore in june or it has to pay with interest for 1600 crore

Kerala government has to pay 1600 crore in next one month or else it has to pay interest for 1600 crore
Story first published: Saturday, June 1, 2019, 16:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X