கோவாவை கலக்கும் அரசு மொபைல் ஆப் டாக்ஸி.. சிதறடிக்க முயலும் அரசியல் வாதிகள்.. கலக்கத்தில் மக்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனாஜி : கோவா என்றாலே நமக்கெல்லாம் முதலில் நியாபகத்திற்கு வருவது அழகான கடற்கரைகள், அதோடு அந்த அழகில் மயங்கி காண வரும் வெளி நாட்டவரும், அங்கு மலிவான கிடைக்கும் சரக்குகளுக்கும் என்றுமே நமது இளைஞர் பட்டாளம் அடிமைதான்.

 

ஆமாப்பு அந்த கோவாலில் சுற்றுலா செல்லும் மக்களின் வசதிக்காகவும், கோவாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க வகையிலும் அரசு சார்பில் வாடகைக் கார் சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டது.

இந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும், கோவாவில், சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, தனியார் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு எதிராகக் அரசு மொபைல் ஆப் டாக்ஸியை களமிறக்கியது அம்மாநில அரசு. இது நல்ல முறையில் கைகொடுத்ததோடு மக்களும் பயனடைந்ததாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சில சமூகவாதிகள் பிரிவினரிக்கிடையே நிலவி வரும் பிரச்சனையால் சுற்றுலா வரும் மக்கள் பாதிக்கப்படுவதோடு, டாக்ஸி டிரைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

அரசு சார்ந்த மொபைல் ஆப் சர்வீஸ்

அரசு சார்ந்த மொபைல் ஆப் சர்வீஸ்

கோவா மைல்ஸ் என்ற வாடகைக் கார் வழங்கும் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அந்த மாநில அரசே கடந்த ஆண்டு தொடங்கியது. இதனை அறிமுகம் செய்துவைத்த அன்றைய முதல்வர் பாரிக்கர் அரசின் வாடகைக் கார் சேவையை, அதாவது ஓலா போன்ற தனியார் சேவையை போல, இந்த ஆப்கள் மூலம் பதிவு செய்து கொள்ளும் சேவையை தொடங்கினார். இதன் மூலம் டாக்ஸி டிரைவர்கள் தனியார் நிறுவனம் மூலம் கிடைக்கும் லாபத்தைவிட, இரண்டு மூன்று மடங்கு அதிக லாபம் பெறலாம் என்று கருத்தப்பட்டிருந்தது.

டாக்ஸி டிரைவர்களுக்கு –மக்களுக்கும் பிரச்சனை

டாக்ஸி டிரைவர்களுக்கு –மக்களுக்கும் பிரச்சனை

கோவா மாநில அரசால் நிறுவப்பட்ட கோவா மைல்ஸ் சேவை நல்லபடியாக போய்க் கொண்டிருந்ததாலோ என்னவோ, சில சமூக விரோதிகளுக்கு பிடிக்காததால் டிரைவர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சனையை தூண்டி விடுவதாகவும் கோவா அரசு கூறியுள்ளதாம். அட ஆமாப்பு ஒரு நல்ல விஷயம் நடந்த தான் நம்ம மக்களுக்கு பிடிக்காதே. ஆமாங்க அவர்கள் சுற்றுலா வரும் மக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, கோவாமைல்ஸ் டாக்ஸியின் டிரைவர்களுக்கும் தொல்லை ஏற்படுத்துகின்றனராம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் தொல்லை
 

தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் தொல்லை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ Churchill Alema ஒரு ரிசார்ட்களில் கோவா மைல்ஸ் டாக்ஸிகள் மீது கற்களை எறிந்து கார்களை சேதப்படுத்தியோடு, அந்த டாக்ஸிகளை அங்கு நிறுத்தக் கூடாது எனவும் கலாட்டாவில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டாக்ஸி டிரைவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனராம்.

உள்ளூர் டாக்ஸிகள் பாதிப்பு

உள்ளூர் டாக்ஸிகள் பாதிப்பு

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ Churchill Alema கூறுகையில், இந்த கோவா மைல்ஸ் டாக்ஸிகளால் உள்ளூர் டாக்ஸிகள் மிக பாதிப்படைந்துள்ளதாகவும், அது அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை பாதிப்பதாகவும் கூறியுள்ளராம்.

கோவா மைல்ஸ்

கோவா மைல்ஸ்

கோவா மைல்ஸ் டாக்ஸி அமைப்பு, கோவா சுற்றுலா அபிவிருத்தி கார்ப்பரேஷன் மூலம் உருவாக்கப்பட்டு அங்கிகரீக்கப்பட்ட வணிக முயற்சியாகும். இது யாருடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதல்ல. இது கோவா டாக்ஸி உரிமையாளர்களுக்கும், கோவாவிற்கு சுற்றுலா வரும் மக்களுக்கும் உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். அதோடு மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றே நாங்கள் நினைக்கிறோம் என்று கோவா மைல்ஸ் அமைப்பு கூறியுள்ளதாம்,.

தவறாக புரிந்து கொண்ட மக்கள்

தவறாக புரிந்து கொண்ட மக்கள்

கோவா அரசால் நிறுவப்பட்ட கோவா மைல்ஸ் அனைவருக்கும் நல்லதொரு திட்டம். இதன் மூலம் அனைவருக்கும் நன்மையே கிடைக்கும் திட்டம் தான். இது ஒரு சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை கொள்ளக்கூடிய விஷயமாகவே உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளதாம்.

மிரட்டும் டாக்ஸி கட்டணங்கள்

மிரட்டும் டாக்ஸி கட்டணங்கள்

முன்னர் சுமார் 10,000க்கும் மேற்பட்ட கோவா டாக்ஸி டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்தாகவும், சுற்றுலா வரும் மக்களை கட்டணங்களால் மிரட்டியதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது போன்ற தவறுகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளன. அதோடு கட்டணங்களை அதிகமாக வசூலிக்க கூடாது என்பதற்காக தான் இது போன்ற மீட்டர் சிஸ்டம்களை கொண்டு வந்துள்ளோம். இது நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. இதை பிடிக்காத சிலர் செய்யும் வேலை தான் இந்த போராட்டங்கள். இது ஆயிரக்கணக்கான சுற்றுலா வந்துள்ள மக்களை பாதிப்பதோடு, டாக்ஸி டிரைவர்களையும் பாதிக்கிறது.

வருடத்துக்கு 7 மில்லியன் பயணிகள்

வருடத்துக்கு 7 மில்லியன் பயணிகள்

கோவாவிற்கு வருடத்துக்கு சுமார் 7 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களில் அதிகம் பேர் போக்குவரத்து வசதிகளால் தான் அதிகப்படியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆக அது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவே இந்த கோவா மைல்ஸ் தொடங்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

அரசு மொபைல் ஆப்புக்கு எதிராகும் அரசியல் களங்கள்

அரசு மொபைல் ஆப்புக்கு எதிராகும் அரசியல் களங்கள்

சில அரசியல் ஆர்வலகளான டாக்ஸு டிரைவர்களாகட்டும், அல்லது அரசியல் ஆதாயங்களை உடையவராகவே இருக்கட்டும், அவர்கள் இந்த மொபைல் அடிப்படையிலான இந்த ஆப்களுக்கு எதிராக தர்கம் செய்து வருகின்றன. அதிலும் panchayat of Anjuna-Caisua பஞ்சாயத்துகான எல்லைகளில் இந்தக் கோவா மைல்ஸ் கார்கள் வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராமத்தை சேர்த்த டாக்ஸி டிரைவர்களுக்கு பாதிப்பு

கிராமத்தை சேர்த்த டாக்ஸி டிரைவர்களுக்கு பாதிப்பு

இது குறித்து அரசு தரப்பு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த கோவை மைல்ஸ் டாக்ஸி அமைப்பானது பல நூறு கிராமப்புறங்களில் உள்ள டிரைவர்களின் வாழ்வாதரங்களூம் அடங்கியுள்ளது. அதோடு இந்த கிராமங்களும் இந்த அடிப்படையில் பயன் பெறுகின்றனர். அதோடு தற்போது பயன் பாட்டில் உள்ள பல டாக்ஸி டிரைவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படுகிறது. அதோடு இவ்வாறு பஞ்சாயத்துக்களால் தீர்மானம் செய்யபட்ட இந்த விதிமுறைகளால் வெகுவாக பாதிக்கபடுவது டாக்ஸி டிரைவர்களே என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: goa கோவா
English summary

Goa's tourist taxis at taxi war again with app-based cabs

The recurring some problems between tourist taxi drivers versus operators of the state's only app-based taxi service, Goamiles, saw a sudden spurt over the last 24 hours. Also several Goamiles taxi drivers being threatened.
Story first published: Sunday, June 2, 2019, 18:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X