என்னாது பழைய புத்தகத்தில் ரூ.37 லட்சம் லாபாமா.. கலக்கும் இங்கிலாந்து ஆசிரியர்.. ஆன்லைன் வர்த்தகமாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து : Elliott Stoutt என்ற 26 வயது இளைஞர், இங்கிலாந்து நாட்டில் உள்ள Brighouse in West Yorkshire மெட்ரோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகவும், தலைவராக உள்ளராம். இவர் பள்ளியில் வேலை செய்த நேரம் போக மீத நேரத்தில் போர்டு விளையாட்டுகள் குறித்த சாதனங்களை விற்று வந்தாராம்.

 

அந்த பிசினஸ் மிகவும் போரடித்து போகவே ஆன்லைனில் பழைய புத்தகங்களை வாங்கி விற்க ஆரம்பித்துள்ளார். அதுவும் ஒரு டைம் பாஸுக்கு செய்து வந்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் பிசினஸ் பிச்சிகிட்டு போகவே மனுசன் பேஸ் பேஸ் என்று, இது நல்ல பிசினஸ் ஆ இருக்கே என்று இதில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்தாராம். ஆமாப்பு மனுசன் இப்பல்லாம் வீட்டுலேயே தங்கறதே இல்லயாம். ஆமாப்பு தூக்கத்துல கூட பழைய புத்தகமா கனவுல வருதாம்.

சுமார் 16% லாபம்

சுமார் 16% லாபம்

ஒரு பழைய புத்தகத்தை 2.50 பவுண்டுக்கு வாங்கி (இந்திய ரூபாயில் சுமார் 220.60 காசுகள்), அதை ஆன்லைனில் சுமார் 40 பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.3529) விற்றுள்ளார். (ஓரு பவுண்டு - ரூ.88.24)அட இது நம்ம சம்பளத்த விட அதிகமா இருக்கே. இதையே கண்டினியூவ் பண்ணாலாமா? என்று களத்தில் குதித்துள்ளார் மனுசன். இப்போ எல்லாம் ஒரு புத்தக கடைய விடுறது இல்லையாம். அதுலா எதாவது நல்ல புத்தகங்கள் இருக்குமான்னு தேட ஆரம்பிச்சிட்டாராம்.

சனிக்கிழமை பழைய புத்தக கடையில் ஆஜர்

சனிக்கிழமை பழைய புத்தக கடையில் ஆஜர்

மனுசனுக்கு இப்பதான் புரிஞ்சுருக்காம். தான் பள்ளியில் வாங்கும் சம்பளத்தினை விட இதில் அதிக வருமானம் என்று, தற்போது சனிக்கிழமையானால் போதுமாம், கடைக்காரர் திறக்கிறாரோ இல்லையோ. பழைய புத்தகக்கடையில் ஆஜராகி விடுகிறராம். ஆமாப்பு கடையில் நேரத்திற்கு சென்று கடைக்காரர் வரும் வரை காத்திருந்து புத்தகங்களை வாங்கி வருவாராம்.

பார்சலுக்கு அமேசான் சர்வீஸ்
 

பார்சலுக்கு அமேசான் சர்வீஸ்

இதில் என்னவொரு கவனிக்க வேண்டிய விஷயமெனில், ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, புத்தகங்களை அனுப்ப அஞ்சல் மற்றும் அமேசானின் போஸ்டல் சர்வீஸையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அமேசான் பார்சல் சர்வீஸ் மிகுந்த பயன் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

செலவுக்கே சரியாக இருக்கிறது

செலவுக்கே சரியாக இருக்கிறது

அதிக பணம் கிடைக்கும் புத்தகங்களை தேடுவதற்கும் ஒரு தனி டிப்ஸ் வைத்திருக்கிறாராம் மனுசன். ஆமாங்க இது குறித்து Elliott Stoutt கூறுகையில், எனக்கு கூடுதலாக பணம் தேவைபடுகிறது. அதற்காக எனது பொன்னான நேரத்தை பயன்படுத்தி வருகிறேன். வேலை நேரம் போக இந்த மாதிரியான புத்தகங்களை தேடுவதில் எனது கவனத்தை செலுத்துவேன். தற்போது எனது சம்பளம் வாடகை, என் கார் பில், எனது உணவுக்கான பில்லுக்காக போதுமானதாக இருக்கிறது. ஆனால் எதுவும் மிச்சப்படுத்த முடியவில்லை. அதனால் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று அலைகிறாராம் மனுசன்.

பல தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்த Gary Vaynerchuk

பல தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுத்த Gary Vaynerchuk

Gary Vaynerchuk என்ற ஒரு பெலாரஷ்யன் அமெரிக்கா தொழிலதிபரும், எழுத்தாளருமான, மிக நல்ல பேச்சாளரும் மற்றும் இனைய ஆளுமையும் கொண்ட அவரிடம், முழுமையாக ஆன்லைனில் பொருட்கள் விற்பனை குறித்தும் பலவற்றை கற்றுக் கொண்டதாகவும் Elliott கூறியுள்ளார். அதை இன்னும் இனையதளங்களில் படித்தும், இதற்கு முன்பு என்னனென்ன தவறுகளை செய்தோம் என்றும் அதையும் ஆராய்ந்து தற்போது பார்த்து ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருகிறாராம்.

ஸ்கேன் செய்து ஆப்பில் பதிவேற்றம்

ஸ்கேன் செய்து ஆப்பில் பதிவேற்றம்

இதன் பின்னர் தான் தெரிந்தது. ஒரு முறை ஒரு புத்தகத்தை விற்று விட்டால், மறுமுறை அதே புத்தகத்தை வாடிக்கையாளருக்கு கொடுக்க முடிவதில்லை. இதனால் புதிய ஐடியா ஒன்றை செயல்படுத்த ஆரம்பித்தாராம். ஆமாப்பு புத்தகங்களை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டாராம் Elliott Stoutt, அதோடு போர்டு கேம்கள் , பொம்கைகள் குறித்தவற்றையும் தனக்கு தெரிந்தவாறு வரலாற்றையும் சேர்த்து, அதை ஒரு வீடியோவாக உருவாக்கியுள்ளார். அதன் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பல வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார்.

ஆப்பில் முக்கிய துறைகள்

ஆப்பில் முக்கிய துறைகள்

இதற்கான தனி ஒரு ஆப்பையும் உருவாக்கியுள்ளார். அதற்காக தனி பார் கோடையும் உருவாக்கியுள்ளார். ஆமாப்பு யாராவது அந்த புத்தகத்தை வேண்டுமென்று கேட்டால், பணத்தை மட்டும் கட்டிவிட்டால் போதும். பார் கோடை வைத்து இருக்கும் இடத்திலேயே அனைத்தையும் படித்துக் கொள்ளுஇம் படி கொடுத்துள்ளார் Elliott Stoutt. அதுமட்டும் அல்ல. கல்வி, வரலாறு, போட்டோகிராபி, சமையல் குறித்தான புத்தகங்கள், அதோடு பல முக்கிய புத்தகங்களையும் ஸ்கேன் செய்தும் வைத்துள்ளார்.

உங்கள் வாழ்க்கையே மாற்றலாம்

உங்கள் வாழ்க்கையே மாற்றலாம்

இந்த பழைய புத்தகங்கள் குறித்து Elliott Stoutt கூறுகையில், புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்து அவற்றை பராமரிப்பது மிகக் கடினாமான விஷயம். ஆனால் அதற்காக அவற்றை விடவும் முடியாது. ஒவ்வொரு புத்தகங்களாகும் வைரங்களாகும். உங்களுக்கு அது தெரியாது. உங்களுக்கே தெரியாமல் அது ஒரு நாள் உங்கள் வாழ்க்கையே மாற்றலாம் என்றும் மனுசன் புகழ்ந்து தள்ளி இருக்கிறாராம் பழைய புத்தகங்கள் பத்தி.

ஆன்லைன் பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்

ஆன்லைன் பிசினஸில் ஜெயிக்க டிப்ஸ்

Elliott Stoutt ஆப்பில் தற்போது சுமார் 60 மில்லியன் பொருட்கள் உள்ளனவாம். அதோடு உலகில் முன்னனி புத்தக விற்பனையாளர் ஆக வேண்டும் என்பதே இவரின் கனவாம். அதோடு Elliott தற்போது ஆன்லைனில் எழுதவும் ஆரம்பித்துள்ளராம். அட ஆமாப்பு ஆன்லைனில் எப்படி வெற்றிகரமாக வர்த்தகத்தை நடத்தலாம் , எப்படி ஜெயிக்கலாம் என்றும் டிப்ஸ் கொடுத்து எழுதி வருகிறாராம்.

பிசினஸால் நஷ்டமே

பிசினஸால் நஷ்டமே

இவ்வாறு பல பொருட்களை ஆன்லைனில் கொடுத்த போது நஷ்டம் தான் அதிகாமானதாம். இதன் மூலம் பல தற்போது முதன் முதலாக கொடுத்தது போலவே தேடிப்பிடித்து முக்கிய புத்தகங்களையே பதிவிட ஆரம்பித்துள்ளார் Elliott. ஆமாங்க இப்பல்லாம் கண்டத போடுறது இல்ல பாத்து பாத்து தான் ஒவ்வொன்றையும் பதிவிறக்கம் செய்கிறராம்.

ஒவ்வொரு டவுணுக்கும் 6-7மணி நேரம் தேடுதல் வேட்டை

ஒவ்வொரு டவுணுக்கும் 6-7மணி நேரம் தேடுதல் வேட்டை

மீண்டும் சனிக்கிழமைகளில் புத்தகம் தேடுதலுக்காக ஒவ்வொரு டவுனுக்கு தேடி அலைய ஆரம்பித்ததோடு, ஒவ்வொரு டவுனுக்கும் 6 முதல் 7 மணி நேரம் வரை செலவிட்டுள்ளார். இவ்வாறு புத்தகங்களை தேடுவதற்கும் விற்பதற்கும் 10 மணி நேரங்களுக்கு மேல் செலவனாதாம். அதோடு அதை கம்பியூட்டரில் ஏற்றி விலையை நிர்ணயிப்பதற்கும் அரை மணி நேரங்கள் செலவானதாம். அதோடு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை விலையை மாற்றியும் அமைத்து வந்துள்ளார் Elliott.

ஒன் மேன் ஆர்மியாக மட்டுமே செயல்பட்டு வருகிறேன்.!

ஒன் மேன் ஆர்மியாக மட்டுமே செயல்பட்டு வருகிறேன்.!

இந்த நிலையிலும் Elliott Stoutt ஒன் மேன் ஆர்மியாக மட்டுமே செயல்பட்டு வருகிறாராம். அட ஆமாங்க எந்த வித செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, அது புத்தகங்கள் வாங்குவதோ விற்பனையோ, குறிப்போ எதுவானாலும் நான் மட்டுமே செயல்பட்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளாராம். இந்த நிலையில் எனக்கு மாதம் 1200 - 2000 பவுண்டுகள் வரை கிடைத்தது என்றும் பெருமைப்பட்டுள்ளாராம் அப்பு.

குறைந்த லாபத்திற்கு இலக்கு

குறைந்த லாபத்திற்கு இலக்கு

தற்போதெல்லாம் ஒரு புத்தகங்களை வாங்குகிறேன் என்றால் புத்தகத்திற்கு ஏற்றாற்போல் லாபத்தை நிர்ணயிக்கிறாராம். சில வற்றிற்கு 5 பவுண்டுகள், சிலவற்றீற்கு 100 பவுண்டுகள் என பல வாறு பொருட்களுக்கு ஏற்றவாறு லாபத்தை நிர்ணயிக்கிறாராம். ஆனால் மாதத்திற்கு புத்தகங்களை வாங்க சராசரியாக 400 பவுண்டுகளை செலவிடுகிறாராம் Elliott.

இளைஞர்களுக்கு ஆலோசனை எப்படி சம்பாதிக்கலாம்?

இளைஞர்களுக்கு ஆலோசனை எப்படி சம்பாதிக்கலாம்?

அதோடு முன்னர் ஒரு வெறும் 50 பவுண்டுகளை மட்டுமே சம்பாதித்து வந்த Elliott. அதிகமாகவே சம்பாதித்து வருகிறாராம். அது மட்டும் இல்லங்க இது வர இதன் மூலம் 42,000 பவுண்டுகளை சம்பாதித்துள்ளராம். அட நிஜமாதாங்க இந்தியா ரூபாயில் சுமார் 37 லட்சம் ரூபாயாகும். அது மட்டும் இல்லங்க, தற்போது படித்து வரும் இளைஞர்களுக்கு பகுதி நேரமாக எவ்வாறு சம்பாதிக்கலாம் என்று உதவி வருகிறாராம். வாத்தியார் இல்லையா அதான் பய புள்ள உதவி எல்லாம் பண்ணுது நாலு நல்ல விஷயம் நடந்த, நாட்டுக்கு நல்லது தானே நடக்கட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Teacher made an extra RS.37 lakhs in the past YEAR by selling second-hand books online

A teacher has revealed how he made £42,000 in a year selling second hand books online. His name Elliott Stoutt, 26 year old, from Brighouse in West Yorkshire, spends just 10 hours a week on his profitable hobby
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X