என்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..? காம்ரெட் China சார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங் : உலகின் மிகப் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் (China) சின்ன பிள்ளைகள் சண்டை போடடுவதை போல் சண்டை போட்டுக் கொள்கின்றன. அதுவும் அடிதடி மட்டும் தான் இல்லை என்ற நிலை. ஆனால் போகிற போக்கினை பார்த்தால் அதுவும் கூட வந்துவிடும் போல் இருக்கிறதோ என்று இரு நாட்டு மக்களும் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.

 

ஆமாப்பு சீனாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதிச்சா? சீனா உடனே அதனோட கடமைக்காக அமெரிக்காவுக்கு அதிக வரிய விதிக்கிறது. இந்த நிலையில் மாறி மாறி வரி விதிக்கிறது மட்டும் இல்லாமா? இப்ப அந்த கோபம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் தற்போது திரும்பியிருக்கிறது.

ஆமாப்பு இந்த இரு நாட்டு சண்டையால் பாதிக்கப்படுவதோடு உண்மையிலேயே இந்த இரு நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அதிலும் பல்லாயிரம் கோடிகளை முதலீட்டை செய்து விட்டு அடுத்து என்ன பிரச்சனை வருமே என்ற கவலையில் இருக்கின்றன. இந்த நிலையில் சீனாவின் வெள்ளை அறிக்கை சற்று நிம்மதியை கொடுத்தாலும் ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லையே என்ற பயமும் நிலவி வருகிறது.

அமெரிக்க Visa வேணுமா? ஏன் எதுக்குன்னு கேக்காம ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் கொடு! படுத்தும் ட்ரம்ப்

வெள்ளை அறிக்கையில் சமாதானம்!

வெள்ளை அறிக்கையில் சமாதானம்!

இந்த இரு நாடுகளும் பிரச்சனைகளை வெளியே காட்டிக் கொள்ளவிட்டாலும், உண்மையை எத்தனை நாளைக்கு தான் மறைக்க முடியும். ஆக தற்போது இந்த இரு நாடுகளும் சமாதானம் பெற நினைக்கின்றன. அதிலும் தற்போது சீனா தான் வர்த்தக போரை ஒரு போதும் விரும்பவில்லை என்று வெள்ளை அறிக்கையும் கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைகள் சாத்தியமற்றது

அமெரிக்காவின் கோரிக்கைகள் சாத்தியமற்றது

எனினும் ஒரு புறம் சீனா சமாதான புறாவை தூது விட்டாலும், மறுபுறம் அமெரிக்காவின் உயர்மட்ட கொள்ளைகள் ஒரு போதும் சாத்தியமாகாத விஷயம். அது சீனாவின் இறையாண்மையில் தலையிடுவதாகவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த செயல் சீனாவின் மீது அதிக அழுத்தத்தினை கொடுக்கிறது என்றும், இதனாலேயே பேச்சு வார்த்தை ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடிவடைகிறது என்றும் அறிவித்துள்ளது சீனா.

கனவு பலிக்காது
 

கனவு பலிக்காது

இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் அழுத்ததைக் கொடுப்பதால் சீனா அடி பணிந்து விடும் என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த பகல் கனவு பலிக்காது. இவ்வாறு வர்த்தக பிரச்சனையை தொடர்ந்து கொடுத்தால் சீனா அடிப்பணிந்து விடும் என்று நினைக்க கூடாது. அது ஒரு போதும் நடக்காது என்றும் வெள்ளை அறிக்கையில் தடாலடியாக கூறியுள்ளதாம் சீனா. அட ஆமாப்பு வம்பு சண்டைக்கு போக மாட்டோம், ஆனா வந்த சண்டைய விட மட்டோம் என்கிறதாம் சீனா.

கடுப்பான சீனா

கடுப்பான சீனா

அமெரிக்கா சீனாவிடையே இதுவரை 11 சுற்று பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம். ஆமாப்பு 11 தடவையும் பேச்சு வார்த்தை பொய்த்துக் போகவே கடுப்பான சீனா, பின்னர் தான் இந்த வெள்ளை அறிக்கையே வெளியிட்டிருக்கிறது. நாங்கள் பேச்சு வார்த்தைக்குத்தான் அடி பணிவோம் எனவும், ஒரு போதும் இந்த மிரட்டலுக் கெல்லாம் பயப்பட மாட்டோம் எனவும் அறிவித்துள்ளதாம் சீனா.

அதிக கட்டணங்களால் அமெரிக்கா வளர்ச்சி அடையவில்லை

அதிக கட்டணங்களால் அமெரிக்கா வளர்ச்சி அடையவில்லை

அமெரிக்காவின் இந்த கட்டண அதிகரிப்பால் அமெரிக்கா பெரிதாக வளர்ச்சியடைய வில்லை. மாறாக பல சீர்கேடுகளைத் தான் சந்தித்துள்ளது. அதோடு பேச்சு வார்த்தகைகளின் போது சீனா தான் ஒப்பந்தத்திலிருந்து பின் வங்கியது என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஆனால் சீனாவின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் சரிப்பார்ப்பு இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. அதுவும் மிரட்டும் விதமாக இருக்கிறது. இதனாலேயே சீனா பின் வாங்கியதாகவும் சீனா அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சரிபார்ப்பு வேண்டுமாம்

ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சரிபார்ப்பு வேண்டுமாம்

அமெரிக்கா சீனா ஒப்பந்தம் நடைமுறையில் செயல்படுத்துவதை சரிபார்க்க வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா கோரிக்கை வைக்கிறது. அது எப்படி சாத்தியமாகும். சீனாவின் தொழில்நுட்ப மாற்றுக்கள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை காப்பு குறித்த ஒப்பந்தங்களை சீனா எப்படி நடைமுறைப்படுத்துகிறது என்பதை அமெரிக்கா கவனிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறது. இதனால் தான் ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் சாத்தியமில்லாமலே போகிறது. அது எப்படி சாத்தியமாகும் என்று அமெரிக்க யோசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது சீனா.

அமெரிக்காவின் தந்திரம்

அமெரிக்காவின் தந்திரம்

அமெரிக்கா இப்படியொரு தந்திரமான வேலையை செய்ய நினைக்கிறார் டிரம்ப். எப்படி ஒப்பந்தம் முடிவுக்கு வரும். இது போன்ற கோரிக்கைகள் ஒரு போதும் முடிவுக்கு கொண்டு வராது. மேலும் இது இரு நாடுகளுக்கு பிரச்சனையை தான் அதிகரிக்கும் என்றும் பொருமியுள்ளது சீனா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China and Mexico Signal Willingness to Step Up Trade Talks With U.S

A government policy paper released on Sunday also indicated that Beijing was willing to continue negotiations with Washington on the tit-for-tat trade dispute.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X