எச்சரிக்கை.. மோடி பெயரில் மோசடி. பல லட்சம் லாபம் பார்த்த ஐ.ஐ.டி மாணவர் கைது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜஸ்தான் : நம்ம ஊர் மக்கள் தான் இலவசம் என்றாலே ஓடிப் போய் நிற்பார்களே. ஆமாப்பு அதுவும் மோடியின் பெயரில் இலவசம் என்றால் சும்மாவா? இந்த பலவீனத்தை பயன்படுத்தி சம்பாதித்திருக்கிறார் நம்ம டெல்லி ஐ.ஐ.டி மாணவர் ஒருவர்.

ஆமாப்பு டெல்லியில் புகழ்ப்பெற்ற ஐஐடியில் பட்டம் பெற்றவர் தான் ராகேஷ் ஜங்கீத், 23 வயதான இவர் ராஜஸ்தானின் புன்லோட்டா மாவட்டத்தில் வசித்து வருகிறாராம்.

 எச்சரிக்கை.. மோடி பெயரில் மோசடி. பல லட்சம் லாபம் பார்த்த ஐ.ஐ.டி மாணவர் கைது

இவர் தனக்கு தெரிந்த வித்தைகளை வைத்துக் கொண்டு, மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' லோகோவினையும் பயன்படுத்தி ஒரு வெப்சைட்டினையே உருவாக்கியுள்ளார்.

அது மட்டுமல்ல அந்த வெப்சைட்டில் பதிவு செய்தால் அரசின் இலவச லேப்டாப் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் லட்ச கணக்கானோர் பதிவு செய்து ஏமாந்தும் உள்ளனர். இதன் மூலம் ராகேஷ் இது வரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை இந்த வெப்சைட் மூலமாக திருடியும் வைத்துள்ளாராம்.

மேலும் இந்த கில்லாடி ரங்கா அரசு வலைத்தளங்களில் வருவதை போல, அனைத்து தொழில்நுட்பங்களையும் கையாண்டு, மிக துல்லியமாகவும் டெக்னிக்காகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

எப்படின்னு கேட்கிறீங்களா? எப்படி என்றால் பதிவு செய்தவுடன் அரசு சார்பில் உடனடியாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி போலவே பதிவு செய்த செல்போன்களுக்கு ஓடிபி எண்ணையும் மொபைல் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு இந்த வெப்சைட்டில் 'புதிய அரசாங்கத்தின் மறு தேர்வுக்கான இலவச லேப்டாப் அரசுத் திட்டம் என போடப்பட்டு பார்ப்பதற்கு உண்மையான வெப்சைட் போன்றும் உருவாக்கியுள்ளாராம் இந்த பலே கில்லாடி.

அதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில், அவரின் புகை படத்தினையும் உபயோகித்து www.modi-laptop.wishguruji.com, http://modi-laptop.sarkaari-yojana.in, www.modi-laptop.wish-karo-yar.tk பல இணையதளங்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயமும் தேடி வந்துள்ளார் இந்த கில்லாடி பட்டதாரி.

இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் தகவல் கிடைத்து, இதன்மூலம் ராகேஷை சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது தான் கைது செய்யப்பட்டுள்ளராம். மேலும் அவரிடம் இருந்த லேப்டாப், எலெக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனராம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த செய்தி தெரிந்த 48 மணி நேரத்துக்குள்ளேயே 1.5 மில்லியன் மக்கள் இந்த இணையதளத்த பார்த்திருக்கிறாங்களாம்.

இதுல என்ன கொடுமைன்னா? இந்த கில்லாடி கூகுள் பக்கங்களில் கூட விளம்பரங்களை கொடுத்திட்டு வந்திருக்கார். அதோட தனது இணையதளத்துல விளம்பரங்களையும் போட்டு காசு பார்த்துள்ளார். அதுமட்டும் இல்லீங்க, அந்த இணையதளத்துள பதிவு செய்தால் இலவச லேப்டாப் என கூறியிருந்ததால் சுமார் 20 மில்லியன் பேர் இதுவரை பதிவு செய்திருக்காங்களாம்.

அந்த 20 மில்லியன் மக்களோட பர்சனல் டேட்டாவையும் எடுத்து டேட்டா நிறுவனங்களுக்கு காசு பார்த்துள்ளார் இந்த கில்லாடி ராகேஷ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IIT post graduate arrested for offering free laptops under PM Modi's name

IIT graduate was arrested from Rajasthan for running a fake website named 'Pradhan Mantri Free Laptop distribution Scheme-2019, with PM Narendra modi's picture to earn money from website traffic as well as get personal data of visitors to misuse.
Story first published: Monday, June 3, 2019, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X