அடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அத்தகைய வளர்ச்சிக்கு மேலும் ஊன்றுகோலாக புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்பு, புதியதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்ற ரவி சங்கர் பிரசாத் 5ஜி பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளாராம்.

 

ஆமாப்பு அதில் இன்னும் நூறு நாட்களில் 5ஜி சேவை குறித்த சோதனையை தொடங்கவுள்ளதாம். கடந்த திங்கட் கிழமை பொறுப்பேற்ற பின்னர் ரவி சங்கர் பிரசாத் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளர். இதனால் தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி செல்லலாம் என்றும் கருதப்படுகிறது.

அடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு!

அதோடு ஸ்பெக்டரம் குறித்த ஏலம் நடப்பு காலாண்டில் நடக்கலாம் என்றும் கூறியுள்ளராம். கடைசியாக ஸ்பெக்டரம் ஏலம் கடந்த 2016ல் ஏலம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ரவி சங்கர் பிரசாத் தொலைத் தொடர்பு துறை மட்டும் அல்ல தகவல் தொழில் நுட்ப துறையும் மத்திய அமைச்சராக திகழ்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு முன்னுரிமை அடிப்படையில் 5 லட்சம் வைபை ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் ஹாட் ஸ்பாட்கள் தேவைப்படும் இடங்களுக்கு சென்றடைய முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஒரு லட்சம் டிஜிட்டல் கிராமங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதோடு ஐ.டி துறையையும் சேர்த்து தொலைத் தொடர்பு சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளாராம்.

அதோடு விரைவில் தொலைத்தொடர்பு துறை விரைவில் பிராண்ட்பேன்ட் துறை broadband readiness index குறியீட்டை மாநிலங்களுக்கு தரவரிசை படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார் ரவி சங்கர் பிரசாத்.

Jet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்! என்ன தப்பு..?

மோடி அரசில் புதிதாக பதிவியேற்றுள்ள ரவி சங்கர் பிரசாத்துக்கு இந்திய தொலைத்தொடர்பு துறையில் மட்டும் அல்ல. 5G சோதனைக்கு ஒப்பந்தம் போட்டுள்ள Huawei யில் நடக்கும் பிரச்சனை குறித்தும் தீவிரமாக அலச வேண்டிய கடைமையும் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அதோடு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் புத்தியிர் பெறுவதும் அவரது கையில் தான் உள்ளது என்றும், இது ரவி சங்கரின் முக்கிய பணியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New telecom minister says Govt will initiate 5G trials in 100 days

The new Telecom & IT minister Ravi Shankar Prasad has set a deadline of 100 days to begin 5G trials in India
Story first published: Monday, June 3, 2019, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X