சீனாவின் ஹூவாவே மீது கண் வையுங்கள் - பிரிட்டனை எச்சரிக்கும் ட்ரம்ப்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: சீனாவின் ஹூவாவே நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை ஐரோப்பிய யூனியனிலும் இங்கிலாந்திலும் களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள சூழ்நிலையில், இவ்விசயத்தில் மிகவும் கவனமுடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 

இது குறித்து பிரிட்டன் பதிலளிக்கையில் நாங்கள் இன்னும் ஹூவாவே நிறுவனத்தின் பங்களிப்பு குறித்து முழுமையாக பரிசீலிக்கவே இல்லை. ஒருவேளை அப்படி வரும் பொழுது அவ்வகையான தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நாங்கள் மிக கவனமுடனும் கட்டுப்பாட்டுனும் நடந்து கொள்வோம் என்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

ஹூவாவே நிறுவனத்தை தன் கையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவின் வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் தங்களை உளவு பார்ப்பதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்தை டொனால்ட் ட்ரம்ப் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்பின் ஈகோ

ட்ரம்ப்பின் ஈகோ

பலம் வாய்ந்த இரு வல்லரசு நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை என்ற தீப்பொறி சிறிது சிறிதாக மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு முதற்காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈகோதான். அதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையில் சாதாரண வர்த்தகப் போராக ஆரம்பித்து.

தொழில்நுட்ப போர்

தொழில்நுட்ப போர்

இறக்குமதிப் பொருட்களுக்கு இரு வல்லரசு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை உயர்த்தியதால், பிரச்சனை வர்த்தகப்போராக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக அதிகரித்து திடீரென தொழில்நுட்பப் போராக உருமாற ஆரம்பித்தது. பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொன்னது போல, சீனாவின் மிகப் பெரிய ஹூவாவே தொழில்நுட்ப நிறுவனத்தை அமெரிக்காவில் தடை செய்துவிட்டது.

அமெரிக்காவின் தோல்வி
 

அமெரிக்காவின் தோல்வி

ஹூவாவே நிறுவனத்தை அமெரிக்காவில் தடைசெய்வதற்கு டொனால்ட் ட்ரம்ப் சொன்ன சொத்தை காரணம், அந்நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து கொண்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் தலையிட்டு உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியது. இதனால் பயந்துகொண்டு சீனா தன் காலடியில் விழும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கு தோல்வேயே மிஞ்சியது.

சீனாவை விட்டால் வேறு வழியில்லை

சீனாவை விட்டால் வேறு வழியில்லை

அமெரிக்காவின் தடைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அறியவகை உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்வதை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்தது. அமெரிக்கா தன்னுடைய மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கு 80 சதவிகிதம் சீனாவையே நம்பியுள்ளது. இதனால் அமெரிக்காவின் உற்பத்தி தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்கா அசரவில்லை. ஹூவாவே நிறுவனத்தை அமெரிக்காவில் தடைசெய்ததோடு தன்னுடைய நட்பு நாடுகளையும் இது விசயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

மேட் இன் சைனா

மேட் இன் சைனா

சரி, தற்போது அமெரிக்கா ஐய்யய்யோ ஐய்யய்யோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறிக்கொள்ளும் வகையில் ஹூவாவே நிறுவனம் அப்படி என்னதான் செய்கிறது. ஒரு காலத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் அமெரிக்கா என்று சொல்ல வைத்த காலம் மலையேறிப் போய், எந்த மின்னணு பொருளை எடுத்தாலும் அல்லது விளையாட்டுப்பொருளை எடுத்தாலும், அதில் கண்டிப்பாக ‘இது சீன தயாரிப்பாகும்' (Made in China) என்று பொறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் வல்லமையாக சீனா உருமாறி இருப்பதில் இந்த ஹூவாவே நிறுவனத்தின் பங்கு மிக அதிகமாகும்.

முன்னணியில் ஹூவாவே

முன்னணியில் ஹூவாவே

சீனாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவே, சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்ததாக உலகிலேயே அதிக அளவில் திறன்பேசி மற்றும் அது தொடர்பான உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். அதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் ஆளப்போகும் 5ஜி தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் கொரிய நிறுவனங்களைக் காட்டிலும் ஹூவாவே நிறுவனம் முன்னணியில் உள்ளது.

5ஜி தொழில்நுட்பம்

5ஜி தொழில்நுட்பம்

அதோடு அதிவேக இணையதள பயன்பாடு மற்றும் முகமறிதல் (Face Reading) தொழில்நுட்பத்தின் மூலமாக கண்காணிக்கும் திட்டம், நகர மேலாண்மை மற்றும் உயர் தொழில்நுட்பத்தின் மூலமாக மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து போன்றவற்றில் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் ஹூவாவே நிறுவனம் தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வேகம் தான் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூவாவேயை கழற்றிவிட்ட கூகுள்

ஹூவாவேயை கழற்றிவிட்ட கூகுள்

ஹூவாவேயின் வளர்ச்சியைப் பார்த்து மிரண்ட அமெரிக்கா வேன்டுமென்றே உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி தடைசெய்தது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுடன் ஹூவாவே மேற்கொள்ளும் அனைத்து தொழில்நுட்ப பரிமாற்றங்களும் தடைசெய்யப்பட்டுவிட்டன. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் திறன்பேசிகளில் (Smart phones) பதியப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்திற்கான (Platform) புதிய பதிப்புகளையும் செயலிகளின் பயன்பாட்டையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. கூகுளின் அறிவிப்புக்கு பின்னர் அமெரிக்காவின் மற்ற நிறுவனங்களும் ஹூவாவேயுடன் மேற்கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தங்களை கைவிடும் சூழல் ஏற்பட்டது.

எச்சரிக்கை கவனம்

எச்சரிக்கை கவனம்

தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய நேச நாடுகளுக்கும் ஹூவாவே நிறுவனத்தைப் பற்றி பற்றவைக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்துள்ளார். இதன் முதல் கட்டமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே'க்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக ஹூவாவே நிறுவனம் தனது 5ஜி தொழில்நுட்பத்தை பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய யூனியனிலும் களமிறக்க உள்ளதைப் பற்றி குறிப்பிட்டு இது குறித்து கவனமாகவும், ஹூவாவேயின் செயல்பாடுகளில் ஒரு கண்வைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கூறியுள்ளார்.

கவனமுடன் கையாள்வோம்

கவனமுடன் கையாள்வோம்

டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதில் அளித்த தெரசா மே, ஹூவாவேயின் 5ஜி தொழில்நுட்பத்தை எங்கள் நாட்டில் புகுத்துவது பற்றி எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் இன்னும் முழுமையாக பரிசீலிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்போது உங்களின் எச்சரிக்கை குறித்து நாங்கள் கவனமுடன் பரிசீலித்து முடிவெடுப்போம் என்று பதிலளித்தார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: donald trump huawei
English summary

Donald Trump advice to England to be careful about Huawei 5G

Donald Trump said that, you know we have a very important intelligence gathering group, that we work very closely with your country and so you have to be very careful.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X