இல்லதரசிகளின் கண்ணீரை துடைக்க.. வெங்காயம் இருப்பு வைக்கும் இந்தியா.. காத்திருக்கும் வெங்காய சவால்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியா வெங்காய உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்தாலும் கடந்த ராபி பருவத்தில் சரியான பருவ மழையின்மையால் வெங்காயம் உற்பத்தி குறையலாம் என்றும் கருதப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு வெங்காய விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், அடுத்து விலை மாற்றம் எப்படி இருக்க போகிறது எனவும் கருத்தில் கொண்டு 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உணவு துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் கூறியுள்ளனராம்.

இல்லதரசிகளின் கண்ணீரை துடைக்க.. வெங்காயம் இருப்பு வைக்கும் இந்தியா.. காத்திருக்கும் வெங்காய சவால்

ஆமாப்பு.. தற்போது இந்தியாவில் நிலவி வரும் வறட்சி நிலவரங்களை கருத்தில் கொண்டும், இதனால் அதிகரிக்கவுள்ள விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும் இப்படி திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இந்தியாவின் மிகப்பெரிய வெங்காயா சந்தை, மஹாராஷ்டிரா மாநிலம் லாசல்காவனில் உள்ளது. அந்த சந்தையிலேயே வெங்காயத்தின் மொத்த விலை (Wholesale prices) 29 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். அட ஆமாங்க.. கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிலோ வெங்காயம் ரூ.8.50 ஆக இருந்தது.

ஆனால் இந்த விலை தற்போது அதிகரித்து ரூ.11 ஆக அதிகரித்துள்ளதாம். இதே சில்லறை வர்த்தகத்தில் வெங்காயத்தின் விலை ரூ.20 - 25 ஆக வர்த்தகமாகி வருகிறது. அதே போல் இந்த விலையானது வெங்காய வகைகளை பொறுத்து அதற்கேற்ப வர்த்தகமாகியும் வருகிறது.

அதோடு கடந்த ராபி பருவத்தில் நிலவிய வறட்சியின் காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த உற்பத்தி குறைவு வெங்காய விலையில் அழுத்தத்தை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எல்லா பயலும் எங்க கீழ தான்..! மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..! எல்லா பயலும் எங்க கீழ தான்..! மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..!

இந்த விலைவாசி திட்டத்தினை கட்டுப்படுத்தும் வகையில் கொள்முதல் செய்யும் கூட்டுறவு நபார்டு, இது வரை ராபி பருவத்தில் மட்டும் 32,000 டன் வெங்காயத்தினை கொள்முதல் செய்துள்ளது. இந்த வெங்காயம் ஜீலைக்கு பின் விற்பனைக்கு வெளியே அனுப்பப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

வெங்காயம் மட்டும் இல்லங்க. பருப்பு வகைகளும் இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ளனவாம். அட ஆமாங்க.. இதுவரை 16.15 லட்சம் டன் பருப்பு வகைகளை மத்திய அரசு இதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாம்.

வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வறட்சி நிலைமையே அதிகளவில் நிலவி வருகின்றன. இதனால் நடப்பு ஆண்டில் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

அதோடு கடந்த 2018 - 2019 ஜீன் வரையிலான காலத்தில் வெங்காய உற்பத்தி 23.62 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாம். இது கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 23.26 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொத்த வெங்காய உற்பத்தியில், ராபி பருவத்தில் மட்டும் 60% வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறதாம். குறிப்பாக இந்தியாவில் மூன்று பருவத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒன்று கரீப் பருவம், லேட் கரீப், ராபி உள்ளிட்ட பருவங்களில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt creating 50,000 tonne of onion to curb price rise

The Centre has started creating a stock of 50,000 tonne of onion to check prices in the coming months in view of drought conditions in major producing states.
Story first published: Tuesday, June 4, 2019, 17:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X