லோக்சபா தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டுப்போட ரூ. 60000 கோடி செலவாகியிருக்காம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியத் துணைக் கண்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் 90 கோடி பேர் வாக்களிக்க ஆன செலவு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் இந்தியாவில் தான் தேர்தல் செலவுகள் அதிகம் எனவும் ஊடக ஆய்வு மையம் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

 

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது லோக்சபா தேர்தலுக்கு ஆன செலவைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு கூடுதலாக செலவானதாகவும் அந்த ஆய்வு மையம் கூடுதல் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 18ஆவது லோக்சபா தேர்தல் செலவானது சுமார் 1 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்க ஆன செலவு ரூ.45 ஆயிரம் கோடி மட்டுமே. மக்கள் தொகை என்பது சுமார் 33 கோடி பேர்கள் தான். அங்கேயே இவ்வளவு செலவானது என்றால் உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் திருவிழா போன்று நடத்தப்படும் லோக்சபா தேர்தலுக்கு நிச்சயம் அதைவிட கூடுதலாகவே செலவாகும்.

சூப்பர் மோடிஜி.. அசத்தும் பென்சன் திட்டங்கள்.. அதிரடியாக களத்தில்.. பலே பலே தான்!

ரூ.60 ஆயிரம் கோடி

ரூ.60 ஆயிரம் கோடி

கடந்த மார்ச் மாதத்தில் லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்தது. லோக்சபா தேர்தலுக்கான செலவு குத்துமதிப்பாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்து. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுக்கு எவ்வளவு செல்வு செய்யலாம் என்பதையும் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்திருந்தது.

தனி செலவுக் கணக்கு

தனி செலவுக் கணக்கு

இதில் தேர்தல் செலவு என்பது வேட்பாளர் மனு தாக்கல் செய்வதில் தொடங்கி தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலும் செய்யும் அனைத்து செலவுகளையும் பராமரிக்க வேண்டும். இதற்காக வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளே வேட்பாளர் தேர்தல் செலவு என தனிக் கணக்கையும் தொடங்க வேண்டியது கட்டாயமாகும்.

வேட்பாளர் செலவு ரூ.70 லட்சம்தான்
 

வேட்பாளர் செலவு ரூ.70 லட்சம்தான்

17ஆவது லோக்சபா தேர்தலில் வேட்பாளரின் செலவானது ரூ.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்து. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் முடிவு அறிவக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் தங்கள் தேர்தல் செலவுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வேட்பாளர் எந்தெந்த செலவினங்களுக்கு எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையம் வரையறை செய்திருந்தது.

மட்டன் பிரியாணிக்கு ரூ.200 தான்

மட்டன் பிரியாணிக்கு ரூ.200 தான்

வேட்பாளரின் தேர்தல் செலவு என்பதில், மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சின்னன் பிரியாணிக்கு ரூ.180, காலையில் டிபன் செலவு வகையில் ரூ.100, தண்ணீர் பாட்டில் ரூ.20, டீ மற்றும் காஃபி செலவு ரூ.10, பால் ஊற்றுவதற்கு ரூ.15, காய்கறி சாப்பாடு ரூ.50, இளநீர் ரூ.40, திருஷ்டி பூசணிக்காய்க்கு ரூ.120, புடவை மற்றும் டி-சர்ட்களுக்கு ரூ.375, பொன்னாடை அளிப்பதற்கு ரூ.150, பிரச்சார வாகன ஒட்டுநர்களின் சம்பளத்திற்கு ரூ.695, வேட்பாளர்களுடன் வருபவர்களுக்கு தங்குவதற்கான மண்டபச் செலவு ரூ. ரூ.2000 முதல் ரூ.6000 வரை, வேட்பாளருக்கு பிரச்சாரத்திற்க வரும் சிறப்பு பேச்சாளர்கள் அல்லது விவிஐபிக்கள் தங்குவதற்கான 3 நட்சத்திர ஹோட்டல் ஏசி ரூம் வாடகை ரூ.5800, அதுவே 5 நட்சத்திர ஹோட்டலுக்கு ரூ.9300, வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் மேளதாளத்திற்கான வாடகைக்கு ரூ.4500 என தேர்தல் ஆணையம் செலவுகளை வரைமுறை செய்திருந்தது.

குல்லா போடுவதையும் சேக்கணும்

குல்லா போடுவதையும் சேக்கணும்

அதோடு, வேட்பாளர்களுடன் வருபவர்களுக்கு வழங்கும் தொப்பி, மின்னணு சாதனங்கள், பேனர்கள், போஸ்டர்கள், கட்சிக்கொடிகள், பிளக்ஸ் போர்டுகள் உள்பட 208 பொருட்களுக்கான செலவுகளையும் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்திருந்தது. இந்த வரம்புகளை மீறி வேட்பாளர் செலவு செய்யக்கூடாது என்றும் மீறி செலவு செய்திருந்தது தெரியவரும் பட்சத்தில் அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஓட்டுக்கு ரூ.700 தான் செலவு

ஒரு ஓட்டுக்கு ரூ.700 தான் செலவு

தற்போது லோக்சபா தேர்தல் முடிந்து புதிய ஆட்சியும் மலர்ந்துவிட்டது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம் லோக்சபா தேர்தலுக்கான ஆன செலவு எவ்வளவு என்பது பற்றி நாடு முழுவதும் கள ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சராசரியாக ஒரு வாக்காளருக்கு ரூ.700 செலவானதாக தெரிவித்துள்ளது. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி பேர்களாகும்.

ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி செலவு

ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி செலவு

ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் சராசரியாக ரூ.100 கோடி செலவாகி இருக்கும் என்றும், வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது மாறுபட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்களுக்கும் வாக்களிக்கும் போது வைக்கப்படும் மைக்கு மட்டுமே சுமார் 33 கோடி ரூபாய் செலவானது குறிப்பிடத்தக்கது.

முதல் தேர்தலுக்கு ரூ.10 கோடி

முதல் தேர்தலுக்கு ரூ.10 கோடி

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலுக்கான செலவு சுமார் ரூ.10.45 கோடி மட்டுமே. அப்போது இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது 19.36 கோடி மட்டுமே. சராசரியாக ஒரு வாக்காளருக்கு ஆன செலவு வெறும் 30 பைசா மட்டுமே. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த 17ஆவது லோக்சபா தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ஆன செலவு ரூ.700 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தான் அதிக செலவு

இந்தியாவில் தான் அதிக செலவு

இதன் மூலம் உலகிலேயே மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரிதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஆகும் செலவானது மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் என்று தெரியவந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் எல்லாமே வாக்குச்சீட்டு முறைதான இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் தான் மின்னணு வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ரூ.45 ஆயிரம் கோடிதான்

அமெரிக்காவில் ரூ.45 ஆயிரம் கோடிதான்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்க ஆன செலவு ரூ.45 ஆயிரம் கோடி மட்டுமே. மக்கள் தொகை என்பது சுமார் 33 கோடி பேர்கள் தான். அங்கேயே இவ்வளவு செலவானது என்றால் உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் திருவிழா போன்று நடத்தப்படும் லோக்சபா தேர்தலுக்கு நிச்சயம் அதைவிட கூடுதலாகவே செலவாகும்.

2024ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடி

2024ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடி

இதே நிலைமையில் சென்றால் வரும் 18ஆவது லோக்சபா தேர்தலுக்கு நிச்சயம் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த ஊடக ஆய்வு மையத்தின் தலைவரான என்.பாஸ்கர ராவ், இந்தியாவில் ஊழல் என்பது அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டது. அதோடு ஊழல் என்பது தேர்தலில் தான் தொடங்குகிறது. இதை நம்மால் நிச்சயம் ஒழிக்கவே முடியாது என்று தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Loksabha Election Expenses was Rs.60000 Crore

Elections in the world’s biggest democracy have become the most expensive too. The amount spending by political parties and candidates to woo 90 crore voters in the just concluded polls cut them nearly Rs.60000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X