மோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு ஓடிப் போன மோசடி மன்னனின் கார்கள் ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன.

 

ஆமாப்பு.. பிரபல தொழில் அதிபர் நிரவ்மோடி இந்தியாவின் வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றதும், இதையடுத்து அவரது அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளதும் தெரிந்த விஷயமே.

 
மோசடி மன்னனின் கார்கள் ஏலம்.. அடுத்தடுத்த ஏலத்தின் மூலம் நிரவ் மோடியின் சொத்துகள் விற்பனை

இந்த நிலையில் அவரின் சொத்துக்கள் ஒவ்வொன்றையும் விற்று பணம் திரட்டும் நடவடிக்கைகள், தற்போது நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நிரவ் மோடியின் 12 சொகுசு கார்களையும் அமலாக்கத்துறை முன்னரே பறிமுதல் செய்தது. தற்போது அந்த கார்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏலம் விட்டு பணம் திரட்டி வருகிறது.

சமீபத்தில் அவரது 3 கார்கள் ஏலம் விடப்பட்டன. அந்த கார்கள் முறையே ரூ.53 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.10 லட்சம் என்ற ரீதியில் ஏலம் சென்றன. அதே சமயம் ஸ்கோடா காரை ரூ.7 லட்சத்துக்கு கேட்டதால் அதன் ஏல கேட்பு விலை குறைவாக இருப்பதாக கூறி அந்த கார் விற்கப்படவில்லை.

இதற்கிடையே கடந்த செவ்வாய்கிழமை நிரவ் மோடியின் அதிநவீன காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்பட்டது. அந்த காரை ஒருவர் ரூ 1. 70 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளாராம்.

அதுபோல நிரவ்மோடியின் போர்சி ரக காரை (Porsche Panamera) 60 லட்சம் ரூபாய்க்கு மற்றொருவர் ஏலம் எடுத்துள்ளாராம். இதோடு மற்ற கார்களையும் ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

இதோடு நிரவ்மோடியின் மற்ற சொத்துக்களையும் அடுத்தடுத்து ஏலம் விட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நிலையில் நிரவ் மோடிக்கு தொடர்ந்து மூன்று முறையாக ஜாமீன் கேட்டும் வழங்கப்படாததையடுத்து தொடர்ந்து அவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirav Modi’s Rolls Royce car sold for Rs.1.7cr

Nirav modi’s cars were sold Rolls Royce Ghost and Porsche Panamera belonging to Rs 1.70 crore and Rs 60 lakh, in a re-auction held by the Enforcement Directorate.
Story first published: Wednesday, June 5, 2019, 14:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X