அதிகரிக்கும் EWS சேர்க்கை.. டெல்லி பல்கலைக்கழகம் அறிக்கை.. இணையதளத்தில் 2,38,000 மாணவர்கள் பதிவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பள்ளிப்படிப்பை முடித்து பரப்பரப்பாக கல்லூரிகளுக்கான சேர்க்கைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான டெல்லி பல்கலைகழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான, இணையதள பதிவில் கடந்த வியாழக்கிழமை வரை 2,38,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக, இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

கடந்த மே 30ம் தேதியிலிருந்து தொடங்கிய இந்த இணைய பதிவு ஜீன் 14வுடன் முடிவடைய உள்ளதாம். இந்த நிலையில் முதல் கட் ஆப் மதிப்பெண் ஜீன் 20 தேதியும், இரண்டாவது கட் ஆப் ஜீன் 25லிம், மூன்றாவது கட் ஆப் ஜீன் 29ம் முடிவடைய உள்ளதாம்.

அதிகரிக்கும் EWS சேர்க்கை.. டெல்லி பல்கலைக்கழகம் அறிக்கை.. இணையதளத்தில் 2,38,000 மாணவர்கள் பதிவு

அதோடு முறையே நான்காவது ஐந்தாவது கட் ஆப்கள, ஜீலை 4 மற்றும் ஜீலை 9ல் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை 2,38,741 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1,35,030 மாணவர்கள் அவர்களுக்குண்டான பேமென்ட்ஸ்ஸையும் கட்டியுள்ளதாகவும் இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதில் மொத்தம் பதிவு செய்தவர்களில், 84,937 பேர் தேர்ச்சி பெறாதவர் பிரிவில் இருந்தும், பின் தங்கிய வகுப்பிகளில் இருந்து 24,125 பேரும், திட்டமிடப்பட்ட ஜாதிகளில் இருந்து 19,349 பேரும், அதோடு பழங்குடியினர்களிடமிருந்து 3,964 பேரும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பலவீனமாக பிரிவிலிருந்து (Economically Weaker Section) 2,655 பேரும் பதிவு செய்துள்ளனராம்.

அதோடு கடந்த வியாழக் கிழமையன்று மஹாராஜா அகசென் கல்லூரியில் டெல்லி பல்கலைக்கழகம் ஒரு கூட்டத்தை நடத்தியது. இதில் அங்குள்ள மாணவர்கள் EWS சான்றிதழை எவ்வாறு வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளை கேட்டுள்ளனாராம்.

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகம் இது குறித்து கூறுகையில், மே 31ல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுக்கு, Economically Weaker Section சான்றிதலை எப்படி வாங்கு வேண்டும், அதனை பற்றிய விழிப்புணர்வும் இல்லை, அரசாங்க அதிகாரிகள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாம் டெல்லி பல்கலைக்கழகம்.

 

அதோடு நடப்பாண்டில் EWS மாணவர்கள் பதிவு 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இது மொத்தம் 62,000 இளங்கலை படிப்புகளுக்கான சீட்களில், இந்த EWS பிரிவுக்கு மட்டும் 6000 சீட்களை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த பல்கலைக் கழகம் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: admission
English summary

Around 238,000 students register on DU's website for admissions

Over 238,000 students have registered on the Delhi University's website for admissions in UG courses till last Thursday.
Story first published: Friday, June 7, 2019, 10:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X