இனி விடிய விடிய வியாபாரம் பாருங்க... சில கண்டிசனோட - தமிழக அரசு அனுமதி

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு 24 மணி நேரம் கடைகள் திறந்திருக்க அனுமதியை அளித்துள்ளது. இந்த அனுமதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள், மால்கள் எனப்படும் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய வணிக வளாகங்கள் அனைத்தும் இனிமேல் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் திறந்திருக்க தமிழ்நாடு அரச அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காகவும் தமிழ்நாடு அரசு இந்த அனுமதியை அளித்துள்ளது. இந்த அனுமதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் கூடுதலாக வேலை செய்யி விரும்பினாலும் அவர்களை ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். கூடுதலாக வேலை செய்திருந்தால் அதற்கான தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2019-20 : ஐடியா சொல்லுங்க... செயல்படுத்துறோம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2019-20 : ஐடியா சொல்லுங்க... செயல்படுத்துறோம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்

நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.7 சதவிகிதத்தை எட்டிவிட்டாதக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளி விவரத்தையும் வெளியிட்டது.

தொடர்புச் சங்கலிதான்

தொடர்புச் சங்கலிதான்

ஒரு நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது தனிப்பாதையில் பயணிப்பது கிடையாது. பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையாதாகும். கூடவே பணவீக்கம், தனிநபர் நுகர்வு, விவசாய வளர்ச்சி, தொழில்துறையின் வளர்ச்சி என ஒன்றுக்கொன்று தொடர்புடையாதாகும். எனவே இவற்றை அதிகரித்தால் வேலையில்லாத்திண்டாட்டம் படிப்படியாக குறையும்

மத்திய அரசின் சட்ட மசோதா
 

மத்திய அரசின் சட்ட மசோதா

இதையெல்லாம் யோசித்து தான் மத்திய அரசும் மாற்றி யோசிக்க ஆரம்பித்தது. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரிக்கம் பொருட்டு, நாடு முழுவதும் உள்ள உணவு விடுதிகள், கடைகள், திரையரங்குகள், பொழுதுபோக்க அம்சங்களை உள்ளடக்கிய வணிக வளாகங்கள் என அனைத்தையும் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு ஏதுவாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்தது.

உடனே நிறைவேத்தணும்

உடனே நிறைவேத்தணும்

வணிக வளாகங்கள் மற்றும் உணவு விடுதிகளை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான மாதிரி சட்ட மசோதாவை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக தலைமை செயலாளர் சுனில் பாலிவால் (Sunil Paliwal) கடந்த மே மாதம் 28ஆம் தேதியன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்ததுடன் கூடவே தேவையான திருத்தங்களை செய்து உடனடியா நிறைவேற்றும்படி அறிவுறத்தினார்.

24 மணி நேரமும் திறந்திருக்கும்

24 மணி நேரமும் திறந்திருக்கும்

தமிழக அரசும் இந்த சட்ட மசோதாவை உடனடியாக ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தையும் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள அனைத்துவிதமான வணிக நிறுவனங்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரத்திற்கு 48 மணி நேரம் போதும்

வாரத்திற்கு 48 மணி நேரம் போதும்

தமிழக அரசு அரசாணை வெளியிட்டதோடு கூடவே சில விதிமுறைகள் மற்றும் வரையறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி, திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் என அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தினசரி 8 மணி நேரமும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு கூடுதலாக வேலை செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் மட்டுமே

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் மட்டுமே

ஊழியர்கள் கூடுதலாக வேலை செய்யி விரும்பினாலும் அவர்களை ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும். கூடுதலாக வேலை செய்திருந்தால் அதற்கான தொகையை நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்புதல் வேண்டும்

ஒப்புதல் வேண்டும்

பெண் ஊழியர்களை பாதுகாக்கும் வகையில், அவர்களை இரவு 8 மணிக்கு மேல் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை அவர்களே விரும்பி வேலை செய்ய விரும்பினால் மட்டுமே அவர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்பே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். அதோடு இரவு நேரங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை வசதி வேண்டும்

அடிப்படை வசதி வேண்டும்

அதோடு, அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான சுகாதாரமான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, அவர்களின் பொருட்களை பாதுகாப்பதற்கான லாக்கர் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரையிலும் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu gives permit to shops and Restaurants to open 24 hours

Tamilnadu government after careful consideration, accepts the proposal of the principal secretary and commissioner of labour and has decided to permit all shops and all establishments in Tamilnadu to stay open 24x7 on all days of the year, initially for a period of 3 years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X