நீங்க ஹவுஸ் ஓனரா.. அப்படீன்னா.. வீட்டு வாடகை ஒப்பந்தத்தை கட்டாயம் பதிவு செய்யணும்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வீட்டு வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். “2019 பிப்ரவரி 22க்கு முன்பாக எழுதப்படாத ஒப்பந்தங்களையும் எழுத்து மூலமாகப் பதிவு செய்வதற்கு உரிய கால அவகாசம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பாக நான்கு மாதங்களுக்குரிய வாடகை ஒப்பந்தங்களைப் பதிவு செய்ய வேண்டும். எழுத்து வடிவிலான வாடகை ஒப்பந்தமானது சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளர், வாடகைதாரரால் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கிருஷ்ணன் அந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார்

நீங்க ஹவுஸ் ஓனரா.. அப்படீன்னா.. வீட்டு வாடகை ஒப்பந்தத்தை கட்டாயம் பதிவு செய்யணும்!

தமிழகக மக்கள் தொகையில் 2011 கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 24 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு உருவாக்கிய வாடகை மசோதா சட்டத்தின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் பிப்ரவரி 22 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டத்தின்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு தமிழகத்தில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டிடத்தையும் வாடகைக்கு விடப்படும்போது அதற்கான ஒப்பந்தம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. அதற்காக https://www.tenancy.tn.gov.in/ என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்க சலுகை தேவையில்லை... அமெரிக்காவிடம் மண்டியிட மாட்டோம்- இந்தியா கெத்து

இதன் மூலம் வாடகை ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வாடகை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்படுவார்கள். மேலும், இரு தரப்புக்கும் இடையே உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, வருவாய் கோட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது, சென்னைக்கு 8 அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் இனி வாடகைக்கு விடப்படும் எந்த ஒரு கட்டிடத்துக்கும் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளர், குடியிருப்போர் இடையே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

வாடகை முன்பணமாக மூன்று மாத வாடகை மட்டுமே வீட்டு உரிமையாளர் வாங்க வேண்டும். வாடகை ஒப்பந்தப்படி வீட்டு உரிமையாளர், வாடகைதாரர், குத்தகைதாரர் ஆகியோர் வீட்டை நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். ஒப்பந்தக் காலம் முடிந்தபிறகும் வாடகைக்குக் குடியிருப்பவர், வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் இரு மடங்கு வாடகை தர வேண்டும். இதில் ஏதாவது சிக்கல்கள் எழுந்தால் வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைக்குக் குடியிருப்பவர், வாடகை அதிகாரியிடம் எழுத்து மூலம் தகவல் தர வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்.

இதில் திருப்தி இல்லையென்றால் 90 நாட்களுக்குள், வாடகை தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலும், அதனை அடுத்து 120 நாட்களில் வாடகை குறித்த பிரச்சினைகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்திலும் முறையிடலாம். இந்த அமைப்புகளின் தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இயலாது. தமிழக அரசின் புதிய சட்டத்தின்படி வாடகை அதிகாரியாக வருவாய் கோட்ட அலுவலர் அல்லது தனித் துணை ஆட்சியர் இருப்பார் என்றும், அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் எழுத்து மூலமாகக் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசிய கிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

House rent law comes into exist

House rent aggrement law has come into exist and all the house owners are asked to register their rental aggrement.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X