பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட வங்கிகள் இணைப்பு அவசியம் - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கும் 5 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டவேண்டும் என்றால், வங்கிகளை மறுசீரமைப்பு செய்வதும், லாபம் குறைவான சிறிய வங்கிகளை பெரிய பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பது அவசியமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. பின்னர் கடந்த மே மாதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், ஆந்திரா வங்கியும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரும் செப்டம்பர் மாதத்தில் இணைப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட வங்கிகள் இணைப்பு அவசியம் - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வெறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளை கேட்டு வருகிறார். அப்போது அவர் வங்கிகளின் சீரமைப்பு அவசியமான ஒன்று என்றும், இந்த ஆண்டில் அது தீவிரப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சும்மாவே நிற்க மாட்டோம்.. இனி நிற்போமா.. டிராபிக் விதி மீறல் அபராத கட்டணத்தை வசூலிக்க இயந்திரம்!

இந்தியாவில் வங்கித் தொழில் என்பது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. முதல் அரசுடைமை வங்கி என்ற பெருமை இந்திய ,ஸ்டேட் வங்கி 1806ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக பல்வேறு வங்கிகள் தோன்றின. கடந்த 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி அப்போதைய இம்பீரியல் வங்கியிடம் இருந்து வங்கித் தொழிலின் பொறுப்புகளை முறையாக எடுத்துக்கொண்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1969ஆம் ஆண்டில் அப்போது முன்னணியில் இருந்த 14 பெரிய வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்பட்டு தேசியமயமாக்கப்பட்டன. பின்னர் இரண்டாவது முறையாக கடந்த 1980ஆம் ஆண்டில் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இவ்வங்கிகள் அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டன.

 

பின்னர், அவ்வப்போது தனியார் துறை வங்கிகளில் ஏற்படும் நிதிச்சிக்கல்களால், அவற்றை லாபத்தில் இயங்கும் முன்னணி பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பது நடந்து வந்தது. 2004ஆம் ஆண்டில் அப்போது முன்னணியில் இருந்த குளோபல் ட்ரஸ்ட் வங்கி கடும் நட்டத்தை சந்தித்ததால் ஓரியண்டல் வங்கியுடன் இணைக்கப்பட்டது. பின்னர் ஐசிஐசிஐ நிறுவனத்துடன் மதுரா வங்கியும் (Bank of Madura Ltd) இணைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் பிரச்சனையால் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் இவ்வாறான வங்கிகளை லாபத்தில் இயங்கும் வங்கிகளோடு ரிசர்வ் வங்கி இணைத்து வருகிறது. கடந்த ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் அதன் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி இணைக்கப்பட்டன. இதையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி உருவெடுத்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன. பின்னர் கடந்த மே மாதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், ஆந்திரா வங்கியும் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரும் செப்டம்பர் மாதத்தில் இணைப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி தொடர்ந்து வங்கிகள் இணைப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கையில், பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் இணைப்பு அவசியமான ஒன்று என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டள்ள அவர் வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அவர் அதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கேட்டுள்ளார், பொதுமக்களும், வரி ஆலோசகர்களும் தங்களின் மேலான ஆலோசனைகளை நிதியமைச்சருக்கு வழங்கி வருகின்றனர். அவரும் அதற்கேற்ப பட்ஜெட் தயாரிப்பை மேற்கொண்டு வருகிறார். மேலும் வங்கிகளின் மறுசீரமைப்பு குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாட்டின் அனைத்து பொதுத்துறை வங்கிகளுமோ வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் வங்கிகள் நிதிச்சிக்கல்களை சந்தித்து வருவதோடு, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியும் வங்கிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையாதாகும்.

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளை மறுசீரமைப்பதாலும், நலிவடைந்து வரும் சிறிய வங்கிகளை லாபத்தில் இயங்கும் மற்ற பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பதாலும், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான முறையான அறிவிப்பை நிதியமைச்சர் வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் அறிவிப்பார் என்றும் தெரிகிறது.

மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகளையும் மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாநில வங்கிகளும் மத்திய அரசின் வசம் உள்ள பொதுத்துறை வங்கிகளோடு இணையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதோடு மாநில அரசின் வசம் உள்ள வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளும் தடுக்கப்படும்.

வங்கிகள் மறுசீரமைப்பு குறித்தான விரிவான ஆய்வறிக்கையை கடந்த 1991ஆம் ஆண்டு நரசிம்மம் கமிட்டி ஆராய்ந்து பரிந்துரை செய்தது. இதனால் வங்கிகளின் வருமானமும் கூடும், பங்குதாரர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும் இதனடிப்படையில் கடந்த ஏப்ரலில் பேங்க் ஆஃப் வங்கியின் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு சுமார் ரூ.5042 கோடி ரூபாய் அளித்தது. அதோடு வங்கியின் செலவினங்களை ஈடுகட்டுவதற்கும் மூலதனத்தை அதிகரிக்கவும், தேனா வங்கியும் விஜயா வங்கியும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன.

பேங்க் ஆஃப் பரோடா வங்கியுன் ஒன்றிணைப்பால் இதன் வர்த்தகமானது சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாக இதன் இருப்புநிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு முன்கூட்டி செலுத்திய (Advances) பணமாக ரூ.8.75 கோடியும், வைப்புத் தொகையாக ரூ.6.75 கோடியும் உயர்ந்துள்ளது. இதெல்லாம் வங்கிகளின் இணைப்பின் மூலமே சாத்தியமானது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banking Reforms must for Economy Growth

The banking sector has an important role in the reinvigorating sagging economy, the sources said, adding the Budget speech of the Finance Minister will contain roadmap for the reforms in the sector. .
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X