ஜுன் மாதம் சம்பளம் அதிகரிக்கும்.. அதிரடியாய் சம்பளத்தை அதிகரித்த விப்ரோ.. ஸ்பெஷல் அலவன்ஸும் உண்டாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது சராசரி ஊதிய உயர்வு கடந்த ஜீன் 1 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

 

பெங்களுரை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த மென்பொருள் நிறுவனம் தற்போது அதன் ஊழியர்களுக்கு அதிக பட்ச தொகையினை ஊதிய உயர்வாக அறிவித்துள்ளது.

ஜுன் மாதம் சம்பளம் அதிகரிக்கும்.. அதிரடியாய் சம்பளத்தை அதிகரித்த விப்ரோ.. ஸ்பெஷல் அலவன்ஸும் உண்டாம்!

சராசரியாக 6 - 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்தாலும், இங்கு வேலை செய்யும் ஊழியர்களில் இந்தியர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் இல்லங்க.. இந்த நிறுவனம் சில ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது, குறிப்பாக டிஜிட்டல் துறையில் உள்ளவர்களுக்கு இந்தசிறப்பு சலுகை அதிகரிச்சிருக்காம். ஆமாங்க.. machine learning, artificial intelligence உள்ளவங்களூகெல்லாம் நல்ல லக்கு தான்.

ஆமாண்டா அப்படிதான்.. அமெரிக்காவாது ஒன்னாவது கச்சா எண்ணெய் வேணுமா.. ரகசியமா அனுப்பி வைக்கிறேன்,ஈரான்

சில புதிய ஊழியர்களுக்கும், அதாவது இந்த நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் இருக்கும், ஊழியர்களுக்கு கூட இந்த சம்பள உயர்வு 6 -8 சதவிகிதம் கொடுத்திருக்காங்களாம். அது மட்டும் இல்லங்க. சிலருக்கு 6 சதவிகிதத்துக்கும் மேல் ஊதிய உயர்வும் இருக்காம்.

எப்படியோ? சராசரியாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஒற்றை டிஜிட்டலில் அதிக சம்பள உயர்வு கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.

இதோடு ஆரம்ப கட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு, இந்த ஊதிய உயர்வு ஒருவித ஊக்கத்தை கொடுக்கும். அதோடு தற்போது அதிகளவு ஊதிய உயர்வு பெற்ற ஒவ்வொரு ஊழியர்களுக்கு இதற்கு முன்பு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு எதிர்கால நோக்கம் கருதி சிறந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதனால் ஊழியர்களின் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஊக்கத்தோடு பணிபுரிந்து வருகிறார்கள் என்றும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

விப்ரோ நிறுவனத்தைத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக மிக வெற்றிகரமாக வழிநடத்தி வரும் அசிம் பிரேம்ஜி. தற்போது தனது நிறுவனத்தை பல லட்சம் கோடி மதிப்புள்ள மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் ஜீலை மாத இறுதியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஊழியர்களுக்கு தற்போது பல சலுகைகளையும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro has given high single digit average salary increment to its staffs

Wipro has given highsingle digit average salary increment (6 -8%) to its employees for this year effective June 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X