குழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஆந்திர சட்டமன்றத்தில் அக்கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் ஆந்திர சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ரூ.15000 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளாராம்.

இது மட்டும் அல்லாமல் பல அதிரடியான திட்டங்களையும் வகுத்துள்ளாராம். ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பல அதிரடியான திட்டங்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

உன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்

புகார்கள் வரக்கூடாது- வந்தால் பதவி நீக்கம்

புகார்கள் வரக்கூடாது- வந்தால் பதவி நீக்கம்

இக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஊழல் இல்லாத மாநிலமாக ஆந்திர மாநிலம் இருக்க வேண்டும் என்றும், மேலும் அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஏதேனும் ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என அதிரடியாய் எச்சரிக்கை விடுத்துள்ளராம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க திட்டம்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க திட்டம்

அதோடு ஆந்திர மாநிலத்தில் குழந்தை தொழிலாளர் முறையை ஓழிக்கவும், பள்ளிக்கல்வியை ஊக்கப்படுத்தவும், ஆந்திர மாநிலத்தில் படிக்க வேண்டிய வயதில் எந்த குழந்தையும் கூலி வேலைக்கு செல்லக்கூடாது என்றும், அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம்.

தாய்மார்களுக்கு ரூ.15,000
 

தாய்மார்களுக்கு ரூ.15,000

அதோடு இதனை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ரூ.15000 நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளாராம் ஜெகன்.

ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வரும்

ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வரும்

இது மட்டும் அல்ல மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான ரேஷன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, அவற்றை சமூக ஆர்வலர்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளாராம். இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்

இதனை தொடர்ந்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது கவனிக்கதக்கது. ஏற்கனவே கடந்த வாரம் விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை அறிவித்தார். அதோடு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்

விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்

குறிப்பாக வேளாண்துறை நேரடியாக நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யும் என்றும், இதில் பயீர் காப்பீட்டு திட்டத்திற்கு 100% பீரிமுயம் கட்டியே ஆக வேண்டும் என்றும், இதன் மூலம் இயற்கை பேரழிவு நிதியாக 2000 கோடி ரூபாயாகவும், சந்தை உறுதி படுத்தலுக்காக 3000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாம்.

விவாசாயத்திற்கு புதிய கமிஷன்

விவாசாயத்திற்கு புதிய கமிஷன்

இந்த புதிய அமைச்சரவை, விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒரு கமிஷனை உருவாக்க திட்டமிட்டுள்ளராம். அதோடு விவசாயிகளுக்கு விதப்பு பருவத்தில் உள்ளீட்டு மானியமாக ரூ.12,500 கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டி அரசு.

அனைவருக்கும் வீடு

அனைவருக்கும் வீடு

இந்த திட்டத்தில் தகுதியுள்ள மக்களுக்கு வீடு கட்ட தேவையான நிலத்தினை பெண்கள் பெயரினில் பதிவு செய்யப்படுமாம். இதன் மூலம் தகுதியுள்ள மக்களுக்கு ஒய்.எஸ்.ஆர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2.5 மில்லியன் வீடுகள் கட்டி தரப்படுமாம். இந்த வீட்டினை பெற்றுக் கொள்ள என்ன தகுதிகள் என்ன விதி முறைகள் என்பது குறித்து இன்னும் எந்த விதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்.

கல்விக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முக்கியத்துவம்

இது மட்டும் இல்லங்க இன்னும் இருக்கு என் கிற அளவுக்கு திட்டங்களை போட்டுக் கொண்டே செல்கிறது ஆந்திர அரசு. குறிப்பாக ஆந்திர அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் அனைத்தும் மேம்படுத்த வேண்டும் என்றும், இதற்காக 40,000 பள்ளிகளை போட்டு எடுத்துக் காட்டப்படும், அதன் பின்னர் சீர்த்திருத்தம் மேற்கொண்ட பின்னரும் முன்னரும் அதிகாரிகளை அழைத்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளராம். அதோடு தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்களை ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாம். அதோடு கல்வி துறையை கண்கானிக்கவும் நியமான கல்வி கட்டணம் வழங்கப்படுகிறதா என்பதை கண்கானிக்கவும் ஒரு தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: school
English summary

Andhra Womens, who send their children to school to get Rs.15,000

Andhra Pradesh government on Monday said all women who send their children to school will receive Rs.15,000 from the state government from 26 January next year.
Story first published: Wednesday, June 12, 2019, 12:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X