எனக்கு சோறு போட்ட சாமிங்களோட கடன அடக்கிறேங்க.. நெகிழ வைத்த இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான 76 வயதான இந்தி நடிகரான அமிதாப் பச்சன், பீகார் மாநிலத்தில் உள்ள 2100 விவசாயிகளின் கடனை ஒரே தவனையாக செலுத்திவிட்டராம் அமிதாப்.

 

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் மீது இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொடர்ந்து பரிவு காட்டி வருவது கவனிக்கதக்கது. சமீபத்தில் அவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1,398 பேருக்கும், மராட்டியத்தை சேர்ந்த விவசாயிகள் 350 பேருக்கும் பயிர்க்கடனை செலுத்தியும் உள்ளார் அமிதாப்.

எனக்கு சோறு போட்ட சாமிங்களோட கடன அடக்கிறேங்க.. நெகிழ வைத்த இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

இந்த நிலையில் தற்போது அவர் பீகாரை சேர்ந்த 2,100 விவசாயிகளுக்கான பயிர்க்கடனை செலுத்தி உள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்கள். இவர்களில் சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து மகள் சுவேதா, மகன் அபிஷேக் பச்சன் கையினால் பயிர்க்கடனுக்கான பணத்தை வழங்கியதாக கூறியுள்ளார்.

அதோடு மற்றவர்களுக்கு வங்கிகள் மூலமாகவே கடனை திருப்பி செலுத்தியதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 2000க்கும் மேலான விவசாயிகளின் கடனை பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் அடைத்துள்ளார்.

அதோடு அமிதாப் என்னுடைய வாக்குறுதியை நான் நிறைவேற்றி விட்டேன். பீகாரை சேர்ந்த நிலுவை தொகையை கட்ட முடியாமல் இருந்த 2100 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுடைய கடனை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது.

எனக்கு சோறு போட்ட சாமிங்களோட கடன அடக்கிறேங்க.. நெகிழ வைத்த இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சன் விவசாயிகளின் கடனை செலுத்துவது இதுதான் முதல் முறை அல்ல, கடந்த வருடமே ஆயிரத்திற்கும் மேலான உத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புல்வாமா தாக்குதலில் தேசத்திற்காக தங்களுடைய உயிரை பறிகொடுத்த இந்திய படை வீரர்களின் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற சிறிய நிதி உதவி செய்வதுதான் என்னுடைய அடுத்த கடமை" என்றும் அந்த பிளாக்கில் தெரிவித்துள்ளாராம்.

 

அதோடு இந்த புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு சென்று நேரில் சென்று அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் கூறியுள்ளாராம்.

ஆமாப்பு .. நடிப்பில் மட்டும் அல்ல, ரியல் லைஃபிலும் ஹீரோ தான் அமிதாப்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amitabh Bachchan helped clearing outstanding loans of over 2000 Bihar farmers

76 year old Amitabh Bachchan said he helped clearing outstanding loans of over 2100 farmers from Bihar.
Story first published: Thursday, June 13, 2019, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X