தண்ணி செலவ சம்பளத்துல பிடிச்சா ஓகேவா.. நோ.. அப்ப வீட்லருந்து வேலை பாருங்க.. சென்னை ஐ.டி நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : ஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தான், இதனால் ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லும் அளவுக்கு மிகவும் பாதித்துள்ளதாம்.

அங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் இங்கு அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லை. ஆக ஊழியர்கள் இனி நிறுவனத்திற்கு வேலைக்கு வர வேண்டாம். அவரவர் வீட்டிலிருந்தே வேலைக்கு வாருங்கள் என்று அறிவித்துள்ளாதாம்.

இதை விட கொடுமை என்னவெனில் அடுத்த 100 நாட்களில் பாட்டில் தண்ணீருக்கே கூட தட்டுப்பாடு வரலாம் என கருதப்படுகிறது.

என்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்! என்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்!

சரியான மழையில்லை

சரியான மழையில்லை

கடந்த 200 நாட்களாகவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள சரியான மழை இல்லாததால் குடி தண்ணீருக்கே மிக பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் மழை வராவிட்டால் இந்த பிரச்சனை மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்

ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்

இதோடு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் 12 நிறுவனங்கள், அதன் 5000 ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கூறியுள்ளதாம். இதே போல கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பிரச்சனை நடந்த போது இதே போல வீட்டிலிருந்து வேலை செய்து வந்தனராம்.

600 நிறுவனங்கள்

600 நிறுவனங்கள்

சென்னையில் மட்டும் தரமணி டைடல் பார்க் மற்றும் சிறுசேரி சிபகாட் இடையே சுமார் 600 க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்களும், ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களும் உள்ளன. இங்கு மொத்தம் சுமார் 3.2 லட்சம் ஊழியர்கள் உள்ளனராம். இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடாக இல்லை.

வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வாங்க

வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வாங்க

அதுவும் சோலிங்க நல்லூரில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் குடிப்பதற்கு தண்ணீரை அவரவர் வீட்டிரிலிருந்தே கொண்டு வர கூறியுள்ளதாம்.

ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் வேண்டும்

ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் வேண்டும்

சென்னை ஒ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் கோடை காலாத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றவாம். இதில் 60 சதவிகிதம் தண்ணீரை ஐ.டி நிறுவனங்கள் தான் பயன் படுத்துகின்றவாம், மீதமிருப்பதைதான் மற்ற நிறுவனங்கள் பயன் படுத்துகின்றவாம். இதில் கொடுமை என்னவெனில் இந்த தண்ணீர் அனைத்துமே பெரும்பாலும் வெளியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.

50% போர்வெல்லில் தண்ணிர் இருக்கு

50% போர்வெல்லில் தண்ணிர் இருக்கு

இதே சிப்காட்டில் உள்ள 46 ஐ.டி நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 17 போர்வெல்ஸ் இருக்கின்றனவாம். ஆனால் இதிலிருந்து தற்போதைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறதாம். மீதம் தண்ணீருக்காக தற்போதைக்கு டேங்கர் லாரிகளின் மூலம் வினியோகிப்பட்டு வருகிறதாம்.

இனி வராதீங்க

இனி வராதீங்க

இதெல்லாவற்றையும் பார்த்த பின்னரே நிறுவனங்கள் வேறு ஏதும் செய்ய இயலாத பட்சத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கோரிக்கை வைத்துள்ளாம்.

அன்றாட தேவைக்கே திண்டாடும் மக்கள்

அன்றாட தேவைக்கே திண்டாடும் மக்கள்

சென்னைக்கு குடி நீர் வழங்கும் முக்கிய ஏரிகள் அனைத்துமே தண்ணீர் இன்றி காணப்படுவதால் மக்கள் அன்றாட குடி நீருக்கே அவதிப்படும் நிலை நிலவி வருகிறது. அதே சமயம் போர்வெல்களிலும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மோசமாக நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here No water, so please work from home, IT firms told staffs

Chennai IT companies asking to their employees work from home
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X