என்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே அதன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியது. இந்த வகையில் இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், தற்போதைய நிர்வாக இயக்குனருமான அபிதாலி நீமுச்வாலாவின் கடந்த 2018 - 2019ம் ஆண்டிற்கான ஊதியம் 41% அதிகரித்து 27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாம்.

 

அட ஆமாங்க அமெரிக்கா டாலரில் 3.95 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2017 - 2018ம் ஆண்டில் 18.23 கோடி ரூபாயாக (அமெரிக்கா டாலரில் 2.8 மில்லியன் டாலாராக இருந்தது) இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னாது ரூ.27 கோடி சம்பளமா.. அசத்தும் விப்ரோ.. குதூகலத்தில் ஊழியர்கள்!

அதே சமயம் புதிய தலைவராக நியமிக்கபடவுள்ள ரிஸாத் பிரேம்ஜியின் சம்பளம் 9 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். அதோடு கடந்த 2018 - 2019ம் ஆண்டின் தலைமை நிதி அதிகாரியான ஜடின் தலாலின் இழப்பீடு தொகை (compensation) 23 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதே மற்ற உயர் அதிகாரிகள் காலாண்டு செயல் திறன் அடிப்படையில் சம்பள ஊக்கத்தொகையும், இழப்பீடு தொகையும் பெறுவார்கள். ஆனால் அபிதாலி நீமுச்வாலாவும், ரிஸாத் பிரேம்ஜியும் வருட அடிப்படையில் தங்களது சம்பளத் தொகையினை பெறுகின்றனர்.

பெங்களுரை தளமாக கொண்டுள்ள இந்த ஐ.டி நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டொடு ஒப்பிடும்போது 37.74 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் கடந்த நிதியாண்டின் நான் காவது காலாண்டில் நிகர லாபம் 2,483 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக வங்கி நிதி சேவைகள், மற்றும் காப்பீட்சு சேவைகள் வலுவான செயல் திறங்களுமே காரணம் என்று கருதப்படுகிறது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் நிகர லாபம் 1,803 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.38 சதவிகிதம் அதிகரித்து 15,006.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 13,768.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 11.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் அசிம் பிரேம்ஜி ஜீலை31ம் தேதியோடு ஒய்வு பெறுவார் என்றும், பின்னர் இவருடைய மனக் ரிஸாத் பிரேம்ஜி அந்த பொறுப்பை வகிப்பார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro CEO Abidali Neemuchwala's pay package leaps 41% hiked in FY19

Wipro Chief Executive Abidali Neemuchwala salary grow over 41% to around Rs 27 crore ($3.95 million) in FY 2018-19 compared to the previous fiscal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X