தலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை.. எல்லாத் தொழில்களும் அடி வாங்குது.. என்னாகப் போகுதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையால் இருப்போரேயே வாழ வைக்க முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது சென்னை. அந்த அளவிற்கு தண்ணீர் படுத்தும் பாடு பெரும்பாடாகி வருகிறது.

தினசரி அன்றாட தேவைக்கே கூட தண்ணீர் இல்லாமல் குடத்தை தூக்கிக் கொண்டு மக்கள் இங்கும் அங்கும் அலையும் காட்சி காண்போரை கதற வைக்கிறது.

அதிலும் தற்போது சென்னைவாசிகளின் நிலை இரவில் கூட தூங்க முடியாத நிலை, நிலவியும் வருகிறதாம். இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் இரவில் நிம்மதியாக வேலை செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது.

 குடங்களுடன் நடமாடும் சென்னை வாசிகள்?

குடங்களுடன் நடமாடும் சென்னை வாசிகள்?

ஆமாங்க.. ஏனெனில் இரவு நேரங்களில் தண்ணீர் வந்தால் என்ன செய்ய என்று இரவு பகல் பாராமல் விழித்து தண்ணீர் வாங்கி செல்கின்றனராம். அதிலும் சிலர் இரவில் விழித்திருந்து பகலில் வேலைக்கு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனராம். பருவமழை சரியாக இல்லாத காரணத்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகள், வறண்டு போய்விட்டன. இந்த நிலையில் நிலத்தடி நீரும் வற்றி விட்டதால், தலைநகர் சென்னையே ஆட்டம் காண தொடங்கியுள்ளது.

தண்ணீரே பாதியளவு கூட இல்லை.

தண்ணீரே பாதியளவு கூட இல்லை.

முன்னர் வாரத்திற்கு 20 டேங்கர் அளவிற்கு சப்ளை செய்து வந்தால் அதில் தற்போது பாதி கூட இல்லை. ஆமாங்க.. வாரத்திற்கு 5 - 10 டேங்கர் வரை தான் சப்ளை செய்கிறோம் என் கிறார்கள் லாரி உரிமையாளர்கள். ஒரு புறம் மக்களும் தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கிறார்கள். மற்றொரு தண்ணீர் லாரி உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் இதுவே அவர்களின் தொழிலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் இல்லாமையால் அவர்களது தொழிலும் முடங்கி போயுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு கேன் வாட்டரை வாங்க முடியுமா?

அத்தியாவசியத் தேவைகளுக்கு கேன் வாட்டரை வாங்க முடியுமா?

முன்னர் கேன் தண்ணீர் விலை ரூ.25 - 30 வரை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த கேன் வாட்டர் ரூ.40 - 50 வரை விற்பனையாகி வருகிறதாம். சென்னையில் உள்ள அடித்தட்டு மக்களும் நடுத்தர வர்க்க மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கேனை விலைகொடுத்து வாங்கி கொள்ள முடியும். ஆனால் அத்தியாவசிய தேவைக்கு 50 ரூபாய் கொடுத்து வாங்க முடியுமா? என்கிறார்கள்

இங்கு தண்ணீர் இல்லை,பேப்பர் தட்டுதான்

இங்கு தண்ணீர் இல்லை,பேப்பர் தட்டுதான்

சில இடங்களில் தண்ணீர் பிரச்சனையால் ஹோட்டல் விடுமுறை விடப்பட்டிருக்கிறதாம். ஆனால் இதையும் மீறி சில இடங்களில் ஹோட்டல் நடத்தப்பட்டு வந்தாலும் சாப்பிடுவதற்கு பேப்பர் பிளேட் தான் வழங்கப்படுகிறதாம். ஆமாங்க.. ஏனெனில் சாப்பிட்ட பிறகு தட்டுகளை கழுவ தண்ணீர் அதிகம் செலவாகிறது என்று இந்த தற்காலிக நடைமுறையை கொண்டு வந்துள்ளனவாம்.

அனைத்து தொழில்களும் முடங்கி விடும் அபாயம்?

அனைத்து தொழில்களும் முடங்கி விடும் அபாயம்?

சென்னையில் தண்ணீர் சப்ளை மிக குறைந்துவிட்டதால், பலரும் தங்களது வருமானமும் குறைந்துவிட்டதாக கூறி வரும் நிலையில், நீர் இல்லாவிட்டால், அனைத்து தரப்பினரும் முடங்கிவிடுவார்கள், அனைத்து தொழில்களும் முடங்கி விடும். ஆக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே ஐ.டி நிறுவனங்களில் எதிரொலி

ஏற்கனவே ஐ.டி நிறுவனங்களில் எதிரொலி

ஏற்கனவே சென்னை ஒ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் உள்ள இந்த தண்ணீர் பிரச்சனை காண முடிகிறது. இந்த நிறுவனங்களில் சில ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்லியும் உள்ளது. அதோடு வேலைக்கு வரும் போது வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வரவும் கூறியிருக்கிறதாம்.

இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது?

இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வரபோகிறது?

இந்தியாவில் தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தண்ணீர் பிரச்சனையை மேற்கொண்டு வருகிறது. சென்னை மட்டும் அல்ல வரும் 2020ல் 21 நகரங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக நிலத்தடி நீர் மிக மோசமாக கூட வாய்ப்பிருக்கிறது. ஆக அரசு முதலில் இந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

600 மில்லியன் மக்கள் பிரச்சனையை மேற்கோள்வர்.

600 மில்லியன் மக்கள் பிரச்சனையை மேற்கோள்வர்.

கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் இந்த தண்ணீர் பிரச்சனையால் பாதிப்படைய உள்ளார்கள். அதோடு ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரமான நீர் கிடைக்காததால் 2 லட்சம் இருக்கிறார்கள் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai water crisis washing out all the business job opportunities

Chennai city with heavy water shortage to residents, hotels, work places
Story first published: Friday, June 14, 2019, 19:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X