கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் அதீத வெப்பநிலை காரணமாக ஏசி விற்பனை படுஜோராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

குறிப்பாக எல்.ஜி. வோல்டாஸ், கோத்ரேஜ், லாய்டு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் ஏசி விற்பனை மிக அதிகமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 
கடுகடு வெயிலுக்கு ஏசி விற்பனை படுஜோரு.. அட போங்கப்ப ஸ்டாக் இல்ல.. நாளைக்கு வாங்க..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ஏசியை வாங்க வாடிக்கையாளர் விரும்பி வந்து கொண்டிருக்கும், இந்த சமயத்தில் பல கடைகளில் இந்த முன்னணி பிராண்டுகளின் ஸ்டாக் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பம் மிக அதிகரித்திருக்கும் இந்த சூழலில், இன்னும் சில வாரங்களுக்கு இந்த விற்பனை களைகட்டலாம் எனவும் ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனவாம்.

இதனால் 2019ஆம் ஆண்டு ஏசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிக நல்ல அதிர்ஷடகரமான வருடமாக அமையும் எனவும் கருதப்படுகிறதாம்.

அதோடு இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் மாதத்தின் முன் பாதியில் ஏசி விற்பனை அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக இல்லை. எனினும் சராசரியான அளவு விற்பனை இருந்து வந்தது.

எனினும் மார்ச் 15க்குப் பின்பு தான் இந்த விற்பனை அதிகரிப்பு சொல்லிக் கொள்ளும் அளவு வளர்ச்சி அடைந்தது என்றும், கடந்த பத்து ஆண்டுகளில் இப்படியொரு டிமாண்டை நாங்கள் பார்க்கவில்லை என எல்.ஜி. நிறுவனத்தின் வி.பி விஜய் பாபு கூறியுள்ளார்.

அதிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில இடங்களில் எங்களது ஏசிக்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. அதோடு ஸ்டாக் இல்லாத நிலையும் ஏற்பட்டது. அதோடு எல்.ஜி. நிறுவனம் தற்போது ஏசி விற்பனை பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை இரு மடங்காக அதிகரித்துள்ளதாம். இந்த நிலையில் சுமார் 8000 தொழில்நுட்பப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றும் பாபு கூறியுள்ளார்.

அதோடு எல்.ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை இந்த கோடையில் 60% உயர்ந்து, . ஜனவரி வரை ரூ.650 கோடி வருவாய் கண்டுள்ளதாம் இந்த நிறுவனம்.

இதே, இந்த ஆண்டு விற்பனை வளர்ச்சி இரண்டு இலக்க சதவிகிதத்தை எட்டிவிட்டது என வோல்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதீப் பக்சி கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு முதலே இந்த சீசனுக்காக, நாங்கள் ஆயத்தம் செய்து வந்தோம். அதோடு கடந்த பிப்ரவரி மாதமே போதிய அளவு ஸ்டாக் இருப்பதையும் உறுதி செய்து விட்டோம் என்கிறார் பிரதீப்.

இதோடு வோல்டாஸ் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையில் ஏசி விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பாக இந்த நிறுவனத்தின் மின்சக்தியை சேமிக்கும் ஏசிக்களுக்கு தனி வரவேற்பு இருந்துள்ளதுதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவே ஜப்பானைச் அடிப்படையாகக் கொண்ட பேனசோனிக் நிறுனத்தின் இந்திய தலைவராக உள்ள மனிஷ் சர்மா இது குறித்து கூறுகையில், இந்த ஆண்டு கோடைக் கால சீசனில் ஏசி விற்பனை சிறப்பாகத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக நாங்கள் ஏப்ரல், மே மாதங்களில் 40 சதவிகிதம் வரை வளர்ச்சி கண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பேனாசோனிக் நிறுவனத்தின் ஏசி விற்பனை கேரளா, ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகாவில் ஏசி விற்பனை 50% வளர்ச்சி அடைந்துள்ளது இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேவல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இது குறித்து கூறுகையில், ஹேவல்ஸ் நிறுவனத்தின் லாய்டு ஏசி விற்பனை கடந்த மார்ச் முதல் ஜூன் வரை 60 சதவிகிதம் ஏசி விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பைனான்ஸ் வசதி கிடைப்பதும். இந்த விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார். அதோடு ஏசி வாங்வோரில் 90 சதவிகிதம் பேர் ஸ்பிளிட் ஏசியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரத்தை சேமிக்கும் பிரத்யேக அமைப்புடைய ஏசி விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஹேவல்ஸ் நிறுவனத்தின் லாய்டு ஏசி விற்பனைக்கு கிராக்கி அதிகரித்துள்ளதால் ராஜஸ்தானில் உள்ள தொழில்சாலையில் புதிய உற்பத்தி ஆரம்பித்துள்ளதாம் இந்த நிறுவனம், இந்த நிலையில் இந்த நிறுவனம் ஏற்கனவே 350 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்ததாகவும், தற்போது இன்னும் அதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

குறிப்பாக ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா மா நிலங்களிலும், குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் ஏசி விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு கடந்த 2018ல் ஏசி விற்பனை 6 மில்லியன் யூனிட்களாக இருந்தது. இது 2019ல் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AC sales are on increased by soaring temperatures

AC sales are increased for this summer seson, particularly Tamilnadu, Gujarath, Andhra pradesh, Telangana, Delhi, Maharashtra sales increased in 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X