தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : சென்னையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் தற்போது தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. ஒரு புறம் குடங்களுடன் அலையும் மக்கள். மற்றொரு புறம் தண்ணீர் செலவளிப்பதை எப்படியேனும் குறைக்க வேண்டும் என யோசிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

 

இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்து வர கூறியுள்ளன. சில நிறுவனங்களில் கட்டாயம் ஊழியர்கள் வந்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில் பல்வேறு விதமாக சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனவாம் சென்னை சிறுசேரி மற்றும் ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள்.

வீட்டிலிருந்து கொண்டு வாங்க?

வீட்டிலிருந்து கொண்டு வாங்க?

ஒரு புறம் நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தாலும் மறுபுறம், இருக்கும் தண்ணீரையாவது அளவோடு உபயோகப்படுத்த ஊழியர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளதாம். அதற்காக சில ஐ.டி நிறுவனங்கள் BYOD சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளதாம். ஆமாங்க.. சில ஐ.டி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே சொந்தமாக லேப்டாப் உள்ளிட்டவரை கொண்டு வர வேண்டும் என்ற திட்டம் நடை முறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த BYOD திட்டத்தை (தண்ணீரும் கொண்டு வர வேண்டும் ) அமல்படுத்தியுள்ளதாம்.

disposable plates எடுத்துட்டு வாங்க?

disposable plates எடுத்துட்டு வாங்க?

ஆமாப்பு.. வீட்டிலிருந்து உணவு எடுத்து வரும் ஊழியர்கள், கட்டாயம் disposable plates கொண்டு வர வேண்டுமாம். ஏனெனில் சாப்பிட்ட தட்டுகளை கழுவ தண்ணீர் அதிக செலவாகும், ஆக சாப்பிட்டவுடன் அகற்றும் disposable plates கொண்டு வாருங்கள் என்று அறிவிறுத்தியுள்ளதாம் பல ஐ.டி நிறுவனங்கள். சோழிங்க நல்லூரில் உள்ள சில ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சாப்பிடும் போது ஊழியர்களுக்கு தட்டுகளை வழங்கி வந்ததாம். ஆனால் தற்போது சிக்கன நடவடிக்கையால் அது தற்போது நிறுதப்பட்டுள்ளதாம்.

 பாட்டிலில் கட்டாயம் தண்ணீர் கொண்டு வாங்க
 

பாட்டிலில் கட்டாயம் தண்ணீர் கொண்டு வாங்க

சில நிறுவனங்கள் கட்டாயம் குடிக்க தண்ணீர் வீட்டிலிருந்து எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளதாம். இது ஒரு புறம் என்றால் இந்த நிறுவனங்களில் உள்ள வாஷ் பேஷங்களில் தண்ணீர் வீணாவதைக் தடுக்க சில சிக்க நடவடிக்கைக்காக, புதிய டேப்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். ஆமாங்க இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க திட்டமிட்டுள்ளனவாம்.

கழிவறைகளில் ஃபிளஸ் கிடையாது

கழிவறைகளில் ஃபிளஸ் கிடையாது

சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் இன்னும் ஒரு படி மேலே போய், அங்குள்ள கழிவறைகளில் ஃபிளஸ் ஆஃப்சனை தடை செய்து பக்கெட்களை வைத்துள்ளனவாம். இதன் மூலம் அதிக தண்ணீர் செலவாவதை தடுக்க முடியும் என்று நிறுவனங்கள் கருதியுள்ளனவாம்.

டி.சி.எஸ்ஸில் தண்ணீர் பிரச்சனை இல்லை

டி.சி.எஸ்ஸில் தண்ணீர் பிரச்சனை இல்லை

சிறுசேரி பகுதியில் உள்ள சில ஐ.டி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ஐ.டி நிறுவன வளாக பகுதிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள் வைத்துள்ளதாகவும் இது உண்மையாக இன்று கைகொடுத்து வருவதாகவும் கூறியுள்ளன. இந்த நிலையில் டி.சி.எஸ் நிறுவன அதிகாரி ஒருவர், எங்களது நிறுவனத்தில் எந்த தண்ணீர் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளாராம். ஆமாங்க.. உண்மையிலேயே இந்த டி.சி.எஸ் நிறுவனத்தில் பெரிய குளம் போன்று ஒன்று உள்ளதாம். இது நல்ல நீர்தேக்க தொட்டியாகவும் செயல்படுகிறதாம். இந்த வறட்சி காலத்தில் நன்றாக கைகொடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.

சிக்கன நடவடிக்கைகாக special nozzles

சிக்கன நடவடிக்கைகாக special nozzles

காக்ணிசன்ட் நிறுவனம் இதையும் தாண்டி அங்குள்ள வாஷ் பேஷன்களில் சிறப்பு முனைகளை (special nozzles) பொறுத்தியுள்ளனவாம். இதன் மூலம் 80 சதவிகிதம் நீர் வீணாவதை தடுக்க முடியும் என்கிறதாம் இந்த நிறுவனம். அது மட்டும் அல்லங்க.. இன்னும் பல புதிய திட்டங்களை வகுத்துள்ளதாம் காக்ணிசன்ட். குறிப்பாக இதற்கென ஆன்லைன் தளத்தையும் உருவாக்கியுள்ளதாம் இந்த நிறுவனம். இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க பலவழிகளை கூறி வருகிறதாம். அதோடு ஜிம்களில் உள்ள சவர் பாத் மற்றும் பயோடாய்லெட்டினை முடக்கியுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளராம்.

தண்ணீர் செலவை குறைக்க பல யோசனை

தண்ணீர் செலவை குறைக்க பல யோசனை

அதோடு இந்த நிறுவனங்களில் கேண்டீன்களில் தண்ணீர் அதிகம் செலவாவதை குறைக்க, சில்வர் பிளேட்களில் சாப்பிட்டால் அதை கழுவ அதிகம் செலவாகும் என மக்கும் பேப்பர் தட்டுகளை கொடுத்து வருகின்றவாம். அதோடு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கூட இதே முறைதான் பின்பற்றபடுகிறதாம். அதோடு கேண்டீங்களில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க, அதிக பாத்திரங்கள் உபயோகத்தை தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனவாம்.

டேங்கர்களில் தண்ணீர் சப்ளை

டேங்கர்களில் தண்ணீர் சப்ளை

சிறுசேரி ஐ.டி பார்க்கில் அமைந்துள்ள பைனான்ஷியல் சாப்ட்வேர் அன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாகராஜ் மைலாண்டா கூறுகையில், ஏற்கனவே ஐ.டி நிறுவனங்கள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க டேங்கர்களில் தண்ணீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் கழிவு நீரை மறு சுழற்சி செய்து கொண்டு பயன்படுத்தி வருகின்றன எனவும் கூறியுள்ளாராம்.

சென்னைக்கு ஒரு நாளைக்கு 850 MLD தண்ணீர் தேவை

சென்னைக்கு ஒரு நாளைக்கு 850 MLD தண்ணீர் தேவை

சென்னைக்கு ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர்ஸ் தண்ணீர் தேவை, ஆனால் தற்போது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் தினமும் சுமார் 300 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாகவே உள்ளது என்றும் கருதப்படுகிறது.

 இன்னும் 2 மாதங்களுக்கு நீளும்

இன்னும் 2 மாதங்களுக்கு நீளும்

இந்த நிலையில் வெதர் மேன் இன்னும் சில மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சனை நீளும் என்று மக்கள் மனதில் பீதியைக் கிளப்பியுள்ளது. ஆமாங்க.. பருவ மழையும் பொய்த்து போனாதால் தண்ணீர் பிரச்சனை நீளுகிறது. இந்த நிலையில் இன்னும் ஜுன் ஜீலை மாதம் வரையில் இந்த தண்ணீர் பிரச்சனை நீளலாம் என்றும் கருத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai IT companies turns to BYOD to water Scarcity

Chennai IT companies asked to employees to bring bring own disposable plates for home food.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X