சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி 2.0 அரசு பதிவியேற்றதிலிருந்தே மோடி அரசுக்கு பல பெரும் சவால்கள் காத்திருப்பதாக அறிக்கைகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், நடந்து முடிந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு வைத்துள்ளராம் பிரதமர் மோடி.

 

இது மிகப் பெரிய சவாலான பணி தான். ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இது சாதகமாகக் கூடியது தான் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளாராம்.

பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு திட்டக் கமிஷன் என்பதை நிதி ஆயோக் என மாற்றி இருந்தார். இந்த நிலையில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாம். ஆமாங்க மத்திய அரசின் இந்த நியமிக்கப்பட்ட நிதி இலக்கை அடைய மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம்.

மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை

மோடி பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள அந்தந்த மாநில முதல்வர்களுடனும் கலந்துரையாடி இருக்கிறார் பிரதமர் மோடி.

ஜி.டி.பிஐயை அதிகரிக்க மாவட்ட அளவில் கவனம் செலுத்துங்கள்

ஜி.டி.பிஐயை அதிகரிக்க மாவட்ட அளவில் கவனம் செலுத்துங்கள்

குறிப்பாக மாநிலங்கள் உற்பத்தி வளர்ச்சி என்னும் ஜி.டி.பி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும், இதனை அதிகரிக்க அனைத்து மாநிலங்களும், இதில் பங்கு அளிக்க வேண்டும். அதிலும் மாநிலங்கள் மாவட்ட அளவில் ஜி.டிபியை அதிகரிக்க முயற்சிகளை எடுக்கச் வேண்டும் எனவும் நரேந்திர மோடி கூறியுள்ளராம்.

ஜி.டி.பி வளர்ச்சியில் ஏற்றுமதி முக்கியம்
 

ஜி.டி.பி வளர்ச்சியில் ஏற்றுமதி முக்கியம்

வளர்ச்சியடைந்த நாடுகளில் ஜி.டி.பி என்பது, ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே சமயம் மத்திய அரசும், மாநில அரசும் தனி நபர் வருவாயை உயர்த்த ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாராம்.

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்

கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்

பிரதமர் மோடி நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்தும் பேசியுள்ளராம். குறிப்பாக 2024க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக மாநில அரசுகளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் மோடி.

காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்த வேண்டும்

காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்த வேண்டும்

இந்த திட்டத்தில் 2025க்குள் காச நோய் என்பது இருக்க கூடாது என்றும், முழுமையாக இந்த நோயை விரட்ட வேண்டும் என்றும் சுகாதார துறை அமைச்சகத்திடம் மோடி தெரிவித்துள்ளராம். அதோடு மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு வலியுறுத்தியுள்ளாராம் பிரதமர் மோடி.

விவசாயத்தில் சீர்திருத்தங்கள்

விவசாயத்தில் சீர்திருத்தங்கள்

விவசாயத்தில் சீர்திருத்தத்தை கொண்டு வர அறிக்கைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இது இன்னும் 2 - 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாம். இதன் மூலம் விவசாயத் துறையில் முன்னேற்றத்தை காண இது வழிவகை செய்யும் எனவும் கருதப்படுகிறது.

அறிக்கைகள் அளிக்கப்பட்டது

அறிக்கைகள் அளிக்கப்பட்டது

இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பஞ்சாப் சிங் அமரீந்தர் சிங் கலந்து கொள்ளவில்லையாம், எனினும் அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் வட இந்தியாவில் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது என்றும், எனவே தனது மாநிலத்தின் தண்ணீர் கட்டமைப்பு குறித்த வசதிகளை மேம்படுத்த பிரதமர் ஆதரவு வேண்டும் என்றும், அதோடு மாநிலங்களிடையே தண்ணீர் பிரச்சனையை தீர்க்க புதிய நதி நீர் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாராம்.

PM – KISAN திட்டத்தின் கீழ் நிதியை அதிகரிக்க வேண்டும்.

PM – KISAN திட்டத்தின் கீழ் நிதியை அதிகரிக்க வேண்டும்.

மேலும் PM - KISAN திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு ரூ.6000 லிருந்து ரூ.12000 வரையில் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிங் கூறியுள்ளராம். இதனால் விவசாயிகள் மிகுந்த பலன் அடைவார்கள் எனவும் கருதப்படுகிறது.

சில மாநில முதல்வர்கள் ஆப்சென்ட்

சில மாநில முதல்வர்கள் ஆப்சென்ட்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்ளவில்லையாம். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்தில், மாநில திட்டங்களுக்கு நிதி அளிக்க நிதி ஆயோக் அமைப்புக்கு நிதி அதிகாரம் இல்லாததால், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் எனக்கு எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறாராம்.

$5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி இலக்கு

$5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி இலக்கு

அதோடு ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி ஆகியவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது. அடுத்த 2024-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே லட்சியம் எனவும் மோடி அறிவித்துள்ளாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's NITI Aayog to target 5 trillion dollar Of "Vision 2024"

PM Narendra modi on Saturday said our Indian government vision 2024 at the NITI Aayog’s 5th council. Also he said the big goal to $5 trillion economy by 2024. It was very challenging but achievable.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X