40 லட்சம் பேரின் வேலையை காவு கேட்கும் மோடி அரசின் இ-பைக் (E-Bike) சட்டம்! பெட்ரோல் பைக்குகளுக்கு தடா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ் மற்றும் டிவிஎஸ் எப்போதுமே ஒன்று சேராத இரு துருவ போட்டியாளர்கள்.

 

சமீபத்தில் தங்கள் பிசினஸ் தொடர்பாக நீதிமன்றப் படி ஏறி சண்டை எல்லாம் போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் அரசை எதிர்த்து என்பது தான் வரவேற்க வேண்டிய நல்ல விஷயம்.

மோடி தலைமையிலான 2.0 அரசு கடகடவென பல திட்டங்களை அரிபரியாகக் கொண்டு வந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் பழைய படிக்குக் கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் இப்போது முன்னிலை பிடித்திருக்கும் பிரச்னை இ பைக் (E-Bike)

புதிய பிரச்னை

புதிய பிரச்னை

அந்த வரிசையில் இப்போது இ-பைக் (E-Bike)பிரச்னைகளைக் கையில் எடுத்திருக்கிறார்கள். வரும் 2023-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மூன்று சக்கர வாகனங்களுக்கு தடை போடப் போகிறார்களாம். அதே போல 150 சிசிக்கு உட்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு வரும் 2025-ம் ஆண்டுக்குப் பிறகு முழு தடை போடப் போகிறார்களாம். இப்படி ஒரு விஷயத்தை கொண்டு வர இருப்பதைத் தெரிந்த உடனேயே பஜாஜ் மற்றும் டிவிஎஸ் தங்கள் தரப்பு சிரமங்களைச் சொல்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

"இப்படி தடாலடியாக அரசு இ-பைக் (E-Bike)-க்கை கொண்டு வர நினைப்பது, மக்களுக்கு மட்டும் பெரும் சுமையாக இருக்காது. ஒட்டு மொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையையே தடம் புரட்டிவிடும். இந்த ஆட்டோமொபைல் துறையை நம்பி இருக்கும் 40 லட்சம் ஊழியர்களின் வேலைகள் முழுமையாக பறி போகும்" என கள எதார்த்தத்தை போட்டு உடைத்திருக்கிறார் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேனு ஸ்ரீனிவாசன்.

நிலையான மாற்றம்
 

நிலையான மாற்றம்

அதோடு "இந்தியாவில் இ-பைக் (E-Bike)-க்கள் வரலாம், ஆனால் அந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இ-பைக் (E-Bike) மாற்றத்தினால் ஏற்படும் லாப நஷ்டங்கள் சரிகட்ட முடியும். அதோடு இந்த மாற்றம் ஒரு நிலையானதாகவும், நீண்ட நாட்களுக்கு இந்த டெக்னாலஜி மாற்றத்தைப் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்" எனவும் கூறி இருக்கிறார் வேனு ஸ்ரீனிவாசன்.

எவ்வளவு செலவு

எவ்வளவு செலவு

"ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறை பாரத் ஸ்டேஜ் 6-க்காக நிறைய செலவு பண்ணி இருக்கோம். வரும் ஏப்ரல் 2020-ல இருந்து வெறும் பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்களத் தான் விக்கணும். இதுக்கே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு பண்ணி இப்ப தான் உற்பத்தி ஆலைகளை எல்லாம் மாத்தி அமைச்சோம். இப்ப வந்து திடீர்ன்னு இ-பைக் (E-Bike) மட்டும் தான் விக்கணும்-ன்னு சொன்னா போட்ட காச எப்பங்க எடுக்குறது" என நஷ்டக் கணக்கு சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

1 லட்சம் கோடி ரூபாய்

1 லட்சம் கோடி ரூபாய்

இந்தியாவுல ஒரு வருஷத்துக்கு 7 லட்சம் மூன்று சக்கர வாகனம் விக்கிது, அதே மாதிரி 150 சிசி-க்கு கீழ இருசக்கர வாகன விற்பனைய எடுத்துக்கிட்டா ஒரு வருஷத்துக்கு 1.90 கோடி வண்டி விக்கிறோம். இரு சக்கர வாகன விற்பனையில இருந்து மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் இந்திய ஜிடிபியா கணக்குல ஏறுது. இப்ப திடீருன்னு இ-பைக் (E-Bike)சட்டம் கொண்டு வந்தா என்னங்க செய்யுறது..?

இருப்பதற்கே வசதி இல்லையே

இருப்பதற்கே வசதி இல்லையே

இன்னும் இந்தியாவில் இ-பைக் (E-Bike) பெரிய அளவுகளில் வரவில்லை. எனவே இவ்வளவு வேகமாக இ-பைக்குகளை கொண்டு வர, இந்திய ஆட்டோமொபைல் துறையில் நமக்கு நல்ல அனுபவமோ அல்லது இ-பைக் (E-Bike)களுக்கான தேவையோ இப்போதைக்கு இல்லை. இந்திய மூன்று சக்கர வாகன விற்பனையில் தாதாவாக இருப்பது பஜாஜ் ஆட்டோ தான். ஆட்டோக்களில் இயற்கை எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கே இங்கு போதுமான எரிவாயு நிரப்பும் பங்குகள் இல்லை. இது தான் இந்திய ஆட்டோமொபைல்களின் நிலை.

சார்ஜிங் பாயிண்டுகள் எங்கே.?

சார்ஜிங் பாயிண்டுகள் எங்கே.?

இப்படி இந்தியாவில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் இயற்கை எரிவாயுவை நிரப்பவே போதுமான வசதிகள் இல்லாத போது... அன்றாடம் மின்சாரத்தில் இயங்கப் போகும் வாகனங்களுக்கு போதுமான சார்ஜிங் பாயிண்டுகள் இல்லாமல் அடுத்த 3 - 5 ஆண்டுகளில் அனைத்தையும் இ-பைக் (E-Bike)-க்குகளாக மாற்றப் போகிறார்கள் என்றால்... எப்படி விற்க முடியும் என லாஜிக் பிடித்திருக்கிறது பஜாஜ் நிறுவனம்.

சீன உதாரணம்

சீன உதாரணம்

சீனாவில் 2015-ம் ஆண்டு ஒரு நன்னாளில் ஒட்டு மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனைக்கு தடா போட்டுவிட்டார்கள். அதனால் பெரிய அளவில் சீனாவின் ஆட்டோமொபைல் சந்தை அடி வாங்கியது. இந்த அடி அவர்கள் பொருளாதாரத்திலும் பலமாக எதிரொலித்தது. இந்த முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களின் உள்நாட்டு தொழிற் துறை தான் என்பதையும் சொல்லி அன்லிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள்.

மோடியின் 2.0 அரசின் காதில் இந்த லாப நஷ்ட கதறல்களும், வாகன உற்பத்தியாளர்களின் லாஜிக் கேள்விகளும் விழுமா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2025 only E-Bike available in india if amended 40 lakh people fired from automobile industry

2025 only e-bikes available in India if amended 40 lakh people fired from automobile job
Story first published: Monday, June 17, 2019, 15:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X