மிரட்டும் தண்ணீர் பஞ்சம்.. களைகட்டும் தண்ணீர் கேன் விற்பனை.. அதிகரிக்கும் RO விற்பனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும், இந்த நிலையில் பல தொழில்கள் முடங்கும் நிலையில் உள்ளன. அதோடு அத்தியாவசிய தேவையான உணவுகளை வழங்கி வரும் ஹோட்டல்கள் தனது சேவையை குறைத்தும் வருகின்றன.

 

குறிப்பாக ஓ.எம்.ஆர் ரோட்டில் உள்ள ஐ.டி நிறுவனங்கள், தண்ணீர் பிரச்சனையால் தங்களது நிறுவனம் சார்பில் இயங்கி வரும் கேண்டீன் எனபடும் உணவகங்கள் சேவையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனவாம்.

ஏற்கனவே ஹோட்டல்கள் உணவு சேவையை குறைத்துக் கொண்டுள்ள நிலையில், ஐ.டி நிறுவனங்கள் உணவு வழங்கும் கேண்டீன்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், ஹோட்டல்களில் உணவு அருந்தும் இளைஞர்களின் நிலை திண்டாட்டாமாக தான் உள்ளது.

அமோக விற்பனை

அமோக விற்பனை

இது ஒருபுறம் தண்ணீர் பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருந்தாலும், மறுபுறம் தண்ணீர் கேன் விற்பனையும் அமோகமாக போய்க் கொண்டிருக்கிறதாம். சாதரணமாக ஒரு கேன் தண்ணீர் 30 ரூபாய்க்கு போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது 40 - 60 என்ற நிலைக்கு செல்கின்றன. அத்தியாவசிய தேவையான தண்ணீரை தவிர்க்க முடியாத சூழ்நிலையால் மக்களும் வாங்கித் தானே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீர் கேன்களுக்கு தட்டுப்பாடு

தண்ணீர் கேன்களுக்கு தட்டுப்பாடு

எவ்வளவு விலை கொடுத்தேனும் தண்ணீரை வாங்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில், இந்த தண்ணீர் கேன்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். ஆமாங்க.. 100 கேன் தண்ணீர் வரவேண்டிய இடத்தில் 70 - 80 கேன்கள் தான் தண்ணீர் வருகிறதாம். முதலில் அனைத்து மக்களும் தண்ணீர் கேன்களை வாங்க மாட்டார்கள். ஆனால் தற்போது கார்ப்பரேஷன் தண்ணீரும் வராததால் குடி தண்ணீருக்காக அனைவரும் தண்ணீர் கேன்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது.

அமோக விற்பனை
 

அமோக விற்பனை

சென்னையில் தற்போது நிலவி வரும் இந்த தண்ணீர் பிரச்சனையால், தண்ணீர் கேன்களை தொடர்ந்து வாங்க முடியாத நிலையால், பலரும் ஆர்.ஓ பிளான்ட்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் முன்னர் வாரத்திற்கு 10 ஆர்.ஓ பிளான்ட்கள் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 13 -15 வரை விற்பனையாகி வருகின்றவாம். அதே நேரம் ஆர்.ஓ பிளான்ட் வைத்திருக்கும் சிலர் தண்ணீர் நிறைய வீணாவதால் அதை நிறுத்திவிட்டு தண்ணீர் கேன்கள் வாங்கும் சூழ்நிலையும் நிலவி வருகிறது.

தண்ணீர் பிரச்சினையால் சிக்கன நடவடிக்கை

தண்ணீர் பிரச்சினையால் சிக்கன நடவடிக்கை

சில வீடுகளில் ஆர்.ஓ பிளான்ட்கள் மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு முடிந்த பின்னர் வெளியேற்றப்படும் தண்ணீரை, மற்ற உபயோகங்களுக்காக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக குளிப்பதற்கும், பாத்திரம் கழுவது, குளிக்க என பல வகையில் இந்த நீரைப் பயன்படுத்து வருகின்றனர்.

ஆர்.ஓவுக்கு மாறிய மருத்துவமனைகள்

ஆர்.ஓவுக்கு மாறிய மருத்துவமனைகள்

சென்னையில் சில இடங்களில் மருத்துவமனைகளில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையால் தண்ணீர் கேன் கள் வாங்க முடியாத நிலை நிலவி வருகிறது. ஒரு புறம் தண்ணீர் கேன் களின் விலை அதிகரித்திருந்தாலும், மறுபுறம் தண்ணீர் கேன் களுக்கு தட்டுப்பாடு. இதனாலேயே பல தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆர்.ஓ பிளான்ட்களுக்கு மாறியுள்ளனவாம்.

தண்ணீர் இல்லை, மதிய உணவும் இல்லை

தண்ணீர் இல்லை, மதிய உணவும் இல்லை

சென்னையில் பல பிரபலமான ஹோட்டல்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையால் மதிய உணவை தவிர்த்து வருகின்றனவாம். இதுவே சில இடங்களில் ஹோட்டல்களுக்கு லீவு விடும் நிலையும் நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்களை நம்பி இருக்கும் இளைஞர்களின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது.

மாணவர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டும்

மாணவர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டும்

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளையும் விட வில்லை இந்த தண்ணீர் பிரச்சனை. ஆமாங்க.. பள்ளிகளில் உள்ள தண்ணீர் பிரச்சனையால் மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் போது கட்டாயம் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று சுற்றறிக்கை தரப்பட்டுள்ளதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai IT forms cut down their operation for water crises

Chennai IT firms and restaurents have cut down their operations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X