நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு மீண்டும், 15 பேரை நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க வீட்டுக்கு போங்க சொல்லி கட்டாய ஓய்வு அளித்து அனுப்பி இருக்காம்.

 

நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே பல புதிய திடீர் மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கும் நிலையில், இதன் ஒரு பகுதியாக கடந்த வாரமே அதிகப்படியான லஞ்சம் வாங்கினவர்கள், மிரட்டி பணம் வாங்கினவர்கள், மற்றும் பாலியல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவர்கள் என ஒரு லிஸ்டை தரம் பிரித்து அதில் 12 பேரை வேலையை விட்டு நீக்கியது.

 நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு

அதில் பெரும்பான்மையானவர்கள் வருமான வரி துறை சார்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் இந்தமுறை கொஞ்சம் மாற்றம் செய்து ஊழல் புகாருக்கு ஆளான வருமான வரித்துறை மற்றும் உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மோடி 2.0 பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். இந்த நிலையில் வருமானவரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரித்துறை அதிகாரிகள் மீது அவ்வப்போது ஊழல் புகார்கள் வருவது உண்டு.

அதன் படி ஒருவாரத்திற்கு முன்பாக லஞ்ச புகாருக்கு ஆளான வரித்துறை அதிகாரிகள் பலருக்கு, கட்டாய ஓய்வை அளித்தது மத்திய அரசு. இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இவர்களின் வேலை பறிபோயிருக்கிறது. இது மேலும் உயர்மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

 

இந்த கட்டாய ஓய்வளிப்பில் CBIC முதன்மை ஆனையர் அனுப் ஸ்ரீ வாஸ்தவா, கமிஷ்னர்கள் அதுல் தீட்சித், சன்சார் சந்த், ஜி ஸ்ரீ ஹர்ஷா மற்றும் வினய் பிரிஜ் அதோடு CBIC கூடுதல் ஆணையர் அசோக் ஆர் மஹிதா மற்றும் விரேந்திர குமார், துணை ஆணையர் அமரே ஜெயின், கூட்டு ஆணையர் நலின் குமார், உதவி கமிஷனர் எஸ்.எஸ். பபானா, எஸ்.எஸ் பிஷ்ட் மற்றும் வினோத் குமார் சங்க உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.

இவர்களோடு கூடுதல் ஆணையர் ராஜீ செக்கர், துணை ஆணையர் அசோக் குமார் அஸ்வால், உதவி ஆணையர் மொகமட் அல்டாஃப் ஆகியோர் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: retired ஓய்வு
English summary

Govt compulsorily retires 15 senior indirect tax officers

Indian government has compulsorily retired almost 15 seniors
Story first published: Tuesday, June 18, 2019, 17:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X