தண்ணீர் பிரச்சினையால் தடுமாறும் சென்னை... மூடப்படும் தொழிற்சாலைகளால் பறிபோகும் வேலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2020ஆம் ஆண்டில் சென்னை கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக சமூக ஆர்வலர்களும் நிதி ஆயோக் அமைப்பும் தொடர்ந்து எச்சரித்து வந்ததை தமிழக அரசு உதாசீனப்படுத்தியாதால் நிலத்தடி நீர் வளமே காணாமல் போய் சென்னை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் தவித்து தள்ளாடி வருவதோடு, சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களும், தொழில் நிறுவனங்களும் தங்களின் அன்றாட நீர்த் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பியுள்ள சூழலில் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்த பின்னரும், அதைப் பற்றிய எந்த ஒரு எச்சரிக்கையும் மழை நீரை சேமித்துவைக்க வேண்டிய அவசியத்தை உணராமல், வந்த பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சிய மனப்பான்மையால் தொழில் வளமும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு இப்பொழுதாவது முழித்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகள் உள்பட அனைத்து நீர் நிலைகளையும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு ஏரி, குளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவிட்டால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் வேறு நகரங்களுக்கு மூட்டை கட்டிக்கொண்டு போய்விட்டால், அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கதி என்னாவது.

மாப்ள பட்ஜெட்ல ஏதாவது புது அறிவிப்பு வருமா? - அல்வா தராம இருந்தா சரிதான்

ரெட் அலர்ட் எச்சரிக்கை

ரெட் அலர்ட் எச்சரிக்கை

இன்றைக்கு உலகம் முழுவதுமே தண்ணீர் பிரச்சனையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கையில், இந்தியாவில் இன்னும் மோசமான நிலைமையை சந்திக்கும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதமே எச்சரித்திருந்தது. அதிலும் சென்னை மற்றும் பெங்களூரூ உள்பட 21 நகரங்களில் வரும் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிலத்தடி நீரே இல்லாமல் போய்விடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருந்தாலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான எந்தவிதமான பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

வெறும் காத்துதாங்க வருது

வெறும் காத்துதாங்க வருது

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் நீர்த்தேவைக்கு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போய்விட்ட காரணத்தால், என்னதான் தரம் வாய்ந்த மோட்டாரை வைத்து நீலை உறிஞ்ச நினைத்தாலும் வெறும் காற்று மட்டுமே வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிக்குமானால் சென்னை மற்றொரு கேப் டவுன் நகரமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று நிதி ஆயோக் எச்சரித்தது.

குளிக்கக்கூடாது
 

குளிக்கக்கூடாது

தற்போது சென்னையில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போன காரணத்தினால் வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் குளிக்கக்கூடாது, துணிமணிகள் துவைக்கக்கூடாது, விருந்தினர்கள் வரக்கூடாது என்று சொல்லிவிட்டனர். இதே நிலை நீடித்தால் வெளியூர்களில் இருந்து சென்னைக்க செல்ல வேண்டுமானால் கையோடு ஒரு குடம் தண்ணீரோடு தான் செல்லவேண்டியதிருக்கும்.

சம்பளத்தில் பிடிக்கப்படும்

சம்பளத்தில் பிடிக்கப்படும்

சென்னையில் தற்போது நிலவிவரும் கடும் தண்ணீர் பஞ்சத்தினால், சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யச் சொல்லிவிட்டன. சில நிறுவனங்கள் தண்ணீர் சிக்கனத்திற்காக, எவ்வளவு தண்ணீரை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப மீட்டரை வைத்துக்கொண்டு அதற்கேற்ப அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடிவெடுத்துள்ளன. இந்த நிலைமை நிலத்தடி நீர்மட்டம் சரியாகும் வரையிலும் தொடரும் என்று தெரிகிறது.

எப்போ சரியாகும்

எப்போ சரியாகும்

தண்ணீர் பஞ்சத்தால் சென்னையில் பெரும்பாலான ரெஸ்டாரெண்ட்டுகளும், ஹோட்டல்களுமே மதிய உணவு விற்பனையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. இதனால் இதில் வேலை செய்த ஊழியர்களும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் சரியாகும் வரையில் இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவ்வகையான ரெஸ்டாரெண்ட்டுகளில் சாப்பிட்டவர்கள் தற்போது தள்ளுவண்டி கடைகளை நாடி வருகின்றனர்.

தண்ணீர் பஞ்சத்தில் தொழிற்சாலைகள்

தண்ணீர் பஞ்சத்தில் தொழிற்சாலைகள்

நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய்விட்டதால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் அனைத்துமே தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக சிக்கல்களை சந்தித்து வருகின்றன. சென்னைக்கு அருகிலுள்ள ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற கார் உற்பத்தி தொழிற்சாலைகளும், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்களும், உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும்இ ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.

கழிவுநீர் மறுசுழற்சி

கழிவுநீர் மறுசுழற்சி

சென்னையைச் சுற்றியுள்ள பெரும் தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலை செய்துவரும் வேளையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்ட காரணத்தினால், தினசரி பயன்பாட்டிற்கும் பராமரிப்பு பணிகள் போன்றவற்றிற்கும் அத்தியாவசியத் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி உள்ளன. போதாக்கறைக்கு மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்துமே கழிவு நீரைக்கூட மறுசுழற்சி (Reverse Osmosis) செய்து மீண்டும் பராமரிப்புப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் வரையிலும் இந்த நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 நிதி ஆயோக் எச்சரிக்கை

நிதி ஆயோக் எச்சரிக்கை

ஒருவேளை வடகிழக்கு பருவ மழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாமல்போய், நிதி ஆயோக் எச்சரித்தது போல் வரும் 2020ஆம் ஆண்டிற்குள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் அற்றுப்போய்விட்டால், நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அப்படி ஒருவேளை நடந்தால், தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வேறு நகரங்களுக்கு தங்களின் ஜாகையை மாற்றிக்கொண்டு போனால் என்னாவது.

லட்சக்கணக்கான வேலை பறிபோகும்

லட்சக்கணக்கான வேலை பறிபோகும்

அப்படி ஒருவேளை நடக்குமானால் மேற்கண்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை மற்றும் அவரிகளின் எதிர்காலம் என்னவாகும். இதை எல்லாம் கொஞ்சமேனும் ஆளும் அரசு நினைத்துப்பார்த்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் குடிமராமத்து செய்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் பாரபட்சமோ தயை தாட்சண்யமோ பார்க்கக்கூடாது.

தமிழகத்தின் நீர் மேலாண்மை

தமிழகத்தின் நீர் மேலாண்மை

நாம் எதற்கெடுத்தாலும் வெளிநாட்டவர்களை உதாரணமாக சொல்லி பெருமைப் பட்டுக்கொள்கிறோம். ஆனால் அவர்களோ தமிழர்களின் அறிவியல், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றையே பாடமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஏ அண்டு எம் (A & M) பல்கலைக்கழகமோ, தமிழகத்தின் பாரம்பரிய நிலத்தடி நீர் சேமிப்பு முறைகளைத்தான் பாடமாக வைத்துள்ளார்கள். முற்றிலும் வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆனால் தலைநகரான சென்னையிலோ கடும் தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

வணிக வளாகங்களுக்கு முன்னுரிமை

வணிக வளாகங்களுக்கு முன்னுரிமை

ஆனால்... நம் தமிழக அரசியல் வாதிகளும், ஆட்சியாளர்களும், இருக்கின்ற நீர் நிலைகளை எல்லாம் அழித்தொழித்துவிட்டு அவற்றில் வணிக வளாகங்களையும் பண்ணை வீடுகளையும் கட்டுவதற்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

அது என்னவோ தெரியவில்லை, ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டுமே ஒரு தத்துவம் மண்டையில் அரித்துக்கொண்டிருக்கும்.

 புரட்சி வெடிக்கும்

புரட்சி வெடிக்கும்

மக்களே, மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதே மக்களாட்சி. இதை ஆட்சியாளர்கள் மறந்தேனோ. ஒரு வேளை தண்ணீருக்காக மீண்டும் மெரீனா புரட்சி ஏதாவது ஏற்பட்டால் தான் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் போல. இல்லாவிட்டால், ஆட்சியாளர்கள் சொல்வதுபோல், சென்னையில் தண்ணீர் பஞ்சம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இதெல்லாம் எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதிதான். சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி ஆழத்தில் உள்ளது. வரும் 2050ஆம் ஆண்டு வரையிலும் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே வராது என்று மக்களின் காதுகளில் பெரிய அளவில் ரோஜாப் பூ மாலையை சுற்றுவார்கள். மக்களும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள். தமிழ் நாட்டு மக்களுக்கு மறதி நோய் எப்பவும் கொஞ்சம் அதிகம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai Water Scarcity: Impact of Chennai Industries

The Government of Tamil Nadu has ignored the persistent threat of a severe water shortage by the social activists and NGOs by 2020 over the past few years, causing the loss of ground water resources and causing the unprecedented water shortage in Chennai and endangering the industries around Chennai.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X