ரூ.57000 கோடி காச கை நீட்டி வாங்குறப்ப நல்லா இருந்துச்சா! Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : Anil Ambani- க்கு இது போதாத காலமே, தொடர்ந்து அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார். ஒரு புறம் கடன் பிரச்சனை. மறுபுறம் கடன் பிரச்சனையால் தனது பில்லியனர் இடத்தை விட்டு கோடிஸ்வரனாகும் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரும், மிகப்பெரிய நிறுவனமான இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை திவால் நிறுவனமாக அறிவிக்குமாறு நோட்டீஸ் கொடுத்துள்ளாராம் அனில் அம்பானி.

இதன் மூலம் பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிடம் பெற்ற கடனை ஏப்பமிட முயற்சிக்கிறார் என்றும் பல விதமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆமாங்க குறிப்பா ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை மட்டும் 57,382.5 கோடி ரூபாயாம். இதனால் விஜய் மல்லையா நீரவ் மோடிக்கு அடுத்த படியாக அந்த லிஸ்டில் அனில் அம்பானியும் வந்துவிடுவாறோ என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மாப்ள பட்ஜெட்ல ஏதாவது புது அறிவிப்பு வருமா? - அல்வா தராம இருந்தா சரிதான் மாப்ள பட்ஜெட்ல ஏதாவது புது அறிவிப்பு வருமா? - அல்வா தராம இருந்தா சரிதான்

 கடன் கட்ட முடியலயா?

கடன் கட்ட முடியலயா?

அனில் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பட்ட கடனை திரும்ப செலுத்துவதற்காக, கடந்த ஆண்டே இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது.சுமார் 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த சொத்துக்களை விற்க முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிக் கொடுக்கவும் முடியவில்லை. ஆக ரிலையன்ஸ் நிறுவனம் மேலும் மேலும் கடனாளி ஆகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளாராம்.

ரிலையன்ஸ் நிறுவனம் திவால் நிறுவனமா அறிவியுங்க?

ரிலையன்ஸ் நிறுவனம் திவால் நிறுவனமா அறிவியுங்க?

இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தது. குறிப்பாக கடனை வாங்கி வாங்கி மற்ற கடன்களை அடைத்து வந்தார் இந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி. எனினும் தனது சொத்தை விற்று முழுக்கடனை அடைக்க நினைத்தேன் அது முடியவில்லை. ஆக தனது சொத்துக்கு சொத்தாக இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை திவால் நிறுவனமாக அறிவிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளாராம்.

 சீனா வங்கிகளுக்கும் தரணும்?
 

சீனா வங்கிகளுக்கும் தரணும்?

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை மட்டும் 57,382.5 கோடி ரூபாய் இருக்கிறது எனவும், இதில் இடைக்கால தீர்வு நிபுனர்களால் (Interim Resolution Professional) உரிமை கோரப்பட்ட கடன் 49,223.88 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்நிறுவனத்துக்கு கடனுதவி அளித்த சீன மேம்பாட்டு வங்கி, எக்ஸிம் பேங்க் ஆப் சீனா உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 15,053.23 கோடி ரூபாய் தர வேண்டுமாம். எனினும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது நிறுவன சீரமைப்பு திட்டம், அதாவது திவால் மசோதா நடைமுறை சட்டத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் பட்டியல்

கடன் பட்டியல்

தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தான் மற்றவர்களுக்கு தர வேண்டிய கடன்கள் குறித்து மும்பை பங்கு சந்தைக்கு அளித்த நிதிக்கடன் படியலின் படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.4825.82 கோடியும், எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ரூ.4758 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.2531.87 கோடியும், இதோடு மேடிசன் பசிபிக் டிரஸ்ட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2,531.53 கோடியும் தர வேண்டுமாம்

கடன் கொடுத்தோர் பட்டியல்?

கடன் கொடுத்தோர் பட்டியல்?

சிண்டிகேட் வங்கிக்கு ரூ.1225 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.1126 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.1410 கோடியும் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதோடு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.1009.34 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவின் ரூ.979.17 கோடி உள்ளிட்டவையும் தரப்பட வேண்டுமாம்.

நீளும் பட்டியல்

நீளும் பட்டியல்

இது வரை மொத்தம் 53 பேர் மொத்தமாக ரிலையன்ஸ் குழுமத்திற்கு கடன் வழங்கியுள்ளனராம். இதில் அனில் அம்பானி குழுமம், ரிலையன்ஸ் குளோபல்காம் லிமிடெட் (பெர்முடா), ரிலையன்ஸ் ரிலையன்ஸ் ஹெச்.ஆர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட், ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடன்களும் சேர்ந்துள்ளனவாம். ஆனால் இந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் கடன் தொகையான ரூ.7000.63 கோடி கடனை ஐ.ஆர்.பி அங்கீகரிக்கவில்லையாம்.

ஆர்,காம் தொடர் நஷ்டம்

ஆர்,காம் தொடர் நஷ்டம்

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் கூட நிகர நஷ்டமாக ரூ.7,767 கோடியை பதிவு செய்துள்ளது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாத்தில் ரூ.19,776 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர் நஷ்டத்தின் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமாகும்.

நெருக்கி வரும் கடன்காரர்கள்

நெருக்கி வரும் கடன்காரர்கள்

தனது சொத்தையும் விற்க முடியாத பட்சத்தில், கடன் மேலும் வட்டிக்கு வட்டி என குட்டி போட்டு வருகின்றனவாம். ஒரு புறம் கடன் பிரச்சனையால் இருக்கும் அனில் அம்பானியை தற்போது சீனா வங்கிகள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனவாம். இதன் காரணமாகவே ஆர்.காம் திவால் நிறுவனமாக அறிவிக்க கூறப்பட்டுள்ளது என்றும் கருதப்படுகிறது.

இனி பில்லியனர் இல்லை

இனி பில்லியனர் இல்லை

அனில் அம்பானி ஒரு காலத்தில் உலக அளவில் பணக்காரர்கள் பட்டியியலில் இடம் பெற்றார். இந்த நிலையில் தற்போது தொடர் நஷ்டத்தின் காரணமாக பில்லியனர் இடத்திலிருந்து நழுவி கோடிஸ்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance communication creditors are urging anil ambani to pay rs 57000 crore debt

Reliance communication creditors are urging anil ambani to pay rs 57000 crore debt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X