மகாராசா 100 ஏக்கர் தென்னந்தோப்பையா நடு கழுத்துல போட்டிருந்தீங்க? 758 கோடிக்கு ஏலம் விட்ட christie's!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் தனிப்பட்ட நகைகளில் பல பிரமாதமான ஆபரணங்கள் மற்றும் கலை பொருட்கள், சில தினங்களுக்கு முன் நியூயார்க் நகரில் க்ரிஸ்டீஸ் (christie's) ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டு விற்றுக் கொடுக்கப்பட்டன.

 

இந்த ஏலத்தில் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் தனிப்பட்ட நகைகளோடு, பல இந்திய கலை பொருட்கள், நகைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர கைவினைப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

ஹைதராபாத் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் சம்ரதாய வாள், தொடங்கி முத்து மணி மாலைகள் வரை பலதும் ஏலம் விடப்பட்டன. மொத்த ஏலத் தொகையாக சுமார் 758 கோடி இந்திய ரூபாய்க்கு நகைகள் மற்றும் கலை பொருட்கள் விற்கப்பட்டிருக்கிறதாம். அமெரிக்க டாலரில் 109 மில்லியன் டாலரை இந்த நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்றிருக்கிறார்களாம்.

ஏலம் போனவைகள்

ஏலம் போனவைகள்

நிஜாமின் கை வேலைப்பாடுகள் செய்த குறுவாள் - 13.4 கோடி ரூபாய், Mirror of Paradise எனும் 52.58 கேரட் வைரக் கல் - 45 கோடி ரூபாய், பழங்காலத்து வைர நெக்ஸஸ் - 17 கோடி ரூபாய், ஆர்காட் 2 வைரம் - 23.5 கோடி ரூபாய் என ஏலம் போன நகைகளில் பலவும் கோடி கணக்கில் தான் விலை கேட்டிருக்கிறார்களாம்.

இந்திய நகைகளில் அதிகம்

இந்திய நகைகளில் அதிகம்

இதுவரை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து ஏலம் விடப்பட்ட இந்திய கலை ஆபரணங்கள் மற்றும் முகலாயப் பொருட்களிலேயே அதிக தொகைக்கு ஏலம் போனது இந்த ஏலம் தான். மொத்தம் 758 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்கள் ஏலம் போனதாகச் சொல்கிறது க்ரிஸ்டீஸ் நிறுவனம்.

ஒருவரின் தனிப்பட்ட கலெக்‌ஷன்
 

ஒருவரின் தனிப்பட்ட கலெக்‌ஷன்

அதோடு நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் நகைகள், ஆபரணங்கள், கலை பொருட்கள் விற்று கிடைத்த தொகை தான் இதுவரை தனி நபர்களின் பொருட்களுக்கு கிடைத்த இரண்டாவது பெரிய தொகை எனவும் பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்கள் க்ரிஸ்டீஸ் நிறுவனத்தினர்கள்.

ராஜ குடும்பத்தினர்கள்

ராஜ குடும்பத்தினர்கள்

நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் நகைகளோடு மற்ற இந்திய நகைகள் சேர்த்து அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு முடிக்க சுமார் 12 மணி நேரத்துக்கு மேல் ஆனதாம். இந்த ஏலத்தில் ஜெய்பூர், இந்தூர், பரோடா போன்ற இந்தியாவின் பல முக்கிய ராஜ குடும்பத்தினர்கள் பங்கேற்றார்களாம். இந்தியா மட்டுமின்றி மற்ற 44 நாடுகளில் இருந்தும் ஏலம் கேட்க பணக்காரர்கள் விமானம் ஏறி வந்திருந்ததாகவும் க்ரிஸ்டீஸ் (christie's) சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: auction ஏலம்
English summary

christie's auctioned hyderabad nizams personal jewelery collection auctioned in newyork

christie's auctioned hyderabad nizams personal jewelery collection auctioned in newyork
Story first published: Saturday, June 22, 2019, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X