புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கும் தனியார் நிலங்கள்.. தொங்கலில் மோடியின் கனவு திட்டம்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : பிரதமர் மோடியின் கனவு திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தால் பல தனியார், பொது நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக 13.36 ஹெக்டேரில் உள்ள 54,000 மாங்குரோவ் காடுகள் பாதிக்கும் எனவும் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் Diwakar Raote கூறியுள்ளார்.

சிவ் சேனா சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இது கூறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்த மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர், இந்த புல்லட் ரயிட் திட்டத்தால் அதிகளவு மரங்கள் வெட்டுவது இருக்காது. அதோடு மும்பையில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் குறையும் என்றும் கூறியுள்ளாராம்.

அதோடு அதிக உயரமான தூண்கள் மூலம் செல்லும் இந்த பாதையால் சுற்று சூழலுக்கும் பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளாராம்.

விவசாயிகள் ஆர்வம்

விவசாயிகள் ஆர்வம்

அவ்வாறு இந்த திட்டத்தில் மூலம் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஐந்து புதிய மரங்களை நட வேண்டும் என்றும் மாநில அரசு முன்மொழிந்துள்ளதாகவும் திவாகர் கூறியுள்ளார். அதே சமயம் இந்த புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலங்களை தகுந்த ஊதியத்தோடு ஒப்படைக்க நில உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் எழுத்து பூர்வமாக கூறியுள்ளராம்.

புல்லட் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி

புல்லட் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி

இந்த புல்லட் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி எனவும், இதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான (JICA) இந்த நிறுவனத்திற்கு நிதியையும் அளிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த திட்டம் அடுத்த 2023 ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் நிலமும் கையகப்படுத்துதல்

தனியார் நிலமும் கையகப்படுத்துதல்

இந்த புல்லட் ரயில் திட்டத்திற்காக சுமார் 1,379, ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும், இதில் குஜராத் மாவட்டத்தில் மட்டும் 724.13 ஹெக்டேர் தனியார் நிலமும், இதுவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் 270.65 ஹெக்டேர் தனியார் நிலமும், பால்கர் மாவட்டத்தில் மட்டும் 188 ஹெக்டேர் தனியார் நிலமும் கையகபப்டுத்த உள்ளதாம் மத்திய அரசு.

எல்லா மாவட்டத்திலும் பாதிப்பு உண்டு

எல்லா மாவட்டத்திலும் பாதிப்பு உண்டு

குறிப்பாக பால்கர் மாவட்டத்தில் மட்டும் 3,498 பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதே தானே மாவட்டத்தில் 6589 விவசாயிகளுக்கு சொந்தமான 84.81 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதில் 2.95 ஹெக்டேர் நிலம் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mumbai- Ahmedabad bullet train project to affect 54,000 mangroves and private lands

Mumbai- Ahmedabad bullet train project to affect 54,000 mangroves and private lands
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X