Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Automation நாளைய உலகின் நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வேலைப் பளுவை பெரிய அளவில் குறைத்துக் கொண்டிருக்கிறது. அயராத, உற்பத்தியில் ஈடுபட்டு மனிதர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் அது மனிதர்களின் வேலைக்கு உலை வைக்கும் விதத்தில், அளவுக்கு அதிகமாக, அதிவேகமாக, அசாதாரணமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உதாரணம் Artificial Intelligence என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு.

உலக வங்கியின் கணிப்புப் படி இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் 3-ல் 2 பேர் (66 சதவிகிதம் பேர்), இந்த Automation-னால் தங்கள் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்கிறது.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

Osea Giuntella மற்றும் Tianyi Wang என இருவர் செய்த ஆய்வறிக்கையை IZA Institute of Labour economics என்கிற அமைப்பு பிரசூரித்திருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் சீனாவில் Automation பயன்படுத்தியதால், சீன தொழிலாளர் சந்தைகளில் என்ன மாதிரியான மாற்றங்கள் வந்தன என்பதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்களாம்.

ஒப்பீடுகள்

ஒப்பீடுகள்

இந்த ஆய்வறிக்கையில், 2000 - 2016-ம் ஆண்டு வரை எந்த எந்த நாடுகளில், எவ்வளவு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன என சர்வதேச ரொபாட்டிக்ஸ் சம்மேளனத்தில் இருந்து கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்களாம். அதோடு சீனாவில் வேலைவாய்ப்பு மற்றும் கூலி தொடர்பாக சீன அரசின் தேசிய பணியக புள்ளியியல் துறை (National Bureau of Statistics) வெளியிட்டுள்ள தகவல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்களாம். இந்த இரண்டு பெரிய தரவுகளையும் ஒப்பிட்டு, சீனா தொழிலாளர் சந்தையில், Automation என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என கணக்கிட்டிருக்கிறார்களாம்.

44 வயதினர்கள்

44 வயதினர்கள்

இந்த ஒப்பீட்டில் எதிர்பார்த்தது போல சில பயங்கர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீனாவில் Automation-னால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு மற்றும் கூலி பிரச்னையால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக 44 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பள்ளி மேற்படிப்புக்குக் கீழ் கல்வித் தகுதி கொண்டவர்கள், இந்த Automation-னால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.

வேலையிழப்பு

வேலையிழப்பு

சீனா இன்றைய உலகின் உற்பத்திக் கிண்ணம். அந்த நாட்டிலேயே உற்பத்தி துறையிலும், அரசு நிறுவனங்களிலும் பெரிய அளவில் ரோபோக்கள் பயன்படுத்தி, தங்கள் உற்பத்தியை அதிகரித்து வருகிறார்களாம். இதனால் பெரிய அளவில் சீன உற்பத்தி துறையில் பணியாற்றியவர்கள் வேலை இழந்தார்களாம். இன்னமும் சீன அரசு ரோபோக்களுக்காக அதிகம் முதலீடு செய்து வருகிறார்களாம். இந்த Automation-னால் உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்தாலும் அது சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறதாம்.

சமூக பாதிப்பு

சமூக பாதிப்பு

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற பெரிய வளரும் நாடுகளில் இந்த Automation-னால் தொழிலாளர் மத்தியில், ஒரு குறுகிய காலத்துக்கு பெரிய அதிருப்தி மற்றும் பாதுகாப்பின்மை நிலவுகிறதாம். அதோடு நிறைய தொழிலாளர் போராட்டம், வேலை நிறுத்தம் என பல விஷயங்கள் இந்த வேலை இழப்பாலும், கூலி தொடர்பான பிரச்னைகளால் உண்டாவதை குறிப்பிடுகிறார்கள் இந்த ஆய்வறிக்கை செய்த Osea Giuntella மற்றும் Tianyi Wang.

ஆழமான பிரச்னை

ஆழமான பிரச்னை

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை தான் மிகப் பெரிய வேலைவாய்ப்புத் துறையாக இருக்கிறது. இது போன்ற வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பும், சமமற்ற நிலையும் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன. இந்த மாதிரியான நாடுகளில் Automation வந்தால், அங்கு பெரிய அதிர்வலைகளை உருவாக்குவதாகச் சொல்லி இருக்கிறார்கள் இந்த ஆய்வறிக்கை எழுதிய ஆய்வாளர்கள்.

இன்னும் இந்தியாவில் முழுமையாக வரவில்லை அதற்குள்ளேயே 100-க்கு 66 சதவிகிதம் பேருக்கு வேலை போய்விடும் என்றால் எப்படி..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

automation may leads to 66 percent employees job loss in developing countries

automation may leads to 66 percent employees job loss in developing countires like india, china, brazil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X