பட்ஜெட் 2019 : மருத்துவ செலவுகளுக்கான வரி விலக்கு ரூ. 20ஆயிரமாக அதிகரிக்கப்படுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மருத்துவப் பரிசோதனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்கு சலுகையான 5 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பை தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறத்தி வருகின்றனர்.

 

நாம் அள்ளிக் கொடுக்கும் வரி வருவாயை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக அதிகப்படியான வரிச்சலுகையை பெரு நிறுவனங்களுக்கு அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று மாதச் சம்பளதாரர்கள், மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியிடம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். இதற்கு நீங்கள் நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தற்போது வருமானவரிச் சட்டம் பிரிவு 17(2)ன் படி அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் செலவுக்கான வரிச்சலுகையான ரூ.15 ஆயிரம் என்பது கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்த வருகிறது. இந்த வரிச்சலுகையும், போக்குவரத்து சலுகையும் ஒன்றிணைக்கப்பட்டு கடந்த 2017-18ஆம் நிதியாண்டிலிருந்து ரூ.40 ஆயிரம் நிரந்தரக் கழிவுத் தொகை சலுகையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

பலருக்கு நஷ்டம் சிலருக்கு லாபம்

பலருக்கு நஷ்டம் சிலருக்கு லாபம்

இந்தியாவில் வருமானவரிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்தே மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாதச் சம்பளம் வாங்குவோர் செலுத்தும் வருமான வரியில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக அவர்களுக்கு அளிக்கும் அனைத்துவிதமான வரிச் சலுகைகளும் வரி விலக்குகளும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இதற்கு மாறாக பெரு நிறுவனங்களுக்கு அளிக்கும் வருமானவரிச் சலுகை என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொடுப்பது நாம் பெறுவது அவர்களா

கொடுப்பது நாம் பெறுவது அவர்களா

நாம் அள்ளிக் கொடுக்கும் வரி வருவாயை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக அதிகப்படியான வரிச்சலுகையை பெரு நிறுவனங்களுக்கு அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று மாதச் சம்பளதாரர்கள், மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லியிடம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். இதற்கு நீங்கள் நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வேலைவாய்ப்பு கூடுதில்லையா
 

வேலைவாய்ப்பு கூடுதில்லையா

மாதச் சம்பளதாரர்களின் கேள்விக்கு பதிலளித்த அருண் ஜெட்லி, நான் அதை மறுக்கவில்லை. அது தான் உண்மையும் கூட. ஆனால், பெரு நிறுவனங்களால் தான் நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கிறது. கூடவே அதிகப்படியான வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் அது உங்களைப் போல் கோடிக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்குமே. அதன் காரணமாகவே அவர்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று கன்னத்தில் அறைவது போல் பதிலளித்தார்.

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

அருண் ஜெட்லியின் பதிலால் அதிருப்தியடைந்த பெரும்பாலான மாதச்சம்பளதாரர்கள் எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தபோது, அடுத்து வரும் பட்ஜெட்டில் நிச்சயம் நல்லது நடக்கும் என்று பதிலளித்தார். அவர் சொன்னது போலவே கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பானது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது அறிவிப்போடு நிற்காமல் செயல்படுத்தப்படவேண்டும் என்று அனைத்து மாதச் சம்பளதாரர்களும் எதிர்பார்க்கின்றனர்.

நிரந்தரக் கழிவு

நிரந்தரக் கழிவு

அதோடு, வரிச் சலுகை பயனாக உள்ள மருத்துவச் செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அளிக்கப்பட்டு வரும் தொகையின் வரம்பையும் அதிகரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது வருமானவரிச் சட்டம் பிரிவு 17(2)ன் படி அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் செலவுக்கான வரிச்சலுகையான ரூ.15 ஆயிரம் என்பது கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்த வருகிறது. இந்த வரிச்சலுகையும், போக்குவரத்து சலுகையும் ஒன்றிணைக்கப்பட்டு கடந்த 2017-18ஆம் நிதியாண்டிலிருந்து ரூ.40 ஆயிரம் நிரந்தரக் கழிவுத் தொகை சலுகையாக மாற்றப்பட்டது.

ரூ.5000 பத்தாது ரூ.20000 வேணும்

ரூ.5000 பத்தாது ரூ.20000 வேணும்

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பும் (Federation of Indian Chamber of Commerce & Industry-FICCI) இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. கூடவே, வருமானவரிச் சட்டம் பிரிவு 80டி (80D) யின் படி, மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது அளித்துவரும் வரிச்சலுகையான ரூ.5 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஊழியர்களின் மருத்துவச் செலவு

ஊழியர்களின் மருத்துவச் செலவு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்திலும் இது பற்றிய தங்களின் பரிந்துரைகளை எடுத்துக்கூறியுள்ளது. முக்கியமாக ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும் வரிச்சலுகை பெற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

75 சதவிகிதம் அதிகரிக்கும்

75 சதவிகிதம் அதிகரிக்கும்

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 58 லட்சம் பேர் இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு தொற்று நோய்கள் அல்லாத சர்க்கரை நோய், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இது வரும் 2025ஆம் ஆண்டில் மேலும் 75 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்றும் இதை எல்லாம் உத்தேசித்தே மேற்கண்ட பரிந்துரைகளை தெரிவித்துள்ளதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: More Tax Exemption need for Medical Exp and health check-up

Budget 2019: More Tax Exemption need for Medical Exp and health check-up
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X