ஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பூர் : டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் என்றாலே, அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது பின்னலாடையே. திருப்பூருக்கு பின்னலாடை நகரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

 

இந்த டாலர் சிட்டியில், பின்னலாடை தொழில் மூலம் உலகையே தன் பக்கம் ஈர்த்த பெருமை திருப்பூருக்கு உண்டு.

அப்படிப்பட்ட திருப்பூரிலிருந்து கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு நகரத்திலிருந்து ஹார்பருக்கு எடுத்து செல்லப்படும் சரக்குகள் திருடப்படுவதாகவும், அதை தடுக்க வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட வேண்டும் என்றும் , இதன் மூலம் திருட்டை தடுக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.

அதை தடுக்கவே ஜி.பி.எஸ் பொருத்தம்?

அதை தடுக்கவே ஜி.பி.எஸ் பொருத்தம்?

இந்த நிலையில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் வர்த்தக வாகனங்களோ அல்லது வேறு ஏதாவது வாகனங்கள் மூலமாகவோ எடுத்துச் செல்லப்படுகின்றனவாம். ஆனால் இவ்வாறு எடுத்துச் செல்லும் போது சில இடங்களில் திருடப்படுவதாவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கவே இந்த ஜி.பி.எஸ் வாகனங்களில் பொருத்த வேண்டும் என்றும் கூறுகிறார்களாம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

லாரிகளிலேயே திருடப்படுகின்றன?

லாரிகளிலேயே திருடப்படுகின்றன?

இது குறித்து திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் ராஜா எம் சண்முகம் கூறுகையில், திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல ஹார்பர்கள் மூலமாக, அங்கிலிருந்து கப்பலில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்ப வேண்டிய சரக்குகளை நாங்கள் பேக் செய்து லாரிகளோ அல்லது சம்பந்தப்பட்ட வாகனங்களிலோ அனுப்பபடுகிறது. இவ்வாறு அனுப்பபடும் போது இவைகள் வழியில் திருடப்படுகின்றன.

பிரச்சனைகளை தடுக்கவே ஜி.பி.எஸ்
 

பிரச்சனைகளை தடுக்கவே ஜி.பி.எஸ்

இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு சரியான அளவில் ஆடைகளை அனுப்ப முடிவதில்லை. அதோடு பெருத்த நஷ்டமும் ஏற்படுகிறது. அதோடு சில சமயங்களில் ஓட்டுனர்களையும் மிரட்டி இந்த சம்பவம் நடைபெறுகிறது. ஆக இது போன்ற பிரச்சனைகளை தடுக்கவே, ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களை தேர்தெடுக்க வேண்டும் என்கிறார் ராஜா.

பாண்டல் குடியில் திருட்டு

பாண்டல் குடியில் திருட்டு

அண்மையில் விருது நகர் அருகேயுள்ள பாண்டல்குடியில் பேக்குகளை உடைத்து சரக்குகள் திருடப்பட்டது. இது தூத்துக்குடியில் சென்று ஹார்பர்களில் முழுவதுமாக சோதனையிட்டபோது தான் சரக்குகள் திருட்டப்பட்டது தெரிய வந்தது. TEAவுக்கு வந்த தகவலின் அடிப்படையில், இது விருது நகரில் திருடப்பட்டது என்று தகவல் கிடைத்தது. இதில் ஒருவரை மட்டும் தற்போது காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

 வாகனத்தை நிறுத்தினா கமிஷன்

வாகனத்தை நிறுத்தினா கமிஷன்

ஆனால் அந்த திருட்டு கும்பலுடன் வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு சாதகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் அவர்களுக்கு ரூ.5000 முதல் கமிஷன் கிடைக்கும் என்றும் கூறுகிறார் ராஜா. அதிலும் இவ்வாறு வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் போது அவர்கள் வாகனத்தை நிறுத்துகிறார்களா, என்று கண்கானிக்க முடியும். அதோடு லாரி புக்கிங் அலுவலகங்கள் இதை பொறுப்பேற்க வேண்டும். இந்த கமிஷன் வியாபாரம் பல காலங்களாகவே நடப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஏஜென்டுகள் பொறுப்பில் விடும்போது வாகனங்கள் கடைசி வரைசெல்லவதை கண்காணிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் ராஜா. அதோடு ஏற்றுமதியாளர்களை எச்சரித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

வாகனங்களை சிறைபிடிக்கின்றனர்.

வாகனங்களை சிறைபிடிக்கின்றனர்.

சில இடங்களில் வாகனங்களை பலர் சேர்ந்த கும்பல் சிறை பிடித்து கொள்கின்றனர். நாங்கள் வாகனத்தில் ஓட்டுனரும் கிளினரும் மட்டுமே இருப்பதால் எதுவும் செய்ய முடிவதில்லை. சில நேரங்களில் எங்களிடம் உள்ள பணம், செல்போன் உள்ளிட்டவற்றையும் பறித்து செல்கின்றனர். அதிலும் இவ்வாறு திருடப்படும் கும்பல், குறிப்பாக மக்கள் அடர்த்தி மிக குறைவாக உள்ள இடங்களையே தேர்தெடுக்கின்றனர். அதோடு மலைப்பிரதேசங்களில் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. எனினும் சிலர் செய்த(திருட்டுக் கும்பலுக்கு துனைபோகும்) தவறுகளினால் அனைவரும் இதில் பாதிக்கபடுகின்றனர், ஆக இந்த ஜி.பி.எஸ் திட்டம் அனைத்துக்கும் நல்ல பதிலை கொடுக்கும் என்கிறார்கள்.

ஜி.பி.எஸ் பொருத்தம் நல்ல விஷயம் தான்!

ஜி.பி.எஸ் பொருத்தம் நல்ல விஷயம் தான்!

எனினும் இது போன்ற பிரச்சனைகளை தடுக்க நான்கு ஐந்து வாகனங்கள் ஒன்று சேர்ந்து தான் செல்வோம். எனினும் சில நேரங்களில் ஓடும் வாகனங்களிலேயே இந்த திருட்டு நடக்கிறது. சில சமயங்களில் உதவி கேட்பது போல வருகிறார்கள். ஆனால் பின்னர் தான் தெரிகிறது அது திருட்டு கும்பல் என்று. கைக்கு கிடத்ததெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். இதனால் இந்த ஜி.பி.எஸ் பொருத்தப்படுவது நல்ல விஷயம் தான் என்கிறார்கள் வாகன ஓட்டிகள். பொதுவாகவே இந்த ஜி.பி.எஸ் பொருத்தம் அனைத்து வாகனங்களுக்கும் நன்மையே என் கிறார்கள் இந்த வாகன உரிமையாளர்களும் வாகன ஓட்டிகளும்.

ஏற்றுமதி அதிகம்

ஏற்றுமதி அதிகம்

பொதுவாக வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தம் மிக அவசியம் என்ற நிலையில், டாலர் சிட்டியான திருப்பூரில் நாள் ஒன்றுக்கு கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதிலும் ஏற்றுமதி வர்த்தகம் மிக அதிகம். ஆக கண்டிப்பாக வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தம் செய்யப்பட வேண்டும். இது வாகன ஓட்டுனர்களுக்கும் சரி, ஏற்றுமதியாளர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் நன்மையே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tirupur Garment makers asked to send goods by GPS-fitted vehicles

Tirupur Garment makers asked to send goods by GPS-fitted vehicles
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X