தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.. ரூ.1259 கோடியில் Desalination Plant!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : பூமி 70 சதவிகிதம் தண்ணீராலும், மீதமுள்ள இந்த 30 சதவிகிதத்தில் தான் காடு மலை ஏரி குளங்கள் என அனைத்தும் உள்ளன. அதிலும், இந்த 70 சதவிகிதம் தண்ணீரில் 97.2 சதவிகிதம் தண்ணீர் கடல் நீரால் சூழப்பட்டது.

 

ஆமாங்க மீதமுள்ள இந்த 3 சதவிகிதம் தான் நன்னீர் ஆதாரம். அதிலும் 2.6 சதவிகிதம் தண்ணீரை மனிதர்கள் அணுக முடியாத தூரத்தில் உள்ளதாம். அவைகள் துருவ பனிகட்டிகளாகவும், பணிப்பாறைகளாகவும், வளி மண்டலத்திலோ, மண்ணிலோ சேமித்து வைக்கப்படுகின்றன.

இப்படியொரு சூழ்நிலையில், அதுவும் வறட்சி காலத்தில் சொல்லவே வேண்டாம். அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் சொல்லவே வேண்டாம். இதை தீர்க்கவே இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது அரசு.

விசுவரூபம் எடுக்கும் பிரச்சனை!

விசுவரூபம் எடுக்கும் பிரச்சனை!

கோடை காலம் தொடங்கியது முதல் குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து ஆட தொடங்கி விடுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் கிணறுகளில், ஏன் அணைகளிலேயே கூட போதிய அளவு தண்ணீர் இல்லாததால், மக்கள் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனாலேயே கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை சென்னைக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு முறை பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தாலும், தெளிவான அறிக்கைகள் ஏதும் இல்லை என்றே கூறலாம்.

Desalination உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது?

Desalination உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது?

எனினும் இந்த Desalination திட்டத்தினை சர்வதேச அளவில் 120 நாடுகளில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய உபயோகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய எமிராட், ஸ்பெயின், சைபிரஸ், மால்டா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கடல் நீரை சுத்திகரிக்கும் பிளான்ட்கள் உள்ளன.

கடல் நீரை குடி நீராக்கும் டெக்னாலஜி!
 

கடல் நீரை குடி நீராக்கும் டெக்னாலஜி!

கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பல்வேறு பொருட்களை வெளியேற்றுவதற்கு டிஸலைனேஷன் என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக செலவு ஏற்படும் வகையிலான இந்த முறையை தான் பல நாடுகளும் பயன்படுத்துகின்றன. இதன் செலவு அதிகம் என்றாலும், இதன் சுத்திகரிப்பு திறன், வேகம் மிக குறைவு தான். எனினும் மக்களின் அடிப்படை தேவை தண்ணீர் என்பதால் இதைத் பல நாடுகள் செயல் படுத்தியுள்ளன என்கிறார் அமெரிக்காவில் நியூ ஜெர்ஷி தொழில்நுட்ப கல்லூரியில், சவ்வு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராக பணியாற்றும் கமலேஷ் ஸிர்க்கார் கூறுகிறார்.

அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை?

அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை?

கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டப்பட்ட அறிக்கையின் படி, சென்னைக்கு ஒரு நாளைக்கு 1100 மில்லியன் லிட்டர் தேவையாம். அப்படியெனில் தற்போது சொல்ல வேண்டும். இதே எனினும் ஆனால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளின் பம்பு செட்டுகளில் இருந்து 115 மில்லியன் லிட்டரும், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 130 மில்லியன் லிட்டரும், நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 200 மில்லியன் லிட்டர், கல்குவாரிகளில் இருந்து 40 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியில் இருந்து 4 மில்லியன் லிட்டர் என தினசரி 489 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடல் நீர் வினியோகம்?

கடல் நீர் வினியோகம்?

தென்சென்னை சேர்ந்த சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மயிலாப்பூர், ஆலந்தூர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு பிளான்டில் இருந்தும் தண்ணீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நெம்மேலிக்கு ரூ.1259 கோடி செலவு.

நெம்மேலிக்கு ரூ.1259 கோடி செலவு.

தற்போது மூன்றாவது நெம்மேலி அருகில் ரூ.1,259.38 கோடியில் 150 மில்லியன் லிட்டர் பெறும் வகையில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. போரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது உற்பத்தி பாதிக்கும்?

தற்போது உற்பத்தி பாதிக்கும்?

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து மேலும் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணியை தொடங்கினால் குறைந்தபட்சம் 4 நாட்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும். எனவே மழைகாலத்தில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி ஓரளவு குடிநீர் வினியோகம் செய்யும் போது இந்த பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரூர் திட்டத்துக்கு ரூ.6078 கோடி?

பேரூர் திட்டத்துக்கு ரூ.6078 கோடி?

நெம்மேலில் திட்டத்தில் அடிக்கல் நாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து பேரூரிலும் 6078 கோடி ரூபாயில் கடல் தண்ணீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது சென்னைக்கு தேவையை தட்டுப்பாடு இன்றி செயல்படுத்த முடியும் என்றும் எடப்பாடி கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: water plant
English summary

Chennai to get third desalination plant to cost Rs.1259 crores.

Chennai to get third desalination plant to cost Rs.1259 crores.
Story first published: Friday, June 28, 2019, 20:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X