விவசாயத்தினை அழிக்கும்.. இயற்கை வளங்களை சூறையாடும் எண்ணெய் கிணறுகள் வேண்டாம்.. அன்புமணி ராமதாஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் அமையவிருக்கும், 104 எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியர்களுக்கு இந்திய விவசாயத்தினை அழிக்கும், இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாடும் இந்த எண்ணெய் கிணறுகளை அமைக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

அட ஆமாங்க.. இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. எனினும் இந்த திட்டம் இயற்கை அழிக்கும் திட்டம் எனவும் இதை தமிழகத்தில் காவிரி கரையேரங்களில் அமைக்க கூடாது எதிர்கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளன.

விவசாயத்தினை அழிக்கும்

விவசாயத்தினை அழிக்கும்

காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் இந்த எண்ணெய் கிணறுகளை அமைக்க இந்திய அரசு துடித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும் என்றும் கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

எண்ணெய் களஞ்சியமாக மாற்ற முயற்சி!

எண்ணெய் களஞ்சியமாக மாற்ற முயற்சி!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை, தற்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே காவிரி பாசன மாவட்டங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் திவீர படுத்தி வருகிறது.

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள்?
 

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள்?

தமிழகத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 104 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்க தீர்மானித்துள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளதும் கவனிக்கதக்கது.

பாலைவனமாக மாற்றும் திட்டம்?

பாலைவனமாக மாற்றும் திட்டம்?

ஏற்கனவே காவிரி பாசன மாவட்டங்கள் கடும் வறட்சியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு வேளாண் சாகுபடி பரப்பும் குறைந்து வரும் இந்த நிலையில், தற்போது புதிதாக செயல்படுத்தப் படவுள்ள இந்தத் புதிய எண்ணெய் கிணறுகள் திட்டம், காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும்.

17 இயற்கை எரிவாயு கிணறுகள்!

17 இயற்கை எரிவாயு கிணறுகள்!

இவ்வாறு ஓ.என்.ஜி.சி அமைக்கவுள்ள புதிய 104 கிணறுகளில், 87 கிணறுகள் கச்சா எண்ணெயும், 17 கிணறுகள் இருந்து இயற்கை எரிவாயுவும் தோண்டி எடுக்கப்பட உள்ளதாம். இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயமும், நீர் ஆதாரங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் எண்றும் கருதப்படுகிறது.

மோசமான பாதிப்புகள்?

மோசமான பாதிப்புகள்?

முன்னரே காவிரி பாசன மாவட்டங்களில், 200-க்கும் மேற்பட்ட கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வாழ தகுதியற்ற பகுதிகளாக மாறிவிடும்?

மக்கள் வாழ தகுதியற்ற பகுதிகளாக மாறிவிடும்?

இதில கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கதிராமங்கலம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளில், பாதிப்புகளை நேரடியாக பார்க்க முடிந்தது. இத்தகைய சூழலில் மேலும் 104 கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத்தகுதியற்ற மாவட்டங்களாக மாறிவிடும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஒ.என்.ஜி.சி கருத்தில் கொள்ள வேண்டும்?

ஒ.என்.ஜி.சி கருத்தில் கொள்ள வேண்டும்?

உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை... தங்களின் வருவாய் அதிகரித்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தனியார் பெருநிறுவனங்களைப் போல செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியாதது.

திமுக தான் அனுமதி அளித்தது

திமுக தான் அனுமதி அளித்தது

காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் தான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது திமுக தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதன்பிறகு அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலங்களில் தான். அப்போது வளரத் தொடங்கிய ஹைட்ரோ கார்பன் பூதம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் 104 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முடிவு அங்குள்ள மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: oil ongc ஓஎன்ஜிசி
English summary

Tamil Nadu political parties opposition ONGC’s proposal for 104 oil wells

Tamil Nadu political parties opposition ONGC’s proposal for 104 oil wells
Story first published: Friday, June 28, 2019, 10:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X