பங்காளி சண்டையிலும் கூட ரூ.2,100 கோடி நிதி திரட்டிய Godrej properties.. பிரச்சனையில் கோத்ரேஜ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அங்காளி பங்காளி சண்டையிலும் கூட Godrej properties நிறுவனம், தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து qualified institutional buyers (QIBs) 2100 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

 

Godrej properties நீறுவனம் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இயக்குனர் குழு கூட்டத்தில்,தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 2.26 கோடி பங்குகளை 928 ரூபாய் என்ற விலையில் வெளியிட்டதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஜீன் 25ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பங்கு வெளியீடு ஜீன் 28ம் தேதியோடு முடிவடைந்தது. கோத்ரேஜ் குழுமம் ஒரு புறம் பிரச்சனையில் சிக்கித் கொண்டு இருந்தாலும் மறுபுறம் வியாபாரத்தில் குறிக்கோளாக இருப்பது கவனிக்கதக்கது.

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது எபோது?

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது எபோது?

கோத்ரேஜ் குழுமம், கடந்த 1997ம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த அர்டேஷிர் கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ்ஜால் தொடங்கப்பட்டது.தற்போது இந்த கோத்ரேஜ் குழும தலைவராக, கோத்ரேஜ் குழும தலைவர்களில் மூத்தரவான ஆதி கோத்ரேஜ் வழி நடத்தி வருகிறார்.

சொத்து மதிப்பு?

சொத்து மதிப்பு?

கோத்ரேஜ் குழுமம் ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தளவாடங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பாதுகாப்பு மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கின்றனர். இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

கருத்து வேறுபாடுகள்?
 

கருத்து வேறுபாடுகள்?

கோத்ரேஜ் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை விருத்தி செய்வதில் குடும்ப உறுப்பினர்களிடையே வேறுபாடுகள் ஏற்பட்டுள்களது. கோத்ரேஜ் குடும்பத்தின் நில செறிவு இந்த சொத்து பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதோடு கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக், இந்த குடும்பத்திற்கு சொத்து தகராறு நிலைமையைத் தடுக்க உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.

கோத்ரேஜ்ஜூக்கு நிலம்?

கோத்ரேஜ்ஜூக்கு நிலம்?

நாட்டின் மிக விலையுயர்ந்த சொத்து சந்தையான மும்பையில் கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் 3,400 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை கொண்டுள்ளனர். இந்த நிலத்தின் 3,000 ஏக்கருக்கு மேல் விக்ரோலி புறநகர் பகுதியிலும், மீதமுள்ளவை பாண்டூப் மற்றும் நஹூரின் புறநகர்ப்பகுதிகளிலும் உள்ளன.

கோத்ரேஜ் குழுமம்!

கோத்ரேஜ் குழுமம்!

கோத்ரேஜ் குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான கோத்ரேஜ் பிராபர்டீஸ், இந்த நிலப்பரப்பை வளர்ச்சி மேலாண்மை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கி வருகிறது. அதோடு ஆதி மற்றும் நாதிர் கோத்ரேஜ் குழுவின் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் நிர்வகித்து வருகின்றனர். கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (Godrej Consumer Products Ltd ), கோத்ரேஜ் சொத்து (Godrej Properties), கோத்ரேஜ் அக்ரோவெட். கோத்ரேஜ் மற்றும் போயஸ் (Godrej Agrovet. Godrej & Boyce)

ஜாம்ஷிட் கோத்ரேஜ் தான் தலைவர்!

ஜாம்ஷிட் கோத்ரேஜ் தான் தலைவர்!

கோத்ரேஜ் குழுமத்தின் நுகர்வோர், அலுவலகம் மற்றும் தொழில்துறை பொருட்கள், தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட வணிக பிரிவுகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமானதாக கருதப்படுகிறது. எனினும் இதன் தலைவராக ஜாம்ஷிட் கோத்ரேஜ் உள்ளார்.

3400 ஏக்கரில் சிக்கல்

3400 ஏக்கரில் சிக்கல்

எனினும் பல சொத்துகள் இருந்தாலும், 3400 ஏக்கர் நிலம் யாருக்கு கிடைக்கும் என்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நில விவகாரத்தை சரி செய்ய இரு தரப்பில் இருந்தும் மூன்றாம் தரப்பு நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் இதுவரை சாதகமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லையாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: godrej கோத்ரேஜ்
English summary

Godrej Properties raises Rs.2,100 crore equity capital

Godrej Properties raises Rs.2,100 crore equity capital
Story first published: Sunday, June 30, 2019, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X