Budget 2019 : விவசாய துறையில் அதிரடியான மாற்றம் இருக்குமா.. விலை வாசி குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : நடந்து முடிந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஜனநாயாக கூட்டணி அரசு தனிப் பெரும்பான்மையுடன் மோடி அரசு வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் அரசாங்கத்தின் இந்த மறுதேர்தலை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அந்த சமயத்தில் இருந்தன.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில், டி - ஸ்ட் ரீட்டில் குறித்த முக்கிய சீர்திருத்தங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு அரசு கடந்த பிப்ரவரியில் வெளிட்ட இடைக்கால பட்ஜெட்டில், பங்கு சந்தையில் முதலீட்டாளர்களை வரவேற்றனர். இதனால் உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்தல் போன்றவற்றை மேலும் ஊக்குவிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

நிறுவனங்களின் அவுட்லுக்கை கெடுத்துள்ளது?

நிறுவனங்களின் அவுட்லுக்கை கெடுத்துள்ளது?

கடன் பிரச்சனைகளை சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், முதலீடுகளை அதிகரித்தால் மட்டுமே இப்பிரச்சனையை சமாளிக்க முடியும். எனினும் அரசு ஒரு புறம் கடன் பிரச்சனையை சமாளிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை பல நிறுவனங்களின் அவுட்லுக்கையே கெடுத்துள்ளது என்றும் கருதப்படுகிறது. இதனால் முதலீடுகள் என்பது குறையவே செய்துள்ளது.ஆக இதுகுறித்த சீர்திருத்தங்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பட்ஜெட்க்கு முன்பே சந்தை மோசமாக உள்ளது?

பட்ஜெட்க்கு முன்பே சந்தை மோசமாக உள்ளது?

ஒரு புறம் பொருளாதார மந்தம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாகவே சந்தை வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. ஆக பட்ஜெட்டுக்கு முன்னதாகவே கடந்த அமர்வுகளில் சில சந்தைகள் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரத்தை மீட்கும் வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நோய் வாய்பட்டுள்ள இந்த துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரலாம் எனவும் கருதப்படுகிறது.

எஸ்.டி.டியை குறைக்கலாம்?

எஸ்.டி.டியை குறைக்கலாம்?

பல சந்தை நிபுனர்களும் பரிந்துரைக்கும் பத்திர வரி என்ற எஸ்.டி.டி (STT) வரி சுமையினை குறைக்க வேண்டும். இது உள்நாட்டு சந்தை பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதோடு முதலீடுகளையும் அதிகரிக்கும். இந்த வரி குறைப்பு சந்தையில் முதலீடுகளையும் மிக அதிகரிக்க உதவும் என்றும் கருதப்படுகிறது. இதனால் இந்த துறையில் முதலீடுகளை அதிகரிக்க பல சீர்திருத்தங்கள் இருக்கலாம் என்றும், குறிப்பாக எஸ்.டி.டி மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி & நிதித்துறையில் சீர்திருத்தங்கள்

வங்கி & நிதித்துறையில் சீர்திருத்தங்கள்

தற்போது நிலவி வரும் பணப்புழக்க பிரச்சனையை சமாளிக்க அரசு, நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் மூலதனத்தால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கருதப்படுகிறது. அதோடு பொதுத்துறை வங்கிகளில் நிலவும் பணப்புழக்க சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசாங்கம், ஒரு வரைபடத்தை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எதிர்காக பணப்புழக்க நெருக்கடியை தடுப்பதற்காக NBFC துறையில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அரசாங்கம் ஒரு ஒழுங்கு முறை அமைப்பையும் அமைக்கலாம் என்றும் எதிர்பார்க்கலாம். அதோடு வாராகக்டன் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மறு மூலதனம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத்துறையை புதுபித்தல்!

விவசாயத்துறையை புதுபித்தல்!

ஆய்வாளர்கள் பரிந்துரைத்த முக்கிய துறைகளில் விவசாயத்துறையும் முக்கிய துறையே. குறிப்பாக இந்தியாவில் வேலை வாய்ப்பு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் துறை என்பதை கருத்தில் கொண்டும், அரசு விவசாய துறைக்கு உதவும் வகையில் முக்கிய மாற்றங்களை உருவாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பங்கு சந்தையில் வேளாண் துறை சார்ந்த பங்குகள், பருவமழையின்மை காரணமாக கணிசமான தாக்கத்தினை எதிர்பார்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. அதோடு வேளாண் துறை சார்ந்த மருந்து நிறுவனங்களான Bayer CropScience, Dhanuka Agritech, and Rallis India உள்ளிட்ட இதுபோன்ற சில பங்குகளில் இந்த எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய துறைகளில் திட்டங்கள் !

விவசாய துறைகளில் திட்டங்கள் !

விவசாய துறைகளில் நிலவி வரும் தேக்கமான வளர்ச்சி காரணமாக, பட்ஜெட்டில் விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என்றும், அதோடு விவசாயத்திற்கு ஆதரவளிக்கும் போது, கூடவே எஃப்.எம்.சி.ஜி துறை மற்றும் ஆட்டோ துறைகள் வளர்ச்சி காணலாம் என்றும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: D-Street expects government to reduce tax burden, focus on reforms

Budget 2019: D-Street expects government to reduce tax burden, focus on reforms
Story first published: Monday, July 1, 2019, 20:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X