Budget 2019 : இந்த 5 பிரச்சனைகளையும் வெல்வாரா.. நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் சவால்கள்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : மோடி 2.0 அரசு பதவியேற்ற பின்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பொருளாதாரம் பின் தங்கியுள்ள நிலையில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் வரும் ஜூன் 5ம் தேதி தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட் மிக பரப்பரப்பான நிலையில் இருக்கும் எனவும், நிச்சயம் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

அதோடு மோடி 2.0 அரசுக்கு எந்த மாதிரியான சவால்கள் காத்திருக்கின்றன. இதை சரி செய்ய, அரசு எந்த மாதிரியான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் நிபுனர்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

நிர்மலா சீதாராமனுக்கு கடினமான பணி?

நிர்மலா சீதாராமனுக்கு கடினமான பணி?

இந்தியாவில் தற்போது நிலவி வரும் கடினமான பொருளாதார நிலையில், சமீபத்திய பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பு நெருக்கடி என்ற ஒரு கடினமான பணியே அமைச்சருக்கு காத்திருக்கிறது. எனினும் இவ்வாறு வேலைவாய்ப்பை அதிகரிப்பதே முக்கிய பணியாக இருக்கும். அதோடு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் போது, பொருளார நிலையும் மேம்படும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர் நிபுனர்கள்.

அரசின் கவனம்

அரசின் கவனம்

அதோடு கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், அதோடு நுகர்வோரின் தேவையை அதிகரிப்பதற்காக மத்திய பட்ஜெட்டில் சிறிது மாற்றம் செய்ய வேண்டி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அரசின் பிரதான கவலையே இதையே எப்படி அதிகரிப்பது என்றுதான்.

வட்டி விகிதங்களில் மாற்றம்?
 

வட்டி விகிதங்களில் மாற்றம்?

குறிப்பாக நிதி ஒருங்கிணைப்பு முறையில், இரட்டை முனை சவாலை சிக்கித் தவித்து வருகிறது. அதோடு அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க சில வழிகள் மட்டுமே உள்ளன. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII) தொழில் துறையை ஊக்குவிக்க முக்கியமாக வட்டி விகித குறைப்பை பரிந்துரைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்?

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்?

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, முதலீட்டை அதிகரிக்க இந்தியா இங்க் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வரும் கூட்டத்தில் முக்கிய கடன் விகிதங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வட்டியை குறைக்கும் போது பணப்புழக்கம் அதிகரிக்கலாம் என்றும், இது வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அரசாங்கத்திடம் கலந்துரையாடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும்?

விவசாயிகள் வருமானத்தை உயர்த்த வேண்டும்?

விவசாயிகளின் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சியை காண முடியும் என்றும் கூறப்படுகிறது. அதோடு பொருளாதார நிபுனர்கள் இது குறித்து கூறுகையில், கிராமப்புறங்களில் உள்ள சவால்களே, நாட்டில் சில ஆண்டுகளாக உள்நாட்டு தேவை குறைந்துள்ளதே என்றும் கருதப்படுகிறது. நோய்வாய்பட்டுள்ள விவசாயத் துறையை மாற்றுவதற்காக அரசாங்கம் சில புதிய கொள்கைகளை வகுத்தால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சியினை காண முடியும் என்றும் கூறுகிறார்கள்.

பணப்புழக்கம் சவால்கள்?

பணப்புழக்கம் சவால்கள்?

இந்த விஷயத்தை பொறுத்த வரை நிர்மலா சீதாராமன் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக பொருளாதார மந்த நிலையால் தவித்து வரும் அனைத்து துறைகளுக்கும் ஊக்குமளிப்பதற்காக பொதுத்துறை வங்கிகளுக்கு 40,000 கோடி ரூபாயை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெரும் சரிவு?

பெரும் சரிவு?

இந்தியர்கள் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் வர்த்தகர்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகவும், அதோடு இது உற்பத்தி சரரிவுக்கு மேலும் வழி வகுக்கிறது என்றும் கருதப்படுகிறது. அதோடு ஆட்டோமொபைல் துறையில் தேவை கணிசமான அளவு குறைந்து விட்டதால், அந்த துறைக்கு கணிசமான அளவுக்கு நிவாரணம் வழங்க அரசு, இந்தக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரலாம் என்றும் கருதப்படுகிறது.

வாராக்கடன் பிரச்சனை?

வாராக்கடன் பிரச்சனை?

நடப்பு கணக்கு பற்றாக்குறை கணக்கில் எடுத்துக் கொள்வதோடு, வாராக்கடன் எனும் செயல்படாத சொத்துக்களையும் கவனிக்க வேண்டும். இந்த நெருக்கடியை தீர்க்க கடினமான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மட்டும் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 7 லட்சம் கோடிக்கும் மேல் இருந்தது. ஆனால் தேவை மட்டும் தொடர்ந்து குறைவாகவே இருப்பதால் இந்த நஷ்டம் இன்னும் தொடரவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இந்த நஷ்டம் இன்னும் கணிசமான அளவு உயரவே வாய்ப்பிருக்கிறது என்றும் கருதப்படுகிறது. ஆக அரசு வாராக்கடன் குறித்த புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். அதே நேரம் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுகு கடன் கொடுக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

ஜி.எஸ்.டி மாற்றம்?

ஜி.எஸ்.டி மாற்றம்?

நாடு முழுவதும் பயன் படுத்தப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த இணக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த திட்டம் ஆரம்பித்ததிலிருந்தே பல பிரச்சனைகளையும், சவால்களையும் கொடுத்து வருகிறது. இதனால் ஜி.எஸ்.டி வரி வசூலை அதிகரிக்கவும், இலக்கை அடையவும் 2019 - 2020ம் ஆண்டிற்கான இலக்கை அடையவும், செயல் முறைகளை சீராக்க அரசு முயற்சி செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி அமலுக்கு பின் நுகர்வோர் தொலைகாட்சி மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றிக்கான தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனராம்.

சரியான கலவை தேவைப்படும்?

சரியான கலவை தேவைப்படும்?

நடப்பு கணக்கு பற்றாக்குறையும் சமன்படுத்தி, அதேசமயம் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிப்பது தந்திரமான சவாலாகவே இருக்கும். அதோடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி அதிகரிப்பதற்கு நிதி மற்றும் பண நடவடிக்கைகளின் சரியான கலவை தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019 : Some ways Nirmala Sitharaman can boost growth to economic

Budget 2019 : Some ways Nirmala Sitharaman can boost growth to economic
Story first published: Monday, July 1, 2019, 19:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X