Economic Survey: இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக்க CEA-வின் திட்டங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு இந்தியப் பொருளாதாரத்தை வரும் 2024 - 25 நிதி ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனும் தன் Economic Survey-வில் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்.

Economic Survey: இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக்க  CEA-வின் திட்டங்கள்!

இந்திய பொருளாதாரத்தின் பெரிய பிரச்னைகளில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார தேக்க நிலை, இந்திய கார்ப்பரெட் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்காதது, தனியார் துறை முதலீடுகள் பெரிய அளவில் அதிகரிக்காதது என அனைத்தையும் கருத்தில் கொண்டு பல பரிந்துரைகளை தன் Economic Survey-ல் சொல்லி இருக்கிறார்.

முதல் செட்
செட் 1

பொருளாதார ஆலோசகரின் Economic Survey-ன் என்ன திட்டங்களை எல்லாம் முன் வைத்திருக்கிறார்கள். எப்படி உழைக்கப் போகிறார்கள். வாங்க பாப்போம்.
1. வெறித்தனமாக உழைக்க தனியார் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். அதோடு இந்தியாவில் அதிகம் முறைபடுத்தப்படும் துறைகளில் கொஞ்சம் விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். அப்போது தான் முதலீடுகளும், வியாபாரமும் பெருகும். வெறித்தனமாக உழைக்கலாம்.
2. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது. ஆக பட்ஜெட்டில் மட்டும் பணப் புழக்கம் சரி செய்ய நினைப்பதை விட ஆர்பிஐயும் பணப் புழக்க பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Economic Survey: இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக்க  CEA-வின் திட்டங்கள்!

இரண்டாம் செட்
செட் 2

3. அரசு வங்கிகளில் கொஞ்சம் முதலீடு செய்தால், இந்தியப் பொருளாதாரத்தில் தேவை இருப்பவர்களுக்கு கடன் கொடுக்க வசதியாக இருக்கும்.
4. சிறு குறு தொழில் செய்பவர்கள் மீது திணிக்கப்படும் தொழிலாளர் சட்டங்களை தளர்த்த வேண்டும். ராஜஸ்தானில் இப்படி தொழிலாலர் நலச் சட்டங்கள் தளர்த்தப்பட்டு நல்ல பொருளாதார வளர்ச்சியைக் காண முடிந்திருக்கிறது.
5. சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு அதிகம் கடன் கொடுக்க வைத்து வேலை வாய்ப்பை அதிகரிப்பது. இந்தியாவில் அமைப்புசாராத இவர்களைப் போன்ற சிறு குறு தொழில்முனைவோர்கள் தான் பெரும்பாலான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் செட்
செட் 3

6. மேற்கொண்டு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வர வழி வகை செய்ய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் அதிகம் இந்தியாவுக்குள் வராத பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையை சமாளிப்பது சிரமமாக இருக்கும்.
7. இந்தியாவில் முதலீடுகளை விட சேமிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும். சீன பொருளாதாரம் வளரத் தொடங்கிய உடன் இதைத் தான் செய்தார்கள். நாமும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
8. வணிகம் தொடர்பான வழக்குகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்ப்பு சொல்ல முடியாததால் ஏகப்பட்ட வியாபாரங்கள் அப்படியே தேங்கி நின்று கொண்டிருக்கிறது. இவைகளை தீர்க்க போதுமான மாவட்ட மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேவை.

Economic Survey: இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக்க  CEA-வின் திட்டங்கள்!

நான்காம் செட்
செட் 4

9. நிலையான கொள்கை முடிவுகள் 2011 - 12 காலத்தில் இல்லாமல் இருந்தது. ஆகையால் ஒரு கொள்கை முடிவை எடுப்பதற்கு முன், அந்த கொள்கையால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என முன் கூட்டியே கணித்து, அதற்கான வழிமுறைகளை அந்த கொள்கைகளிலேயே சொல்ல வேண்டும். கொள்கைகள் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு கொள்கைக்கு ஒரே ஒரு அர்த்தத்தைத் தான் கொடுக்க வேண்டும்.

10. தொழில்நுட்பத்தை இன்னும் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மக்கள் நலத் திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இந்த ஒரு திட்டதில் ஆதார் எண் அடிப்படையில் பணம், வங்கிக் கணக்குக்கே கூலி வந்தது, ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியது எல்லாம் ஒரு முன் மாதிரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

economic survey 10 important plan to make india a5 trillion economy

economic survey 10 important plan to make india a5 trillion economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X