Economic survey: ஆண்டுக்கு 8% ஜிடிபி வளர்ச்சி சாத்தியமா..? உலக வங்கி தரவுகள் சொல்வதென்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1961-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஜிடிபி தரவுகளை தொகுத்து வைத்திருக்கிறது உலக வங்கி. இந்த 58 ஆண்டுகளில் வெறும் ஆறு ஆண்டுகளில் மட்டும் தான் இந்திய ஜிடிபி 8 சதவிகிதத்தை தாண்டிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த ஆறு வருடங்களில் 1988 மற்றும் 1975 ஆகிய இரண்டு ஆண்டுகள் இந்தியாவின் தனியார்மயம், தாராளமயம் உலகமயக் கொள்கைகள் வருவதற்கு முன்னேயே கண்டு விட்டன.

இந்தியாவில் இந்த தனியார்மயம், தாராளமயம் உலகமயக் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 28 ஆண்டுகளில் சராசரி ஜிடிபி வளர்ச்சியே 6.368 சதவிகிதம் தான். இதுவே தனியார்மயம், தாராளமயம் உலகமயக் கொள்கைகள் வருவதற்கு முந்தைய 28 ஆண்டுகளில் சராசரி இந்திய ஜிடிபி வளர்ச்சி 4.293 சதவிகிதமாக இருக்கிறது.

Economic survey: ஆண்டுக்கு 8% ஜிடிபி வளர்ச்சி சாத்தியமா..? உலக வங்கி தரவுகள் சொல்வதென்ன..?

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஜிடிபியின் சராசரி வளர்ச்சி 7.111 சதவிகிதமாக இருக்கிறது. ஆக எப்படிப் பார்த்தாலும் இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 8 சதவிகித ஜிடிபி வளர்ச்சி காண்பது மிகப் பெரிய சவாலான காரியமாகத் தான் இருக்கும் என்பதைத் தான் உலக வங்கியின் ஜிடிபி தரவுகள் சொல்கின்றன.

Economic Survey: இந்திய ஜிடிபி 2019 - 20-ல் 7 சதவிகிதத்தில் வளரும்..! சாத்தியமா..? Economic Survey: இந்திய ஜிடிபி 2019 - 20-ல் 7 சதவிகிதத்தில் வளரும்..! சாத்தியமா..?

தற்போது இருக்கும் உலக பொருளாதார மந்த நிலை, இந்தியாவில் தலை விரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம், உள்நாட்டு நுகர்வுச் சரிவை பகிரங்கமாகச் சொல்லும் கார்களின் விற்பனைச் சரிவு, அமைப்புசாரா துறைகளின் பங்கு இந்திய பொருளாதாரத்தில் குறைந்திருப்பதை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில ஆண்டுகளுக்கு 8% சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது.

வாசகர்கள் தெரிந்து கொள்ள உலக வங்கி தொகுத்து வைத்திருக்கும் இந்திய ஜிடிபி விவரங்களையும். இந்த கட்டுரையோடு கொடுக்கிறோம். உலக வங்கி மோடி அரசின் திருத்தப்பட்ட ஜிடிபிக்களை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இந்திய ஜிடிபி ஒரு பார்வை

உலக வங்கி தொகுத்திருக்கும் இந்திய ஜிடிபி தரவுகள்
ஆண்டுஜிடிபி (%)ஆண்டுஜிடிபி (%)
19613.72319911.057
19622.93119925.482
19635.99419934.751
19647.45319946.659
1965-2.63619957.574
1966-0.05519967.550
19677.82619974.050
19683.38819986.184
19696.54019998.846
19705.15720003.841
19711.64320014.824
1972-0.55320023.804
19733.29620037.860
19741.18520047.923
19759.15020057.923
19761.66320068.061
19777.25520077.661
19785.71320083.087
1979-5.23820097.862
19806.73620108.498
19816.00620115.241
19823.47620125.456
19837.28920136.386
19843.82120147.410
19855.25420157.996
19864.77720168.170
19873.96520177.168
19889.62820186.982
19895.947
19905.533
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic survey can indian economy grow 8 percent for next 5 years

Economic survey can indian economy grow 8 percent for next 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X