இன்று Economic Survey தாக்கல்..! என்ன சொல்லப் போகிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன் Economic survey தாக்கல் செய்வது வழக்கம். அப்படி இந்த பட்ஜெட்டுக்கும் தாக்கல் செய்யப் போகிறார்கள்.

 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், இந்தியாவின் முதல் முழு நேர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது எப்படி தன் வாழ்நாளின் முதல் பட்ஜெட்டோ... அப்படி இந்திய Economic Survey-யை தாக்கல் செய்வது நம் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்களுக்கும் இது முதல் முறை அனுபவம். இதை தன் ட்விட்டர் பக்கத்திலேயே மிகப் பெருமையாக பகிர்ந்திருக்கிறார்.

இன்று Economic Survey தாக்கல்..! என்ன சொல்லப் போகிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..!

மோடி இந்தியப் பொருளாதாரத்தை வரும் 2024-க்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (ஐந்து லட்சம் கோடி டாலர் ) மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாற்ற வேண்டும், உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தின் உயரத்தை ஏற்ற வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சர்வதேச பொருளாதார சூழல்கள் சரியாக இருக்கிறதா..? என்ன மாதிரியான சவால்களை நாம் எதிர் கொள்ளப் போகிறோம், சவால்களுக்கு என்ன தீர்வுகள் சரியாக இருக்கும், இந்த இலக்கை அடைய இருக்கு சாத்திய வழிகள்... என ஒரு முழு திட்டத்தை முன் வைப்பார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பொதுவாக Economic survey-ல் மேக்ரோ பொருளாதாரம் (Macro Economy) தொடர்பாகவும், துறை சார் தொழிற்சாலைகள் பற்றியும் ஒரு அத்தியாயமே இருக்கும். அதில் நம் முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் பார்வை எப்படி இருக்கிறது. எப்படி நம்பிக்கை கொடுக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்க்கப் போகிறோம்.

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இது நாள் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்திய பொருளாதாரம் தொடர்பான தகவல்கள் கட்டு கட்டாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

 

எப்போதுமே இந்தியாவின் Economic survey இந்திய விவசாயம் மற்றும் தொழிற்துறை உற்பத்தி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பணப் புழக்கம், விலைவாசிப் பிரச்னைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அந்நிய செலாவணி என பல முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic survey will be tabled today by cea Krishnamurthy Subramanian

Economic survey will be tabled today by cea Krishnamurthy Subramanian
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X