பட்ஜெட் 2019: உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான லாபத்தை விவசாயிகள் பெறும் வகையில், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்களுக்கான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைத்தோ அல்லது தள்ளுபடி செய்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உணவுக் கிடங்கு அமைப்புகளின் சார்பில் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

உணவுப்பொருட்களின் உற்பத்தி அபரிமிதமாக உள்ள காலங்களில் அவற்றை சேமித்து வைத்து, தேவைப்படும் காலங்களில் அவற்றை விநியோகிப்பதால் தான் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. எனவே இதை கருத்தில் கொண்டு எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புவதாக கிடங்க அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

பட்ஜெட் 2019: உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா?

இந்தியாவின் முதுகெலும்பே விவசாய உற்பத்திதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்னும் ஜிடிபி (GDP) வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதும் விவசாய உற்பத்தியினால் தான். இதை மறந்து, விவசாயிகளின் நலனைக் காப்பதற்கு பதிலாக, விவசாயிகளுக்கு விருப்பம் இல்லாவிட்டால், வேறு கூலித் தொழிலுக்கோ அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தோ பிழைத்து கொள்ளுங்கள் என்று விவசாயிகளை உதாசீனப் படுத்தியதால் தான் அவர்களும் கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உதாசீனப் படுத்தினர்.

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் முதல் நான்கு ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் நலனுக்காகவும் எந்தவிதமான உருப்படியான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

ஆட்சியின் இறுதிக்காலத்தில், விவசாயிகளின் குறைந்த பட்ச வருவாயை உறுதி செய்யும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் பிஎம்-கிஷான் (PM-KISSAN) திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த கையோடு, விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டத்தையும், வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்தது.

பட்ஜெட் 2019: உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியேற்ற கையோடு, வரி ஆலோசகர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் துறையினர், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பட்ஜெட் ஆலோசனைகளை கேட்டறிந்தார். அவர்களும் தங்களின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் அளித்திருந்தனர். தற்போது பட்ஜெட் தயாரிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.

 

இந்நிலையில், விவசாய உற்பத்தி மற்றும் பெருக்கத்திற்கு பக்க பலமாக உள்ள உணவு கிடங்கு அமைப்பினரும், தங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை அளிக்கவேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்ட போது, பெரும்பாலான பெரும்பாலான பொருட்கள் மற்றம் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகித வரி வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இதனால், பெரும்பாலான சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. அவற்றுள் விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளும் அடங்கும்.

சேமிப்புக் கிடங்குகளுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், இவற்றை நடத்தும் அமைப்புகளுக்கான வருமானமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரியை விவசாய விளைபொருட்களின் மீது திணிக்கப்படுவதால் விளைபொருட்களின் விலையும் அதிகரித்து விலை வாசியும் அதிகரிக்கிறது. எனவே உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித வரியை நீக்கவேண்டும் என்றும் உணவு கிடங்கு அமைப்பினர் நிதியமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கிவிட்டால், விவசாய விளைபொருட்களின் விலை குறைவதோடு விவசாயிகளுக்கும் அதிக லாபம் கிடைக்கும். எனவே கிடங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கவேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிடங்கு அமைப்பினரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா, இது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறுமா இல்லையா என்பது வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் தெரிந்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: GST waiver needs for Agri Warehousing

The Food Warehouse Organizations requesting to the Finance Minister to make a budget announcement by reducing or discounting the 18 per cent GST tax on food warehouses so that farmers can make profit on food products.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X