வேலையில்லா திண்டாட்டம் கொடூரமா இருக்கு! 130 பேரோட மாச சம்பளத்த ஒரு கை பைக்கு செலவு பண்ணிருக்கீங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் டாலருக்கு நிகராக பெரிய அளவில் மதிப்பிழந்த உலக நாட்டு கரன்ஸிகளில் துருக்கியின் லிராவும் ஒன்று. நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்கிற மன நிலையில் இருக்கும் தலைவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் இருப்பார்கள் போல. அப்படி ஒரு செயலைத் தான் துருக்கி நாட்டு அதிபரின் மனைவி Emine Erdogan செய்திருக்கிறார்.

 

துருக்கி நாட்டின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளது. வேலைவாய்ப்புப் பிரச்னைகள், வறுமை, துருக்கி நாட்டு கரன்ஸி தேய்மானம் என எல்லாமே பலமான அடி தான். ஆனால் துருக்கி நாட்டு அதிபர் Recep Tayyip Erdogan-க்கு இந்த பிரச்னைகள் பெரிதாகத் தெரியவில்லை போல.

வேலையில்லா திண்டாட்டம் கொடூரமா இருக்கு! 130 பேரோட மாச சம்பளத்த ஒரு கை பைக்கு செலவு பண்ணிருக்கீங்க!

துருக்கி தேசத்து மக்கள், விலை வாசியை தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்க, துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan தன் ராஜ வாழ்க்கை மாறாமல் வாழ்ந்து வருகிறார். இவரின் ஆட்சியில் தான் அங்காராவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையைக் கட்டிக் கொண்டார். துருக்கி நாட்டின் கம் ஹிரியட் (Cumhuriyet) பத்திரிகை இந்த அரண்மனையில் 1,150 அறைகள் இருப்பதாகச் சொல்கிறது. துருக்கி நாட்டு அதிபரே மக்களின் விலைவாசி பிரச்னையில் கவனம் செலுத்தாமல் தன் இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் மனைவி, மன்னிக்கவும் துருக்கி அதிபரின் மனைவி Emine Erdogan மட்டும் நல்லது செய்துவிடுவாரா என்ன..?
எந்த நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், மனைவியையும் அரசு செலவில் அழைத்துச் செல்வது அதிபரின் வழக்கமாம். அப்படி சமீபத்தில், ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த அதிபர் Recep Tayyip Erdogan அரசு செலவில் தன் மனைவி Emine Erdogan-ஐயும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

டோக்கியோவில் ஜப்பான் அரசர் வசிக்கும் இம்பிரீயல் அரண்மனைக்கு செல்லும் போது, துருக்கி அதிபரின் மனைவி Emine Erdogan 35 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள கைப் பையைத் தொங்கவிட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான் பற்றிக் கொண்டது

 

இந்த பணத்தில் துருக்கி நாட்டில் 11 பேருக்கு ஒரு வருடம் முழுக்க சம்பளம் வழங்க முடியும். சுமார் 40 பேருக்கு வருடம் முழுக்க உணவளிக்க முடியும் என தங்கள் கோபத்தை பதிவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். இப்படி துருக்கி அதிபர் மனைவியே பொறுப்பில்லாமல் 35 லட்சம் மதிப்புள்ள கைப்பையைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சோஷியல் மீடியாக்களில் இந்தப் புகைப்படம் பரவ நெட்டிசன்கள் அதிபரையும், அவரின் மனைவியையும் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கூடுதல் செய்தி: இப்போது தான் துருக்கி நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

turkey president wife buy 35 lakh worth hand bag despite unemployment is high

டோக்கியோவில் ஜப்பான் அரசர் வசிக்கும் இம்பிரீயல் அரண்மனைக்குத் செல்லும் போது, துருக்கி அதிபரின் மனைவி Emine Erdogan 35 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள கைப் பையைத் தொடங்க விட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அவ்வளவு தான் பற்றிக் கொண்டது. இந்த பணத்தில் துருக்கி நாட்டில் 11 பேருக்கு ஒரு வருடம் முழுக்க சம்பளம் வழங்க முடியுமாம்.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X