200 அரசு பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.. உத்திரபிரதேச மாநில அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்னோ : உத்திரபிரதேச அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுவது, அந்த மாநில அரசுக்கு தொடர்ந்து பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டில் சிக்கித் தவித்து வரும் அந்த மாநிலத்தின் 600க்கும் மேற்பட்டோர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

200 அரசு பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.. உத்திரபிரதேச மாநில அரசு அதிரடி!

ஆமாங்க.. சட்ட விரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கித் தவிக்கும் ஊழியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இதில் மொத்த 600 பேரில் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ளோருக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாகவும், அதோடு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த கட்டாய பணி பெறுபவர்களிலும், லஞ்ச ஊழலில் ஈடுபட்டோரிலும் சில கலெக்டர்களும், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் கூட இடம் பெற்றிருக்கிறார்களாம்.

அது மட்டும் இல்லாமல் மாநில அரசுகள் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரச்சையும் நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் திறம்பட செயல்படாத மற்றும் ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய 50 வயதுக்கும் மேற்பட்ட 50 போலிசாருக்கும் கட்டாய ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளியான அறிக்கையில் எந்தவொரு மாநில அரசும் எடுக்காத கடினமான முடிவை உத்திர பிரதேச மாநில அரசு எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

இது குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது, இவ்வாறு மேற்கொள்ள பட்ட நடவடிக்கையானது, மூலம், கடந்த 2017 - 2018ம் ஆண்டில் இந்த அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டவர்களாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இவ்வாறு பிரச்சனை மற்றும் ஊழலில் மாட்டிக் கொண்டவர்களில் 50 வயதுக்கும் மேற்கொண்டவர்கள் தான் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UP CM Yogi government big step against corruption

UP CM Yogi government big step against corruption
Story first published: Thursday, July 4, 2019, 10:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X