Budget 2019: மாநில அரசுகளுக்கான பங்கு 1.55 லட்சம் கோடியாக ஒதுக்கீடு..! கடந்த ஆண்டை விட 10% அதிகமாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் சிறப்பாக முடிந்தது. தனியார் மயம், அந்நிய நேரடி முதலீடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது என கூடுமான வரை எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சேர்த்து அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் (5 லட்சம் கோடி டாலர்) மதிப்பு கொண்ட பொருளாதாரமாக மாற்ற வழி காட்டி இருக்கிறார்.

 

சரி எதற்கு, எந்த துறைக்கு அதிக செலவழிக்கப் போகிறார்கள், எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு எனப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இருப்பதிலேயே அதிக தொகையை செலவழிக்க இருப்பது வாங்கிய கடனுக்கு திருப்பி செலுத்தப் போகும் வட்டிக்கு தான் என பட்ஜெட் தரவுகள் சொல்கின்றன.

 
Budget 2019: மாநில அரசுகளுக்கான பங்கு 1.55 லட்சம் கோடியாக ஒதுக்கீடு..! கடந்த ஆண்டை விட 10% அதிகமாம்!

மொத்த 27.86 லட்சம் கோடி ரூபாய் பணத்தில் (வருமானம் + கடன்), 6.60 லட்சம் கோடி ரூபாயை வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே செலவழிக்கப் போகிறார்களாம்.

அதற்கு அடுத்த முக்கியத்துவம் பெறுவது ராணுவம் தான். 3.05 லட்சம் கோடி ரூபாயை இதற்குச் செலவழிக்கப் போகிறார்களாம்.
ராணுவத்தைத் தொடர்ந்து உணவு மானியத்துக்கு 1.84 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள். உணவு மானியத்தை தொடர்ந்து ஓய்வூதியத் திட்டங்களுக்கான மானியத்துக்கு 1.74 லட்சம் கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசுக்கு வரும் வருவாயில், மாநில அரசுகளுக்கான பங்கு கடந்த 2017 - 18-ம் ஆண்டில் 1.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. 2018 - 19 நிதி ஆண்டில் 1.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதுவே இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு 1.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறார்கள். இப்படி துறைவாரியாக 2019 - 20 பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என கீழே அட்டவணையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்

துறைகள் பெயர்2017-2018 ஒதுக்கியது2018-2019 மாற்றப்பட்ட ஒதுக்கீடு2019-2020 ஒதுக்கீடு
Development of North East2,5142,6293,000
Planning and Statistics4,5595,4155,814
Union Territories14,21614,13315,098
Tax Administration15,60915,71316,084
External Affairs13,73815,58217,885
Finance17,39218,85220,121
IT and Telecom16,89916,28221,783
Commerce and Industry24,08728,39427,043
Scientific Departments22,11525,09927,431
Subsidy Petroleum24,46024,83337,478
Energy42,15546,15044,638
Urban Development40,06142,96548,032
Social Welfare37,44046,49250,850
Health52,99455,94964,999
Others66,30674,89576,665
Subsidy Fertiliser66,46870,08679,996
Education80,21583,62694,854
GST Compensation Fund56,14651,735101,200
Home Affairs87,54799,034103,927
Rural Development134,973135,109140,762
Agriculture and Allied Activities52,62886,602151,518
Transfer to States107,501141,353155,447
Transport110,399145,399157,437
Pension145,745166,618174,300
Subsidy Food100,282171,298184,220
Defence276,572285,423305,296
Interest528,952587,570660,471
Grand Total2,141,9732,457,2352,786,349
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019: which sector get how much funds in budget

Budget 2019: which sector get how much funds in budget
Story first published: Friday, July 5, 2019, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X