பட்ஜெட் 2019: சிவப்பு ப்ரீஃப்கேசுக்கு டூ சிவப்பு துணிப்பை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழிமொழிக்கு ஏற்ப இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கத்திற்கு மாறாக சிவப்பு நிறத்திலான ப்ரீஃப்கேசுக்கு பதிலாக சிவப்பு நிறத்திலான துணிப்பையில் பட்ஜெட் அறிக்கையை கொண்டுவந்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இந்த மாற்றம் முன்னேற்றத்தை தரவேண்டும் என்பதே சாமானிய மக்கள் முதல் மாத சம்பளதாரர்கள் வரை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

சுமார் 160 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்து புதிய பாணியில் துணிப்பையில் பட்ஜெட்டை கொண்டுவந்துள்ளது, பட்ஜெட்டில் நிச்சயமாக உருப்படியான மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2019: சிவப்பு ப்ரீஃப்கேசுக்கு டூ சிவப்பு துணிப்பை..!

பட்ஜெட் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது நிதியமைச்சர் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்குபோது கையில் பிடித்திருக்கும் சிவப்பு நிற ப்ரீஃப்கேஸ் தான். பட்ஜெட் ஆவணங்களை இநத் ப்ரீஃப்கேஸில் வைத்து கொண்டுவருவது என்பது ஈ அடிச்சான் காப்பியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Budget 2019 : அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க விதிகள் தளர்த்தப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

முதன்முதலில் இங்கிலாந்து பார்லிமெண்டில் நிதித்துறையின் தலைவராக இருந்து வில்லியம் க்ளெண்டோன் இங்கிலாந்தின் பட்ஜெட் ஆவணங்களை சிவப்பு நிற ப்ரீஃப்கேஸில் வைத்து கொண்டுவந்தார். இந்தியா அவர்களிடம் அடிமைப்பட்டு கிடந்ததால், அடிமை இந்தியாவின் நிதிப்பொறுப்பை கவனித்துக்கொண்ட ஜேம்ஸ் வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போதும் அதே பாணியை பின்பற்றினார்.

ஜேம்ஸ் வில்சன் கொண்டுவந்த நடைமுறை இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் முந்தைய மரபை உடைத்து கருப்பு நிற ப்ரீஃப்கேஸில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார்.

பின்னர் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி வழக்கத்திற்கு மாறாக கோதுமை நிறத்திலான ப்ரீஃகேஸில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டுவந்தார். இந்த நடைமுறை கடந்த பிப்ரவரியில் நிதியமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் வரையில் தொடர்ந்தது.

 

இந்நிலையில், முழு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 160 ஆண்டு கால நடைமுறை உடைத்து போட்டுவிட்டு, முதன்முதலாக சிவப்பு நிறத்தால் ஆன துணிப்பையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதன் மூலம் அவர் உணர்த்தவருவது, பட்ஜெட்டிலும் நிச்சயமாக பல அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என்பதுதான். ப்ரீப்கேஸ் சிவப்பு துணிப்பையாக மாறியது போல வரிகளும் எளிமையாக இருக்கவேண்டும் என்பதே சாமானிய மக்கள் முதல் மாத சம்பளதாரர்கள் வரை அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirmala Sitharaman keeps in four fold red cloth

Finance minister Nirmala Sitharaman keeps budget documents in four fold red cloth instead of a briefcase
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X