பட்ஜெட்ல புதுசா என்ன இருக்கு - தேடிப்பார்த்து ஏமாறும் மிஸ்டர் பொதுஜனம்

நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் தைரியமான வரி சீர்திருத்த நடவடிக்கையான பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வட்டத்திற்கள் கொண்டு வருவார் என்று எத

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட்டில் தைரியமான வரி சீர்திருத்த நடவடிக்கையான பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வட்டத்திற்கள் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

புதிய இலக்காக வரும் 2024ஆம் ஆண்டுக்குள், அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் மற்றும், நாடு முழுவதும் ஒரே மின்திட்டம் என சில திட்டங்கள் மட்டுமே புதியவை என்றும் மற்ற அனைத்துமே ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் அறிவித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட்ல புதுசா என்ன இருக்கு - தேடிப்பார்த்து ஏமாறும் மிஸ்டர் பொதுஜனம்

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம் போல

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.


நடப்பு நிதியாண்டுக்கான முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டைப் பற்றி புகுழ்ந்து பேசியபோது, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் பெருமை பேசும் புறநானூற்றுப் பாடலை வாசித்து அது போலவே நம்முடைய ஆட்சியும் மக்களை துன்புறுத்தாமல் ஆட்சி நடத்தும் என்று பேசினார். ஒருவேளை வஞ்சப் புகழ்ச்சியாக இந்தப் பாடலை எடுத்துக்காட்டினார் போல.

இந்தப் பாடலில் மக்களின் மனம் அறிந்து அதற்கேற்ப வரி திரட்டும் முறை அறிந்து வரி வசூல் செய்தால் நாடு செழிக்கும் என்பதை விளக்குவதே. ஆனால், நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பெரும்பாலானவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே உள்ளது என்பதே உண்மை.

ஆரம்பத்தில் இருந்தே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது, 5 பிரிவுகளாக இருக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்களை ஒரே வரி விகிதமாவோ அல்லது இரட்டை வரி விகிதமாகவோ மாற்றி அமைக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் கொண்டுவராமல் முற்றிலும் தவிர்த்துவிட்டார்.

அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், பெட்ரோலியப்பொருட்களை ஜிஎஸ்டி வரி வட்டத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக பெட்ரோல், டீசல் மீது 1 சதவிகிதம் உற்பத்தி வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

வர்ததகப்பற்றாகுறை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் எந்தவிதமான புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இது குறிப்பாக டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் துறையினருக்கு பெருத்த ஏமாற்றமே.

விவசாயத்தைப் பொறுத்த வரையில், 10 ஆயிரம் வேளாண் உற்பத்தி அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர விவசயா வளர்ச்சிக்கு புதிய அறிவுப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

சேமிப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு எந்தவிதமான புது திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அதே போல் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்கான எந்தவிதமான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் கையை தட்டும் அதே நேரத்தில் திருவாளர் பொது ஜனங்களும் மத்திய தர வர்க்கத்தினரும் இந்த பட்ஜெட்டில் புதிதாக ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து ஏமாந்துதான் போயிருக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019 : Old wine Old bottle General Public disappoints

Those who are expecting that the GST tax loopholes will bring bold tax reform in the full budget filed by Finance Minister Nirmala Sitharaman for the current year 2019-20 are disappointed.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X